நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த குவாரி உரிமையாளர் செல்வராஜ் கைது

மங்களூரு: நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த குவாரி உரிமையாளர் செல்வராஜ் மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஐதராபத்தில் என்கவுன்ட்டர் சம்பவம் போலி என்கவுன்ட்டர் என உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்குழு அறிக்கை

ஐதராபத்: ஐதராபத் என்கவுன்ட்டர் சம்பவம் போலி என்கவுன்ட்டர் என உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. என்கவுண்டர் செய்த 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணை குழு அறிக்கையில் கூறியுள்ளது.

ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றமே விசாரிக்கும்.: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றமே விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, ஆய்வு விவரங்களை கசிய விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 6-வது நபரை மீட்க பாறைகளில் வெடிமருந்து வைத்து தகர்ப்பு

நெல்லை : நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 6-வது நபரை மீட்க பாறைகளில் வெடிமருந்து வைத்து தகர்க்கப்பட்டது. அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிக்கு நிவாரணம் தரமுடியாது: நீதிபதிகள் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய மேல்முறையீட்டு மனு, மேலும் அதுவரை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு ஆகிய அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், இவ்வழக்கு இன்று காலை உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், நீதிபதி முன்னிலையில் ஒரு … Read more

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் கடந்த நிதியாண்டில் ரூ.125 கோடி வருவாய் ஈட்டியுள்ளது: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் கடந்த நிதியாண்டில் ரூ.125 கோடி வருவாய் ஈட்டியுள்ளது  என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பின் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டியளித்துள்ளார்.

புதுமுக நடிகை பலாத்கார வழக்கு; நடிகர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட் ரத்து: துபாயில் இருந்து வேறு நாட்டுக்கு தப்பி ஓட்டம்?

திருவனந்தபுரம்: புதுமுக நடிகை பலாத்கார வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மலையாள நடிகர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் துபாயில் இருந்து வேறு நாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மலையாள நடிகரும், தயாரிப்பாளருமானவர் விஜய் பாபு. படங்களில் நடிப்பதற்கு கூடுதல் வாய்ப்பு தருவதாக கூறி ஒரு புதுமுக மலையாள நடிகையை ஓட்டல் உள்பட பல்வேறு இடங்களுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் இவர் மீது கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். … Read more

சென்னையில் மே 21-ம் தேதி காவல் ஆணையர்கள், மண்டல ஐ.ஜி. களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் ஆய்வுக்கூட்டம்: டிஜிபி அறிவிப்பு

சென்னை: மே 21-ம் தேதி காவல் ஆணையர்கள், மண்டல ஐ.ஜி. களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரவுகளை ஒழிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், தற்போதைய  நிலவரம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கபட உள்ளது என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடைபெற்ற கொலைகள் தொடர்பாக காவல்துறை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் விபத்துகளை தடுக்க, சாலை பாதுகாப்பு தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

சந்திராப்பூர் அருகே டீசல் லாரியுடன் மரம் ஏற்றி சென்ற லாரி நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் உடல் கருகி உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் அருகே  மரக் கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி மீது டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் நேருக்கு நேர் மோதியதில்  தீ விபத்து ஏற்பட்டு ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர் என்று சந்திராபூரின் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி சுதிர் நந்தன்வார் கூறினார்.

குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தில் உள்ள தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தில் உள்ள தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.