ராஜ்ய சபா எம்.பி. தேர்தல் : இன்று முதல் வேட்புமனு தாக்கல்!!

டெல்லி : தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட இன்று முதல் மே 31-ஆம் தேதி வரை தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி இடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். மாநிலங்களவை தேர்தல் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் நடைபெறும் . ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் , 34 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்.  சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் திமுகவுக்கு 4 , எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு 2 இடங்கள்  கிடைக்கும்.

ஞானவாபி மசூதி வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது, வாரணாசி மாவட்ட நீதிமன்றம்

டெல்லி : ஞானவாபி மசூதி வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது, வாரணாசி மாவட்ட நீதிமன்றம். ஆணையரின் ஆய்வறிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது குறித்து இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

மே-24: பெட்ரோல் விலை ரூ.102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பஞ்சாப்பில் ஸ்லீப்பர் செல்கள் மூலம் தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பு சதி: அதிர்ச்சித் தகவல் வெளியீடு

சண்டிகர்: பஞ்சாப்பில் காலிஸ்தான் அமைப்பினர் மற்றும் ஸ்லீப்பர் செல்கள் மூலம் ரயில் தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. பஞ்சாப் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை இலக்காக கொண்டு ரயில் தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்திய உளவுத்துறை வெளியிட்ட தகவலில், ‘பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, பஞ்சாப்பில் ரயில் தண்டவாளங்களை தகர்க்க பெரிய அளவில் சதி திட்டம் தீட்டியுள்ளது. பஞ்சாப் … Read more

தமிழகம், கர்நாடகா, கேரளாவிலிருந்து பக்தர்கள் வருகை ஏழுமலையானை தரிசிக்க 7 மணி நேரம் காத்திப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தமிழகம், கர்நாடகா, கேரளாவிலிருந்து குவிந்த பக்தர்கள் 7 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தமிழகம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. கொரோனா தொற்று குறைந்துள்ளதால் இலவச தரிசனத்தில் எவ்வித டிக்கெட்டுகளும் இன்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்காக திருமலையில் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,301,331 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.01 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,301,331 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 527,985,770 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 498,248,364 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,030 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகாவில் பரபரப்பு அணைக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர்

சிக்கப்பள்ளபுரா: அணைக்கட்டின் சுவற்றில் ஏற முயன்ற வாலிபர் கால் தவறி விழுந்த பதைபதைக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளபுரா மாவட்டம், சீனிவாசபுரா அருகே உள்ள நீர்தேக்கத்துக்கு கவுரிபிதனூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் தன் நண்பர்களுடன் வந்திருந்தார். அப்போது நிரம்பி வழியும் நீர்தேக்க சுவற்றின் மீது ஏறியுள்ளார். இதனை கண்ட அவரின் நண்பர்களும் உற்சாகமூட்டி செல்போனில் வீடியோ எடுத்தனர். 20 அடிக்கும் மேல் சென்ற நிலையில் வாலிபர் நிலை தடுமாறியதால் கால் தவறி கீழே சறுக்கி … Read more

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் கணவர் குற்றவாளி: தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் வரதட்சணை கொடுமையால் ஆயுர்வேத பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த வழக்கில் கணவன் குற்றவாளி என்று கொல்லம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே நிலமேல் பகுதியை சேர்ந்தவர் திரிவிக்ரமன் நாயர். அவரது மகள் விஸ்மயா (24). அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆயுர்வேத மருத்துவம் இறுதியாண்டு படித்தார். இந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கும், கொல்லம் அருகே போருவழி பகுதியை … Read more

சமூக ஒற்றுமையை வலியுறுத்த தலித் சாமியாரின் எச்சில் உணவு சாப்பிட்ட எம்எல்ஏ: வீடியோ வைரல்

பெங்களூரு:  தலித் சாமியாரின் வாயிலிருந்து எடுத்து எச்சில் உணவை சாப்பிட்டடு கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமதுகான் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்திய வீடியோ பதிவுகள் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளன.பெங்களூரு சாம்ராஜ்பேட்டை, பாதராயனபுராவில் உள்ள ஆல் ஆஜர் பவுண்டேஷன் சார்பில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சாலை பெயர் சூட்டு விழா மற்றும் ஈத்  விழா கொண்டாடப்பட்டது. இதில் தலித் வகுப்பை சேர்ந்த நாராயணசுவாமி, சாம்ராஜ்பேட்டை ெதாகுதி எம்எல்ஏ ஜமீர் அகமதுகான் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஏழைகளுக்கு … Read more

சீனர்களுக்கு விசா பெற்ற விவகாரம் கைதான ஆடிட்டருக்கு சிபிஐ காவல் நீட்டிப்பு: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வாங்கி தருவதற்கு ₹50 லட்சம் லஞ்சமாக பெற்ற விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு மேலும் மூன்று நாட்கள் சிபிஐ காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2010- 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது ஒன்றிய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், பஞ்சாப் மாநிலம் மான்ஸா பகுதியில் மின் திட்ட பணிகளுக்காக 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாக … Read more