அனைவருக்கும் உயர்கல்வி வழங்க வேண்டும் என்பதே இந்த அரசின் லட்சியம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அனைவருக்கும் உயர்கல்வி வழங்க வேண்டும் என்பதே இந்த அரசின் லட்சியம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கையில் பட்டத்தத்துடனும் எதிர்காலம் குறித்த ஏக்கத்ததுடனும் இருப்பவர்களின் ஏக்கங்கள் தீரும், வேலைவாய்ப்பை உருவாக்குவது, அதற்கான தகுதியான நபர்களை உருவாக்குவது என அரசு செயல்பட்டுவருகிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக ஐகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு: கர்நாடக முதல்வர் உத்தரவு

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக ஐகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க கர்நாடக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தந்த புகாரை முழுமையாக விசாரிக்க கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வலுறுத்தியுள்ளார்.

சென்னை அருகே திறந்தவெளி மைதானத்தில் மதுவிருந்தில் ஈடுபட்ட 500 பேரிடம் காவல் துறையினர் விசாரணை

சென்னை: சென்னை அடுத்த பனையூரில் உள்ள ரிசார்ட்டில் மதுவிருந்தில் ஈடுபட்ட 500 பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அனுமதி பெறாமல் திறந்தவெளி மைதானத்தில் மதுவிருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். விங்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் மது விருந்து, இசை நிகழ்ச்சி நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொரோனா தினசரி பாதிப்பு புதிய தொற்று 2075 ஆக சரிவு

புதுடெல்லி:  நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா புதிய தொற்று பாதிப்பு 2075 ஆக பதிவாகி உள்ளது. ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கொரோனா புதிய தொற்று பாதிப்பானது 2075ஆக பதிவாகி உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 4 கோடியே 30 லட்சத்து 6 ஆயிரத்து 80 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்தோர்களில் கேரளாவில் 59 பேர் உட்பட மொத்தம் … Read more

சென்னை வண்டலூரில் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை வண்டலூரில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒரே நாளில் 73 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் தனது கட்சியை இன்று முறைப்படி இணைக்கிறார் சரத் யாதவ்..!

டெல்லி: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்து லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியை தொடங்கிய சரத் யாதவ் தனது கட்சியை லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைக்க உள்ளார். டெல்லியில் உள்ள சரத் யாதவ் இல்லத்தில் வைத்து ராஷ்ட்ரீய ஜனதா கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற உள்ளது. இதன் மூலம் 25 ஆண்டுகளுக்கு பின் லாலு பிரசாத், மற்றும் சரத்யாதவ் … Read more

சென்னையில் இருந்து பழனி வந்த ரயில், இன்ஜின் கோளாறு காரணமாக இடையில் நிறுத்தம்

சென்னை: சென்னையில் இருந்து பழனி வந்த ரயில், இன்ஜின் கோளாறு காரணமாக கோம்பைப்பட்டி கிராமம் அருகே நின்றுள்ளது. ரயில் இன்ஜின் கோளாறை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் தொடர்ந்து குறையும் தினசரி கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 1,761 பேருக்கு தொற்று உறுதி; 127 பேர் உயிரிழப்பு.!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.1 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4.30 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,075 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,07,841-ஆக உயர்ந்தது.* புதிதாக 127 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு பின் எண்ணப்படுகின்றன.தலைவர் உள்பட 29 பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்தியாவில் 3.20 லட்சம் கோடியை முதலீடு செய்கிறது ஜப்பான்

டெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 3.20 லட்சம் கோடியை ஜப்பான் முதலீடு செய்கிறது. இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்து.