கோட்டூர் அருகே உக்கடை கமலாபுரம் பகுதியில் விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு

திருவாரூர்: கோட்டூர் அருகே உக்கடை கமலாபுரம் பகுதியில் விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்ததுள்ளது. விவசாயி அருள்ராஜா சுப்பிரமணியன் நிலத்தில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறி வருகிறது.இதனால் அந்த விவசாய நிலத்தில் இருந்த பயிர்கள் நாசமாகியுள்ளது.

வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனத்தால் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் மே 26 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு அறிவித்துள்ளது.

முதியவரை அடித்தே கொன்ற கொடூரம்.. வெறுப்புணர்வை பாஜக தூபம் போட்டு வளர்ப்பதாக காங். புகார்: அரசியல் வேண்டாம், உரிய நடவடிக்கை நிச்சயம்: ம.பி. அரசு

போபால்: மத்தியப்பிரதேசத்தில் பல ஆண்டுகளாக தொடரும் மத வெறுப்பூட்டும் பிரச்சாரத்தின் கொடூர முகம் வெளிப்பட்டுள்ளது. முதியவரை உன்பெயர் முகமதுவா என்று கேட்டு பாரதிய ஜனதா நிர்வாகி அடித்து கொள்ளும் வீடியோ நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உன்பெயர் முகமதுவா? ஆதார் அட்டையை காட்டு என்று கேள்வி கேட்டபடியே முதியவரை சரமாரியாக அடித்து உதைக்கும் கொடூரம் மத்தியப்பிரதேச மாநிலம் நீமச் நகரில் நடந்தேறியுள்ளது. 65 வயதான அந்த முதியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் சரிவர பதில் சொல்ல முடியாமல் திணற … Read more

திறந்தவெளியில் அடுக்கி வைத்த 1.70 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை வெளிமாவட்டங்களுக்கு எடுத்து செல்ல ஏற்பாடு: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

சென்னை: திறந்தவெளியில் அடுக்கி வைத்த 1.70 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை வெளிமாவட்டங்களுக்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். வெளிமாவட்டங்களுக்கு எடுத்து செல்ல 4 ரயில்வே வேகன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 இடங்களில் நெல் அரவை ஆலைகள் அமையவுள்ள நிலையில் நாகைக்கு முன்னுரிமை தரப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

ஓராண்டு ஆட்சி நிறைவு கருத்து கணிப்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டில் 85% மக்கள் திருப்தி: எடப்பாடி செயல்பாடு சரியில்லை- 35% பேர் கருத்து

புதுடெல்லி: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு முடிந்துள்ள நிலையில், அவருடைய செயல்பாடு குறித்து 84.57 சதவீதம் மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். தமிழகம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய 5 மாநிலங்களில் கடந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக அமோக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இந்நிலையில், இந்த மாநிலங்களில் ஆட்சி அமைக்கப்பட்டு ஓராண்டு முடிந்துள்ள நிலையில், இம்மாநில முதல்வர்களின் செயல்பாடு, 2024 மக்களவை தேர்தலில் பிரதமராக … Read more

எருமை அபிவிருத்தி மையம் கட்டப்படும் இடத்தில் கொட்டும் மழையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

உதகை: எருமை அபிவிருத்தி மையம் கட்டப்படும் இடத்தில் கொட்டும் மழையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தோடர் இன மக்களின் வீடுகளுக்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கைதி எண்: 1,37,683, 8 மணி நேரம் வேலை, ரூ.30 சம்பளம் சிறையில் சித்து… ஒரு நாள்

புதுடெல்லி: கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சித்துவின் கைதி எண், அறை எண் வெளியாகி உள்ளது. அவர் வெள்ளை நிறை ஆடையில் ஒருநாள் எப்படி போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து மீது, கடந்த 1987ம் சாலையில் நடந்த சண்டையில் ஒருவரை அடித்து கொன்ற வழக்கில், ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த 20ம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து, … Read more

ஜப்பானில் இபராக்கி மாகாணத்தில் அந்நாட்டு நேரப்படி பகல் 12.24க்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம், ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தகவல்

ஜப்பான்: ஜப்பானில் இபராக்கி மாகாணத்தில் அந்நாட்டு நேரப்படி பகல் 12.24க்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 30 கி.மீ. காலத்தில் மாயம் கொண்டிடுந்தா நீலநடுக்கத்தின் டிருந்த ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் இபராக்கி மற்றும் ஃபுகுஷிமா மாகாணங்களில் உணரப்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.  

அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு; 7.11 லட்சம் பேர் தவிப்பு

கவுகாத்தி: அசாம் வெள்ளத்தில் சிக்கி சுமார் 7.11 லட்சம் பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிப்பு அடைந்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சாசர், கரிம்கஞ்ச், நாகோன், திமா கசாவோ உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடுமையான மழை கொட்டி வருகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மலைப்பாங்கான … Read more

சமையல் எரிவாயுக்கான மானியத்தை ஒன்றிய அரசு அனைவருக்கும் வழங்க வேண்டும்: பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

சென்னை: சமையல் எரிவாயுக்கான மானியத்தை ஒன்றிய அரசு அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பெட்ரோல், டீசல், மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் ஒன்றிய அரசு குறைத்து போல தமிழ்நாடு அரசும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.