அதிமுகவினர் திடீர் ரகளை : போடி நகராட்சியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!!

தேனி : தேனி மாவட்டம் போடி நகராட்சியில் வாக்கு எண்ணிக்கை 20 நிமிடம் நிறுத்தப்பட்டது.வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், அதிமுகவினர் ரகளையால் திடீரென வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசமாக உள்ளது : மருத்துவமனை நிர்வாகம் தகவல்

ராஞ்சி : லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசமாக உள்ளதாக மருத்துவமனை டாக்டர்கள் குழுவின் தலைவர் வித்யாபதி தெரிவித்துள்ளார். லாலுபிரசாத்தின் ரத்த அழுத்தமும், சர்க்கரை அளவும் ஏற்ற இறக்கமாக உள்ளது என்றும் அவரது சிறுநீரகம் வெறும் 20 சதவீத திறனுடன் இயங்கி வருகிறது என்றும் அவர் கூறினார்.

சென்னையில் 15 மையங்களில் வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடக்கம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் 5,794 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்க உள்ளது.

கால்நடை தீவன 5வது ஊழல் வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு சிறை: சிபிஐ நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ₹60 அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்ட கருவூலங்களில் இருந்து கால்நடை தீவனத்தை கொள்முதல் செய்வதில் ₹950 கோடிக்கு ஊழல் நடந்தது. கடந்த 1996ம் ஆண்டு வெளிவந்த கால்நடை தீவன ஊழல் தொடர்பாக சிபிஐ சார்பில் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது மாநில முதல்வராக இருந்த லாலு … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 5,908,810 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.08 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,908,810 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 426,223,542 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 353,001,410 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 81,663 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகம்: பாக். அழைப்பு

லாகூர்: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய அரசு நீக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவுடனான வர்த்தக தொடர்புக்கு பாகிஸ்தான் தடை விதித்தது. அதன் பின்னர் கடந்த ஆண்டு மார்ச்சில் பாகிஸ்தானின் பொருளாதார ஒருங்கிணைப்பு குழுவானது இந்தியாவிடம் இருந்து சர்க்கரை மற்றும் பருத்தியை இறக்குமதி செய்வதற்கு மட்டும் அனுமதி அளித்தது. எனினும் இந்த முடிவு அந்நாட்டின் நிதியமைச்சகத்தால் உடனடியாக திரும்ப பெறப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வர்த்தக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூர் … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திமுக பிரமுகரை அரைநிர்வாணமாக்கி இழுத்துச் சென்று தாக்கிய வழக்கில் ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் மார்ச் 7 வரை சிறையில் அடைக்க நீதிபதி முரளிகிருஷ்ணனா உத்தரவிட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடைபெறும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயக்குமாரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என அவர் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். … Read more

குடிமக்களின் அடிப்படை கடமை விவகாரம் சட்ட விதிகளை உருவாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள குடிமக்களின் அடிப்படை கடமை தொடர்பான விவகாரத்தில் விரிவான சட்ட விதிமுறைகளை உருவாக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் துர்க்கா தத் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘நாடு முழுவதும் தற்போது அதிக அளவில் சட்டவிரோதமான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை தவறாக கையிலெடுத்து சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் நடத்தி அவர்களின் கோரிக்கைகளை … Read more

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்தது தமிழக அரசு

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை தமிழக அரசு நீட்டித்தது. தொடர் சிகிச்சைக்காக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரம் ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்கீம்பூர் பகுதியில் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது விவசாயிகள் மீது திடீரென மோதிய காரால் 10 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு கடந்த வாரம் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தார் தரப்பில்  உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘விவசாயிகளை … Read more