சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அதிகாரியின் கார் ஓட்டுநர் சடலமாக மீட்பு

சென்னை: சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அதிகாரியின் கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கபாலீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் தூக்கு மாட்டிய நிலையில் சடலம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையரின் கார் ஓட்டுநராக பணியாற்றியவர் ஜெயச்சந்திரன்.

லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் தனது கட்சியை இன்று முறைப்படி இணைக்கிறார் சரத் யாதவ்

பாட்னா: லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் தனது கட்சியை இன்று முறைப்படி சரத் யாதவ் இணைக்கிறார். ஜனதா தளத்தில் இருந்து பிரிந்த அனைத்து தலைவர்களையும் ஒன்றிணைக்க உள்ளதாகவும் சூளுரை.

மார்ச்-20: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பஞ்சாப் ஆம் ஆத்மி அரசில் 10 அமைச்சர்கள் பதவியேற்பு: 25,000 அரசு பணியிடங்களை நிரப்ப முடிவு

சண்டிகர்:  பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி பெண் எம்எல்ஏ உட்பட 10 பேர் நேற்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்டனர். பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து, இம்மாநிலத்தின் புதிய முதல்வராக பக்வந்த் மான் கடந்த புதனன்று பதவியேற்றுக்கொண்டனார். சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் பூர்விக கிராமமான ஷாகித் பகத்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள கட்கர்கலனில் நடந்த … Read more

இன்னும் சில ஆண்டுகளில் காஷ்மீரில் சிஆர்பிஎப் படை பாதுகாப்பு தேவைப்படாது: அமித்ஷா நம்பிக்கை

ஜம்மு: ‘காஷ்மீரில் இன்னும் சில ஆண்டுகளில் சிஆர்பிஎப்பின் பாதுாகாப்பு அவசியமின்றி போகலாம்’ என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 85வது நிறுவன நாள் விழா ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்றது. பொதுவாக இந்த விழா தலைநகர் டெல்லியில் நடத்தப்படும் நிலையில் முதல் முறையாக இம்முறை ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சிஆர்பிஎப் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு … Read more

கல்வி காவிமயமாக்குவதில் என்ன தவறு இருக்கிறது?: வெங்கையா நாயுடு கேள்வி

ஹரித்துவார்: ‘கல்வியை காவி மயமாக்குவதில் என்ன தவறு’ என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசி உள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில், தெற்காசிய அமைதி மற்றும் நல்லிணக்க அமைப்பைத் தொடங்கி வைத்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று பேசியதாவது: நீண்ட கால காலனி ஆதிக்கத்தால், தாழ்வான  மனநிலை நம்மிடம் உருவாயிற்று. அன்னிய ஆட்சி மூலம்  இந்தியாவின் புகழ்பெற்ற  பழமையான கல்வி முறை சிதைக்கப்பட்டது. இது நாட்டின் வளர்ச்சிக்கான வேகத்தை குறைத்தது. கல்வியில்  அன்னிய மொழி கட்டாயமாக … Read more

தெலுங்கு பஞ்சாங்கம் வெளியீடு

திருமலை: திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சுபகிருது வருட தெலுங்கில் அச்சிடப்பட்ட பஞ்சாங்கத்தை தலைமை செயல் அதிகாரி ஜவகர் வெளியிட்டார். அவர் பேசுகையில், ‘‘தேவஸ்தானத்தின் தர்மபிரசாரத்தின் ஒரு பகுதியாக  இந்தாண்டு பக்தர்களுக்கு சுபகிருது  வருட பஞ்சாங்கம் தயார் செய்யப்பட்டுள்ளது. ₹75 மதிப்புள்ள பஞ்சாங்கம் திருமலை மற்றும் திருப்பதியில் பக்தர்களுக்கு கிடைக்கும்.  மார்ச் கடைசி வாரத்தில் இருந்து நாடு முழுவதும் தேவஸ்தான  தகவல் மையங்களிலும் பஞ்சாங்கம் கிடைக்கும்’’ என்றார்.

கர்நாடகாவில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி

பெங்களூரு: கர்நாடகா மாநிலம், துமகூரு மாவட்டம், மதுகிரி தாலுகா, ஒய்.என்.எஸ்.கோட்டையில் இருந்து பாவகடாவுக்கு தனியார் பஸ் ஒன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களை ஏற்றிக் கொண்டு நேற்று காலை 9 மணிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் இடம் கிடைக்காத மாணவர்கள் மற்றும் சில பயணிகள் மேல் கூரை மீது அமர்ந்து பயணம் செய்தனர். திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ் மேல் கூரையில் அமர்ந்திருந்தவர்கள் சாலையோரத்தில் இருந்த முட்செடிகள் மீது விழுந்தனர். … Read more

வரும் 31ம் தேதிக்குள் ஆதார்-பான் இணைக்க தவறினால் அபராதம்

புதுடெல்லி: ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு வருகின்ற 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் ₹10ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதோடு, பான் கார்டு முடக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நிதி மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக  ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த மாதம் 31ம் தேதி ஆதார் எண்ணுடன் … Read more

உபி முதல்வராக வரும் 25ல் யோகி பதவியேற்பு: லக்னோவில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

புதுடெல்லி: வரும் 25ம் தேதி உபி முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்கிறார். இதற்காக லக்ேனாவில் 75 ஆயிரம் பேர் அமரக் கூடிய வகையில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்படுகிறது. உபி உள்ளிட்ட 5 மாநில சட்டபேரவைகளுக்கு கடந்த பிப்ரவரி முதல் மார்ச் 7ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதர  மாநிலங்களான கோவா, மணிப்பூர்,உத்தரகாண்ட், உபி மாநிலங்களில் பாஜ மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துகொண்டது. … Read more