தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களை சேர்ந்த 29 பழங்கால சிலைகள் மீட்பு: பிரதமர் மோடி ஆய்வு

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட  சிலைகள் உள்ளிட்ட 29 பழங்கால பொருட்களை ஒன்றிய அரசு மீட்டு டெல்லி கொண்டு வந்துள்ளது. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட  பழங்கால சிலைகளை கண்டுபிடித்து அவற்றை மீட்பதற்கு தொல்லியல் ஆராய்ச்சி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், தொல்லியல் துறை தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஆஸ்திரேலியாவில் இருந்து 29 பழங்கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 1976ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை மொத்தம் 13 பழங்கால பொருட்கள் மீட்கப்பட்டன. 2014ம் ஆண்டு முதல் … Read more

மார்ச்-22: பெட்ரோல் விலை ரூ. 102.16, டீசல் விலை ரூ.92.19

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.16 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.19 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

நீண்ட இழுபறிக்குப் பின் உத்தரகாண்ட், கோவா பாஜ முதல்வர்கள் தேர்வு

டேராடூன்: நீண்ட இழுபறிக்குப் பின் உத்தராண்ட் மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமியையும், கோவா முதல்வராக பிரமோத் சாவந்த்தையும் பாஜ எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். மணிப்பூரில் பிரேன் சிங் புதிய முதல்வராக பதவியேற்றார். உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜ மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதில், உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக பதவியேற்க இருப்பதாக … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,104,042 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.04 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,104,042 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 471,909,915 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 408,150,474 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 61,710 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிலக்கரி ஊழல் வழக்கு மம்தாவின் மருமகனிடம் 8 மணி நேரம் விசாரணை

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த நிலக்கரி ஊழல் விவகாரத்தில் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் மருமகனும், எம்பி.யுமான அபிஷேக் பானர்ஜி, பல நூறு கோடி ரூபாயை சட்ட விரோதமாக பெற்று உள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இது தொடர்பாக அவர் மீது பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அபிஷேக் பானர்ஜிக்கும், … Read more

ஆம் ஆத்மி சார்பில் மனுதாக்கல் மாநிலங்களவை தேர்தல் ஹர்பஜன் சிங் போட்டி

புதுடெல்லி: மாநிலங்களவையில் 13 எம்பிக்களின் பதவிக்காலம் வருகின்ற ஏப்ரல் மாதம் முடிவடைகின்றது. பஞ்சாப் 5 எம்பிக்களின் பதவிகாலம் ஏப்ரல் 9ம் தேதியுடன் முடிவடைகின்றது, கேரளா 3, அசாம் 2, இமாச்சலப்பிரதேசம், நாகாலாந்து மற்றும் திரிபுராவில் காலியாக உள்ள தலா ஒரு எம்பி பதவி காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இதனைமுன்னிட்டு வருகின்ற 31ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள ஆம் … Read more

நாடாளுமன்ற துளிகள்

* சுங்கச்சாவடிகளில் கட்டண கொள்ளைமக்களவையில் 2022-23ம் ஆண்டுக்கான சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கேரளாவை சேர்ந்த சிபிஐ (எம்) எம்பி ஏ.எம்.ஆரிப் பேசுகையில், ‘‘சுங்கச்சாவடி என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக மக்களை கொள்ளையடித்து வருகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தனியார் நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கட்டுமான செலவை மீட்டெடுத்த பிறகு, சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதமாகக் குறைக்கப்படும். ஆனால், ஒவ்வொரு முறையும் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. … Read more

உக்ரைன் போரால் விலை உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை? நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

புதுடெல்லி: ரஷ்யா-உக்ரைன் போரால் சர்வதேச அளவில் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்த விலை உயர்வை தடுக்க ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை … Read more

வெளிநாடுகளில் கொரோனா அதிகரிப்பு அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி: ஒன்றிய அரசு பரிசீலனை

புதுடெல்லி: இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது. நாட்டில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு மட்டும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு கடந்த 16ம் தேதி முதல் 60 வயது மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வதற்கு தகுதியானர்கள் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டு 9 மாதங்கள் முதல் 39 வாரங்கள் … Read more

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் இந்தியாவில் கல்வி தொடர்வது குறித்து அரசு விரைவில் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் தகவல்

புதுடெல்லி: ‘உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றத்தில்  ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் அங்குள்ள இந்திய மாணவர்களை பயணிகள் விமானம், விமானப்படை மூலம் ஒன்றிய அரசு மீட்டது.இதற்கிடையே, உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் … Read more