நடிகர் சங்கத் தேர்தல்: நடிகர் விஷால், நடிகர் கார்த்தி வெற்றி

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் கார்த்திஆகியோர் வெற்றி பெற்றுள்ளார். மேலும் நடிகர் விஷால் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

மணிப்பூர் மாநில முதலமைச்சராக பைரேன் சிங் தேர்வு: இம்பாலில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு.!

இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக பைரேன் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனை சந்தித்து பைரேன் சிங் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.  இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களை பாஜக கைப்பற்றியது. பஞ்சாப்பில் காங்கிரஸ், பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி அபாரமாக வெற்றிப்பெற்று முதல் முறையாக … Read more

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கோவை நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், திருச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, குமரி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யா வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற 4 மாநிலங்களில் உட்கட்சி பூசல் நிலவுவதால் ஆட்சியமைப்பதில் தாமதம்: டெல்லி முதல்வர்

டெல்லி: சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற 4 மாநிலங்களில் உட்கட்சி பூசல் நிலவுவதால் ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். பஞ்சாப்பில் நேரத்தை வீணடிக்காமல் ஆம் ஆத்மீ ஆட்சி அமைத்துள்ளது என டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் தகராறில் ஈடுபட்டவர்களை தடுக்க சென்றவரின் இருசக்கர வாகனம் எரிப்பு

தருமபுரி: தருமபுரியில் தகராறில் ஈடுபட்டவர்களை தடுக்க சென்றவரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொப்பூர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பீகாரில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் பலி

பீகார் மாநிலத்தில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் உயிரிழந்தனர். மாதேபுரா, பாகல்பூர், பான்கா மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்துள்ளனர். கோபால் கஞ்ச் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 பேர் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர்.

கோவை சிறுவாணி அணையில் இருந்து விநியோகிக்கப்படும் நீரின் அளவு 60 மில்லியன் லிட்டராக குறைப்பு

கோவை: கோவை சிறுவாணி அணையில் இருந்து விநியோகிக்கப்படும் நீரின் அளவு 60 மில்லியன் லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. தினமும் 90 மில்லியன் லிட்டர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் 60மில்லியன் லிட்டர் ஆக குறைத்து விநியோகிக்கப்படுகிறது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனே செயல்பட வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதற்கு ஒன்றிய அரசு உடனடியாக செயல்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி இருக்கிறார்.  கடந்த பிப்ரவரியில் சில்லறை பணவீக்கம் எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.07 சதவீதம் உயர்ந்தது. மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் 13.11 சதவீதமாக உயர்ந்தது. கச்சா எண்ணெய் மற்றும் உணவு பொருட்கள் அல்லாதவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று அரசு வெளியிட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி … Read more

சென்னையில் இருந்து அந்தமானுக்கு செல்ல இருந்த 5 விமானங்கள் ரத்து

சென்னை: சென்னையில் இருந்து அந்தமானுக்கு செல்ல இருந்த 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலவும் மோசமான வானிலை காரணமாகவும், பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததாலும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சோனியா குடும்பம் மட்டுமே தேர்தல் தோல்விக்கு பொறுப்பாக முடியாது: காங். மூத்த தலைவர் கருத்து

கலபுர்கி: ‘தேர்தல் தோல்விக்கு சோனியா காந்தியின் குடும்பம் மட்டுமே பொறுப்பு என்பதை ஏற்க முடியாது’ என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கூறி உள்ளார். சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரசில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதற்கிடையே அதிருப்தி தலைவர்கள் கொண்ட கட்சியின் ஜி-23 குழுவில் முக்கியமானவரான குலாம் நபி ஆசாத் நேற்று முன்தினம் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.  அதன் பின்னர் அவர்,‘‘ சோனியா … Read more