மொத்த பயனாளர்களுக்கான டீசல் விலை ரூ.25 அதிகரிப்பு

புதுடெல்லி: மொத்த பயனாளர்களுக்கான டீசல் விலை ₹25 அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. ஆனால், 5 மாநில தேர்தல் காரணமாக, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 100 டாலரை தாண்டியும், பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நீடிக்கிறது. … Read more

கேரளாவில் மலப்புரம் அருகே கால்பந்து மைதானத்தில் கேலரி சரிந்து விபத்து: 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் படுகாயம்

திருவனந்தபுரம் : கேரளாவில் கால்பந்து போட்டியின்போது கேலரி  சரிந்து விழுந்து 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இதில் 15 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கேரள  மாநிலம், மலப்புரம் அருகே உள்ள வண்டூர் பூங்கோடு மைதானத்தில், செவன்ஸ்  என்று அழைக்கப்படும் 7 வீரர்கள் மட்டும் கலந்து கொள்ளும் கால்பந்து போட்டி  நடைபெற்றது. போட்டியை  காண 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் மைதானத்தில் தற்காலிக கேலரி அமைக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோழிக்கோடு,  நெல்லிக்குத்து ஆகிய அணிகளுக்கு … Read more

முகக்கவசம் அணியும் விதியை தளர்த்தலாம் அடுத்து வரும் அலைகள் இந்தியாவை பாதிக்காது: நிபுணர்கள் கருத்து

புதுடெல்லி: `இனி அடுத்தடுத்து வரும் கொரோனா அலைகள் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே, முகக் கவசம் அணிவதற்கான விதிகளை தளர்த்தலாம்,’ என்று எய்ம்ஸ் நோய் தொற்றுயியல் மருத்துவர் தெரிவித்தார். மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் இதுவரை 46 கோடியே 98 லட்சத்து 22 ஆயிரத்து 676 பேர் பாதித்துள்ளனர். மேலும், 60 லட்சத்து 75 ஆயிரத்து 249 பேர் உயிரிழந்துள்ளனர். சமீப நாட்களாக தென் கொரியா, சீனா … Read more

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக நீதிபதிகளுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு: முதல்வர் பொம்மை தகவல்

பெங்களூரு: கர்நாடகா பள்ளிகளில் சீருடை தவிர வேறு, ஹிஜாப் உள்ளிட்ட எந்த உடைகளையும் அணியக் கூடாது என கர்நாடகா உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக, பெங்களூரு விதான சவுதா போலீஸ் நிலையத்தில் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பெங்களூரு ஆர்டி நகரில் முதல்வர் பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:கர்நாடகா உயர் நீதிமன்ற … Read more

அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்பட மொத்தமாக வாங்குவோருக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிப்பு

டெல்லி: அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்பட மொத்தமாக வாங்குவோருக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 உயர்த்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சுட்டிக்காட்டி எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை உயர்த்தியுளள்ளன. சில்லறை விலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாத நிலையில் மொத்தமாக வாங்குவோருக்கு மட்டும் விலை அதிகரித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.5.13 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல்களுக்கு ஏற்ப உண்டியலில் காணிக்கையாகவும், தலை முடியை காணிக்கையாகவும் மற்றும் இதர நன்கொடைகளாகவும் வழங்குகின்றனர். அதன்படி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் 2 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை உண்டியல் காணிக்கை கிடைப்பது வழக்கம். ஒரு சில நாட்களில் 4 கோடி ரூபாய் வரை கிடைப்பது உண்டு. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சனிக்கிழமையான நேற்று ஒரேநாளில் 80 ஆயிரத்து 429 பக்தர்கள் … Read more

நடிகர் சங்க தேர்தல்: தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் வெற்றி

சென்னை: நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் வெற்றி பெற்று 2-வது முறையாக நடிகர் சங்க தலைவராக தேர்வாகியுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாக்கியராஜை விட 647 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

25 ஆயிரம் பேருக்கு அரசு வேலை: பஞ்சாப் முதல்வரின் முதல் அதிரடி

சண்டிகர்: அமைச்சரவையின் முதல் கூட்டத்திற்கு பின்னர், பஞ்சாப் மாநிலத்தில் உடனடியாக 25 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில், ஆம்ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் முதல்வராக பகவந்த் மான் தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மேலும் நேற்று 10 எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். சண்டிகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அவர்களுக்கு பதவிப் பிரமாணமும், … Read more

அடுத்த 35 ஆண்டுகளில் இந்தியா உலகத்தின் முதன்மையான நாடாக இருக்க வேண்டும்: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி

சென்னை: அடுத்த 35 ஆண்டுகளில் இந்தியா உலகத்தின் முதன்மையான நாடாக இருக்க வேண்டும் என்பது தான் இலக்கு என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். இளைஞர்கள் தான் அகற்கான பாதையை உருவாக்கி வருகிறார்கள். தற்போது, 10,000 தொழில் முனைவோர் முயற்சிகளுடன் உலகிலேயே ஸ்டார்ட் அப்களில் இந்தியா சிறந்த நாடாக உருவாகி வருகிறது என ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.

மணிப்பூர் மாநில முதலமைச்சராக பைரேன் சிங் தேர்வு

இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக பைரேன் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனை சந்தித்து பைரேன் சிங் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மேலிட பார்வையாளர்களாக ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் , கிரெண் ரிஜ்ஜு ஆகியோர் பங்கேற்றனர்.