நஷ்டத்தில் இயங்கி வருவதால் அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் வழங்க இயலவில்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னை: போக்குவரத்துக் கழகம் ரூ.48,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதால் அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் வழங்க இயலவில்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார். அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ. செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பிய நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில் அளித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 64 புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு

டெல்லி: இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 64 புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளது என மக்களவையில் மத்திய வனத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 329 புலிகள் உயிரிழந்து உள்ளது எனவும் கூறியுள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம்

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பங்குனி திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அணை பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ள புதிய வழக்குகளில் தமிழ்நாடு அரசு நோட்டீஸ் அனுப்ப முடியாது. மேலும் புதிய வழக்குகளில் தமிழ்நாடு அரசின் கருத்தை தெரிவிக்க அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தனுஷ்கோடி அருகே 6 இலங்கை அகதிகளிடம் விசாரணை

ராமநாதபுரம்: தனுஷ்கோடி அருகே மூன்றாம் தீடை பகுதியில் நின்று கொண்டிருந்த இலங்கை அகதிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த 3 சிறுவர் உள்பட 6 பேரிடம் கியூ பிரிவு, மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் தொடர்ந்து குறையும் தினசரி கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 1,581 பேருக்கு தொற்று உறுதி; 33 பேர் உயிரிழப்பு..!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.1 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4.30 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 1,581 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,10,971-ஆக உயர்ந்தது.* புதிதாக 33 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

சென்னை மெரினா காமராஜர் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 8 பேருக்கும் ஏப்ரல் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

சென்னை: சென்னை மெரினா காமராஜர் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 8 பேருக்கும் ஏப்ரல் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்துல், சாதிக், ஆசிப், ரஹ்மத்துல்லா, முகேஷ், ஹரிஹரன், ரோமன் ஆகிய 6 பேர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2 சிறார்கள் சென்னை கெல்லீஸ் அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் சேலம், திருச்சி, தேனி மாவட்டங்களில் இரவில் கனமழை

திருச்சி: தமிழ்நாட்டில் சேலம், திருச்சி, தேனி மாவட்டங்களில் இரவில் கனமழை மழை பெய்தது. அந்தமான் தீவுகளுக்கு அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில் நேற்று இரவு பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ராணுவத்தில் சேருவதே ஒரே லட்சியம் தினமும் இரவில் பணி முடித்து 10 கி.மீ. தூரம் ஓடும் இளைஞர்: இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தார்

டேராடூன்: உத்தரகாண்டில் இளைஞர் ஒருவர் ராணுவத்தில் சேரும் தனது லட்சியத்திற்காக, தினமும் இரவு வேலை முடிந்து 10.கி.மீ தூரத்திற்கு ஓடியபடி தனது வீட்டிற்கு செல்லும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டிவிட்டரில் அவரது வீடியோ வெளியாகி இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளார். உத்தரகாண்டில் அல்மோரா பகுதியை சேர்ந்தவர் பிரதீப் மேக்ரா(19). நேற்று முன்தினம் வரை யாரென்றே தெரியாத பிரதீப் மேக்ரா, சினிமா தயாரிப்பாளர் வினோத் காப்ரி சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ மூலமாக ஒரே நாளில் … Read more

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

சென்னை: சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக ரூ.917-ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.967-க்கு விற்பனையாகிறது.