உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீன் உடலுக்கு அஞ்சலி: முதல்வர் பசவராஜ் பங்கேற்பு

பெங்களூரு: உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் பலியான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் நேற்று பெங்களூரு கொண்டுவரப்பட்டது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இந்த போரின் போது ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில், உணவு வாங்கி வர சென்ற கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டம், ரானிபென்னூர் தாலுகா, செலகெரே கிராமத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா பலியாயானார். ஒன்றிய அரசு மேற்கொண்ட முயற்சியால் அவரது உடல் உக்ரைனிலிருந்து கர்நாடகா கொண்டு … Read more

சென்னையில் 20 பெண்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்தது போலீஸ்..!!

சென்னை: சென்னையில் 20 பெண்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். மசித் சைத் என்கிற இளைஞரை கைது செய்து சென்னை வேப்பேரி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் மூலம் 20 பெண்களிடம் பழகி ஏமாற்றி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக மசித் சைத் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநில முதல்வராக 2ம் முறையாக பிரேன் சிங் பதவியேற்பு: ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!!

இம்பால்:மணிப்பூர் மாநில முதல்வராக இரண்டாம் முறையாக பதவியேற்றார் பிரேன் சிங். நடந்த முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில், பஞ்சாபை தவிர உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் 32 தொகுதிகளை பாஜ கைப்பற்றி அறுதி பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, புதிய அரசு அமைக்கும் பணிகளை பாஜ தொடங்கியது. முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக தலைநகர் இம்பாலில் நேற்று சட்டமன்ற கட்சி கூட்டம் … Read more

காலியாக உள்ள பதவிகளை நிரப்ப மறைமுகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை..!!

சென்னை: காலியாக உள்ள பதவிகளை நிரப்ப மறைமுகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார். காலியாக உள்ள  சேர்மன், துணை சேர்மன், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளை நிரப்ப வரும் 26ல் மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது. மறைமுகத் தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்களுடன் மாநில தேர்தல் ஆணையர் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு பத்ம பூஷண் விருது வழங்கினார் குடியரசு தலைவர்

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு குடியரசு தலைவர் பத்ம பூஷண் விருது வழங்கினார். டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு குடியரசு தலைவர் பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்தார். மறைந்த இந்திய ராணுவ தலைமை பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. பிபின் ராவத் குடும்பத்தினர் பத்ம விபூஷண் விருதை பெற்றுக் கொண்டனர்.   

சாலை பணிகளுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்: திருமாவளவன்

சென்னை: சாலை பணிகளுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என திருமாவளவன் மக்களவையில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அமைக்கப்பட இருந்த பல்வேறு சாலை பணிகள் கைவிடப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய பல்கலை.களில் பொது நுழைவுத்தேர்வு முடிவுகளை கொண்டு இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை: யுசிஜி தகவல்

டெல்லி: மத்திய பல்கலை.களில் பொது நுழைவுத்தேர்வு முடிவுகளை கொண்டு இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என யுசிஜி தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. 12ம் வகுப்பு மதிப்பெண், வெயிட்டேஜ் முறை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது உணவு  தெரிவித்துள்ளது.

கடலூர் பண்ருட்டி சாலையில் வாய்க்கால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பாய்ந்த கார்

கடலூர்: கடலூர் பண்ருட்டி சாலையில் கோண்டூர் அடுத்த வடிகால் வாய்க்கால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டிச்சென்ற செம்மண்டலம் பகுதியை சேர்ந்த முஷாரப் உயிர் தப்பினார்.

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு கட்டாயம்: யுஜிசி அறிவிப்பு

டெல்லி: அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு மூலமே 2022-23ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இளநிலை மாணவர் சேர்க்கைக்கு 12-ஆம் வகுப்பு மதிப்பெண் வெயிட்டேஜ் முறையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு முடிவுகளை கொண்டு இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் … Read more

ரஷ்யாவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இரண்டுக்கும் தடை: ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு

ரஷ்யா: ரஷ்யாவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இரண்டுக்கும் தடை விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பயங்கரவாத இயக்கங்கள் எனக் குறிப்பிட்டு ரஷ்ய நீதிமன்றம் அவற்றுக்கு தடை விதித்துள்ளது.