உக்ரைன் விவகாரம்: ஜோ பைடன் போலந்து செல்கிறார்
வாஷிங்டன்: உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க மார்ச் 25-ல் போலந்து நாட்டுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செல்கிறார். போலந்து அதிபர் ஆண்ட்ரே டுடா உடன் வார்சா பகுதியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
வாஷிங்டன்: உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க மார்ச் 25-ல் போலந்து நாட்டுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செல்கிறார். போலந்து அதிபர் ஆண்ட்ரே டுடா உடன் வார்சா பகுதியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
டெல்லி: டிசம்பர் 2021-ல் எடுத்த கணக்கெடுப்பின் படி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக ஏடிஎம்கள் (28,540) உள்ளதா ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் 2வது இடத்தில் மகாராஷ்டிரா (27,945), 3-ம் இடத்தில் உத்தரப்பிரதேசம்(23,460) உள்ளது.
ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 88.47 அடியாக உள்ளது. அணையின் நீர் வரத்து 712 கன அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 20.60 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து 700 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
புதுடெல்லி: பெகாசஸ் விவகாரம், உக்ரைன் போருக்கு இடையில் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் அடுத்த மாதம் 2ம் தேதி இந்தியா வருகிறார். இந்தியா- இஸ்ரேல் இடையே பல துறைகளில் ஒத்துழைப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பென்னட் அடுத்த மாதம் 2ம் தேதி இந்தியா வர உள்ளார். 4 நாள் பயணத்தின் போது பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்பட பல துறைகளில் ஒப்பந்தங்கள் … Read more
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
புதுடெல்லி: துணை ராணுவ படைகளில் ஒன்றான ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்), நாட்டின் முக்கிய தொழில் நிறுவனங்கள், விண்வெளி ஆய்வு மையம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ளது. பாதுகாப்பு இல்லாத இதர பணிகளில் ஈடுபடுத்துவதற்காக 2 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்து கொள்ளும்படி. தொழில் பாதுகாப்பு படைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்தாண்டு அனுமதி அளித்தது. இந்த பணிகளில் சேர்க்கப்படும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை … Read more
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60. 97 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,100,483 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 470,786,611 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 406,915,900 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 62,245 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் சரத் யாதவின் லோக்தந்திரிக் ஜனதா தள கட்சி நேற்று இணைந்தது. பாஜ.வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று சரத் யாதவ் வேண்டுகோள் விடுத்தார். மூத்த சோசலிஸ்ட் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சரத் யாதவ், லோக்தளம், ஜனதா, ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். ஐக்கிய தனதாதள கட்சியின் மூத்த தலைவராக இருந்த சரத் யாதவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் 2017ம் … Read more
சண்டிகர்: ‘மக்களின் பணத்தை திருடினால் பொறுக்க மாட்டேன். அமைச்சர்கள் வேலை செய்யவில்லை என்றால், பதவியை விட்டு நீக்கப்படுவார்கள்,’ என்று பஞ்சாப்பில் கெஜ்ரிவால் எச்சரித்து உள்ளார். பஞ்சாப்பில் நடந்து முடிந்து சட்டப்பேரவை தேர்தலில் 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. முதல்வராக பக்வந்த் மான் பதவியேற்றார். தொடர்ந்து, 10 அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்நிலையில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி … Read more
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒன்றிய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் நேற்று தரிசனம் செய்தார். பின்னர், கோயிலுக்கு வெளியே அவர் அளித்த பேட்டியில், ‘‘நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அசாதிகா அமித் மகோற்சவம் என்ற பெயரில் ஓராண்டுக்கு, ஏப்ரல் முதல் அடுத்தாண்டு ஏப்ரல் 20ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. 75வது சுதந்திர தினம் நிறைவு பெறக்கூடிய நாளில் நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றும் நிகழ்ச்சியை நடத்துவது … Read more