கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 495 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 495 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிக்கப்பட்டு 5,433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக அரசு சார்பில் நடக்கும் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி தொடங்கியது

சென்னை: தமிழக அரசு சார்பில் நடக்கும் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி தொடங்கியது. சென்னை தீவுத்திடலில், தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளின் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக அரசு சார்பில் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி தொடங்கியது.

சீன விமான விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்: பிரதமர் மோடி ட்விட்

டெல்லி: சீன விமான விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம்,  குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு 132 பேருடன் புறப்பட்டு சென்றது. இந்த  விமானம் குவாங்ஸி அருகே மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.  இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.  விமானம் விழுந்து … Read more

விருதுநகரில் இளம்பெண்ணை காதலிப்பதுபோல் நடித்து பலாத்காரம் செய்த 8 பேர் கைது

விருதுநகர்: விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணை காதலிப்பதுபோல் நடித்து பலாத்காரம் செய்த பால் பண்ணை அதிபர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பால் பண்ணை அதிபர் ஹரிஹரன் இளம்பெண்ணுடன் இருப்பதை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். விடியோவை காட்டி இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாருடனும் காதல் இல்லை: மஞ்சிமா மோகன் விளக்கம்

யாருடனும் காதல் இல்லை: மஞ்சிமா மோகன் விளக்கம் 3/21/2022 5:15:33 PM மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நடிகை மஞ்சிமா மோகனும், தமிழ் நடிகர் கவுதம் கார்த்திக்கும் தேவராட்டம் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போது முதல் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள வெளியானது. இதனை அவர்கள் இருவரும் மறுக்காமல் இருந்தார்கள். சமீபத்தில் மஞ்சிமா  மோகனுக்கு கவுதம் கார்த்திக் காதல் வழிய வழிய வாழ்த்தும் தெரிவத்திருந்தார். இந்த நிலையில் தான் யாரையும் காதலிக்கவில்லை என்று மஞ்சிமா மோகன் … Read more

கோவா மாநிலத்தின் முதல்வராக பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் மீண்டும் தேர்வு

கோவா: கோவா மாநிலத்தின் முதல்வராக பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 20 இடங்களில் வெற்றி பெற்றது.

நீட் தேர்வால் இந்தியாவில் பல மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவு நசுக்கப்பட்டுள்ளது: முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு

பெங்களூரு: நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தால்தான் கர்நாடக மாணவர் நவீன் ஆத்மா சாந்தியடையும் என முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். உக்ரைன் போரில் கர்நாடகாவை சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் உயிரிழந்த நிலையில் குமாரசாமி டிவிட்டரில் பதிவிட்டார். இந்தியாவில் நீட் தேர்வால் மருத்துவ படிப்பு கனவு நசுக்கப்பட்டு வெளிநாட்டில் சென்று படித்த போது நவீன் பலியாகிவிட்டார், நீட் தேர்வால் இந்திய நாட்டில் பல மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நசுக்கப்பட்டுள்ளதாக குமாரசாமி குற்றம்சாட்டினார்.  

ஆதி -நிக்கி கல்ராணி விரைவில் திருமணம்?

ஆதி -நிக்கி கல்ராணி விரைவில் திருமணம்? 3/21/2022 5:25:45 PM தெலுங்கில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நிக்கி கல்ராணி. டார்லிங்  படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர்  ’யாகாவாராயினும் நாகாக்க’ ’மொட்ட சிவா கெட்ட சிவா’ ’ஹர ஹர மகாதேவி’ ‘மரகத நாணயம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மரகதநாணயம் படத்தில் ஆதியுடன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் இருவரும் ஒன்றாக விமான பயணங்கள் மேற்கொண்டனர். ஆதி வீட்டில் நடந்த விழாக்களில் … Read more

உத்தராகண்ட் மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் தேர்வு

டேராடூன்: உத்தராகண்ட் மாநில முதல்வராக பாஜகவின் புஷ்கர் சிங் தாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். டேராடூனில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டார். உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 47 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியுற்ற நிலையிலும் புஷ்கர் சிங் தாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.      

சிவசங்கர் பாபா மீதான வழக்குகளில் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிவசங்கர் பாபா மீதான வழக்குகளில் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. 2012-ல் ஏப்ரலில் நடந்ததாக 2021-ல் புகார் பெற்று பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என தெரிவித்தது. சிவசங்கர் பாபா, ஆசிரியை தீபா, பக்தை கர்ணாம்பிகை, பாரதி, நீரஜ் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.