பெயரை பச்சை குத்திய ரசிகருக்கு நல்ல மனைவி அமைய வாழ்த்திய சன்னி லியோன்

பெயரை பச்சை குத்திய ரசிகருக்கு நல்ல மனைவி அமைய வாழ்த்திய சன்னி லியோன் 3/21/2022 5:03:31 PM கனடா நாட்டை சேர்ந்த நீலப்பட நடிகையான சன்னி லியோன், இப்போது பாலிவுட்டின் முன்னணி நடிகை, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சன்னிலியோனை படப்பிடிப்பின் இடையே ரசிகர் ஒருவர் சந்தித்து அவரது பெயரை கையில் பச்சை குத்தி இருந்ததை காண்பித்தார். இதனை பார்த்து ஆச்சரியமடைந்த சன்னிலியோன், தனது நண்பரை அழைத்து … Read more

கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதச் சென்ற 40 மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஹிஜாப் அணிந்து சென்ற 40 மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. ஹிஜாபை அகற்றிய பிறகே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என ஆசிரியர்கள் மாணவிகளிடம் தெரிவித்தனர். சென்ட் ரேய்மண்ட் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதச் சென்ற 40 மாணவிகள் வெளியே நிற்க வைக்கப்பட்டனர்.  

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் கூறவில்லை: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் கூறவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்திருக்கிறார். தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சராகும் வரை நான் பேசியது அனைத்தும் சரியானதே. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர், சிகிச்சை அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எனக்கு தெரியாது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.  அப்பல்லோ மருத்துவமனையில் சிசிடிவிகளை அகற்ற உத்தரவிடப்பட்டதா? என ஓ.பி.எஸ்.யிடம் ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி எழுப்பியிருந்தது.

மணிப்பூர் மாநில முதல்வராக இரண்டாம் முறையாக பதவியேற்றார் பிரேன் சிங்

இம்பால்: மணிப்பூர் மாநில முதலமைச்சராக இரண்டாம் முறையாக பிரேன் சிங் பதவியேற்றார். இம்பாலில் பிரேன் சிங்கிற்கு மாநில ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.38,344-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து, ரூ.38,344-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து ஒரு கிராம் ரூ.4,793-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.300 உயர்ந்து ரூ.72,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 2,214 கி.மீ. தூரத்திலான நெடுஞ்சாலை பணிகளை துரிதப்படுத்துக!: ஒன்றிய அரசுக்கு திமுக எம்.பி. வேலுச்சாமி கோரிக்கை..!!

டெல்லி: தமிழகத்தில் 2,214 கி.மீ. தூரத்திலான நெடுஞ்சாலை பணிகளை ஒன்றிய அரசு போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும் என்று திமுக எம்.பி. வேலுச்சாமி கோரிக்கை விடுத்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்.பி. வேலுச்சாமி வேண்டுகோள் விடுத்தார்.

தஞ்சை அருகே ஓய்வுபெற்ற காவலரை தாக்கி ரூ.15 லட்சம் வழிப்பறி: போலீஸ் விசாரணை

தஞ்சை: தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் ஓய்வுபெற்ற காவலர் லட்சுமணனை தாக்கி ரூ.15 லட்சம் வழிப்பறி செய்தனர். பைக்கில் சென்ற லட்சுமணனை தாக்கி ரூ.15 லட்சம், பைக்கை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் பற்றி போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் 5 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

சித்தூர் :  சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் 5 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீகாணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இந்த கோயிலுக்கு மாவட்டம் மட்டுமின்றி தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.அவ்வாறு, பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப கோயில் உண்டியலில் பணம், நகை மற்றும் … Read more

முறைகேடு செய்தவர்களுக்கு நகை கடனை தள்ளுபடி செய்ய சொல்கிறீர்களா?: எடப்பாடி பழனிசாமிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி..!!

சென்னை: 5 சவரனுக்கு கீழ் அடகு வைத்து தகுதியானவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யவில்லை என ஆதாரம் கொடுங்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆதாரம் கொடுத்தால் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார். முறைகேடு செய்தவர்களுக்கு நகை கடனை தள்ளுபடி செய்ய சொல்கிறீர்களா? என்றும் பழனிசாமிக்கு முதல்வர் கேள்வி எழுப்பினார்.

மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ஹர்பஜன் சிங்… ஆம் ஆத்மி கட்சி சார்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்!!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காலியாக உள்ள 5 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் காலியாக உள்ள 1 இடத்திற்கான தேர்தல் வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பானை கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும். இந்த நிலையில் ஆம் … Read more