ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள் என்ற எந்த விவரமும் தெரியாது: ஓ.பி.எஸ். கைவிரிப்பு

சென்னை: ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள் என்ற எந்த விவரமும் தெரியாது என்று ஓ.பன்னீர்செல்வம் கைவிரித்துள்ளார். மெட்ரோ ரயில் திறப்பு விழாவுக்கு பின்னர் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது. சொந்த ஊரில் இருந்தபோது நள்ளிரவில் உதவியாளர் மூலம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தெரிந்துகொண்டேன் என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருக்கிறார்.

பணம் வைத்து சூதாடும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும்: மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு

டெல்லி: பணம் வைத்து சூதாடும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்ற மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தினார். அண்மைக்காலமாக ஏராளமான ஆன்லைன் விளையாட்டு இணையதளங்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றது.  ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பலரும் அடிமையாகும் போக்கும் அதிகரித்து வருகிறது என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தார்.   

'டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக காவிரி நீர் உள்ளது': மேகதாது அணை விவகாரம் தொடர்பான தனித்தீர்மானத்தின் மீது எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: காவிரி நீரானது டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் மூலம் காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்ப்பு காணப்பட்டது. காவிரியில் எந்தவொரு திட்டத்திற்கும், கீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். மேகதாது அணை விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்துக்கு ஆதரவு தருவதாக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

சர்க்கரை உற்பத்தியை குறைத்து, எத்தனால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு சர்க்கரை ஆலைகள் மாற வேண்டியது அவசியம்: ஒன்றிய அரசு

டெல்லி : சர்க்கரை உற்பத்தியிலிருந்து, எத்தனால் உற்பத்திக்கு சர்க்கரை ஆலைகள் மாற வேண்டியது அவசியம் என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.மும்பையில் நடந்த சர்க்கரை மற்றும் எத்தனால் இந்தியா மாநாட்டில், உள்நாடு மற்றும் உலகளாவிய சர்க்கரை  தொழிலில் உள்ள சவால்கள், இந்தியாவில் சர்க்கரை மற்றும் எத்தனால் துறையை புதுமையாகவும், நிலைத்தன்மை உடையதாகவும் மாற்றுவதற்கான உத்திகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:’நாட்டின் தேவைக்கு ஏற்ப சர்க்கரை … Read more

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்..!!

சென்னை: மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்  தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து வருகிறார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அனுமதி தரவோ கூடாது என துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.

சரக்கு வைப்பகத்தில் திடீர் புகை: டெல்லியில் இருந்து கத்தார் புறப்பட்ட விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கம்..!!

கராச்சி: டெல்லியில் இருந்து கத்தார் புறப்பட்ட விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சரக்கு வைப்பகத்தில் புகை ஏற்பட்டதை அடுத்து பாகிஸ்தானின் கராச்சி நகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கடல் நீர் உட்புகுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்!: நீர்வளத்துறை திட்டங்கள் குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!!

சென்னை: கடல் நீர் உட்புகுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்திருக்கிறார். நீர்வளத்துறை திட்டங்கள் குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்து வருகிறார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு விவாதம் நடைபெறும்.

மணிப்பூர் மாநில முதல்வராக என்.பிரேன் சிங் இன்று மாலை பதவி ஏற்பு

இம்பால்: மணிப்பூர் மாநில முதலமைச்சராக என்.பிரேன் சிங் இன்று மாலை 3 மணிக்கு பதவி ஏற்கவுள்ளார். 2ஆவது முறையாக முதல்வராக உள்ள பிரேன் சிங்கிற்கு ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இம்பாலில் நேற்று நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக பிரேன் சிங் தேர்வானார்.

சென்னை மெரினாவில் பைக் ரேஸில் ஈடுபட்ட 5 பேர் கைது

சென்னை: சென்னை மெரினா காமராஜர் சாலையில் மார்ச் 18 இரவு இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து பைக் ரேஸில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொருக்குப்பேட்டையை சேர்ந்த ரஹ்மதுல்லா, கல்லூரி மாணவர் முகமது சாதிக், ஆஷிக் மற்றும் இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தராகண்ட் முதலமைச்சர் பதவியை பிடிக்க போட்டா போட்டி: கோவா முதலமைச்சர் யார்?.. திணறும் பாஜக..!

டொராடூன்: தேர்தல் முடிவுகள் வெளியாகி 12 நாட்கள் ஆகியும் இழுபறி நீடிக்கும் கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களை பாஜக இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே யோகி ஆதித்யநாத், மீண்டும் முதலமைச்சர் என உறுதியாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மற்ற மாநிலங்களில் முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது. … Read more