வாக்கு எண்ணும் மையங்களுக்கு 5 கி.மீ சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: வாக்கு எண்ணும் மையங்களுக்கு 5 கி.மீ சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற காணொளி ஆலோசனைக்கு பிறகு மாநில தேர்தல் ஆணையார் ஆணையிட்டுள்ளார்.

பாஜக – காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க முயற்சி; புதிய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ‘ரேஸில்’ யார்?.. எதிர்கட்சி தலைவர்களின் திடீர் சந்திப்பால் பரபரப்பு

புதுடெல்லி: பாஜக – காங்கிரஸ் அல்லாத கூட்டணியை அமைக்கும் முயற்சியில் சந்திர சேகர ராவ் இறங்கியுள்ள நிலையில், புதிய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ‘ரேஸில்’ உள்ளவர்கள் குறித்தும் எதிர்கட்சி தலைவர்களின் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் நடைபெற்று வரும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் தங்களது அரசியல் நகர்வுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அதன் ஒருபகுதியாக தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் … Read more

வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய போலீஸ் படை பாதுகாப்பு வழங்க கோரி திருத்தங்கல் நகராட்சி அதிமுக செயலாளர் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. முதுகுளத்தூர் பேரூராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு மற்ற தாலுகா அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

10, 12 வகுப்புகளுக்‍கான நேரடி தேர்வினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு: வழக்கை அவசரமாக விசாரிக்குமாறு மாணவர்கள்,பெற்றோர் தரப்பில் கோரிக்கை

டெல்லி: நாடு முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நேரடியாக நடத்துவதற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை அவசரமாக விசாரிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள் நடத்துவதற்கான அறிவிப்பையும், கால அட்டவணையையும் மாநில அரசு வெளியிட்டு வருகிறன்றன. CBSE, ICSE  தேர்வு வாரியங்களும் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளன. இந்தநிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு … Read more

வாக்குப்பதிவின் போது திமுக தொண்டரை தாக்கிய சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு

சென்னை: வாக்குப்பதிவின் போது திமுக தொண்டரை தாக்கிய சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலின் போது வாக்குச்சாவடியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக தொண்டர் மீது ஜெயக்குமார் முன்னிலையில் தாக்குதல் நடந்தது.

மக்களை மகிழ்விக்கும் படங்களில் நடிப்பேன்: சிவகார்த்திகேயன் பிறந்த நாள் செய்தி

மக்களை மகிழ்விக்கும் படங்களில் நடிப்பேன்: சிவகார்த்திகேயன் பிறந்த நாள் செய்தி 2/21/2022 12:10:18 PM சிவகாாத்திகேயன் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். நண்பர் சூரியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாடிய  எனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். மேலும், தங்கள் அன்பைப் பொழிந்த அனைத்து நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கும் நன்றி. … Read more

ஆந்திர மாநில அரசு பாதுகாப்பான கட்டிடம் அமைத்தால் ரிசர்வ் வங்கியில் உள்ள ₹50 ஆயிரம் கோடி மதிப்பு நிஜாமின் நகைகள் ஐதராபாத் கொண்டுவரப்படும்

* பொதுமக்கள் பார்வைக்கு    வைக்க முடிவு*  மத்திய இணை அமைச்சர்  கிஷண் தகவல்திருமலை : ஆந்திர மாநில அரசு பாதுகாப்பான கட்டிடம் அமைத்தால் ரிசர்வ் வங்கியில் உள்ள ₹50 ஆயிரம் கோடி மதிப்பிலான நிஜாமின் நகைகள் ஐதராபாத் கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் கிஷண் தெரிவித்துள்ளார்.பிரிட்டிஷ் படைகள் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி நள்ளிரவோடு இந்திய நாட்டை விட்டு முழுமையாக வெளியேறியது. அந்த நாள் ஆண்டுதோறும் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு … Read more

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்து 57,400 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்து 57,400 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 159 புள்ளிகள் சரிந்து 17,117 புள்ளிகளில் வர்த்தகமாகியது.

பாத்ரூமில் போட்டோ ஷூட் நடித்திய ஆலியா பட்

பாத்ரூமில் போட்டோ ஷூட் நடித்திய ஆலியா பட் 2/21/2022 11:28:46 AM வேகமாக வளர்ந்து வரும் பாலிவுட் நடிகை ஆலியா படம். தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள். 2 ஸ்டேஸ்ட் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து  உத்தா பஞ்சாப், ராஸி, கல்லி பாய் உள்பட பல படங்களில் நடித்தார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஆர்ஆர்ஆர் . அவர் நடித்துள்ள  கங்குபாய் சத்தியவாடி படம் வெளிவர இருக்கிறது. படங்களில் நடிப்போது சமூக வலைத்தளங்களிலும் பிசியா இருப்பவர் ஆலியா … Read more

கடந்த 9 மாதங்களில் ரயில்களில் டிக்‍கெட் இன்றி பயணம் செய்தவர்களிடம் அபராதமாக ரூ.1,017 கோடி வசூல்: ரயில்வே நிர்வாகம் தகவல்

டெல்லி: கடந்த 9 மாதங்களில் ரயில்களில் பயணசீட்டு இன்றி பயணம் செய்த 1 கோடியே 78 லட்சம் பேரிடம் இருந்து  1,017 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்ற சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்தோர் பற்றிய விவரங்களை கேட்டிருந்தார். அதில் 2021- 22ம் நிதியாண்டில் பயணசீட்டு இன்றி ரயிலில் பயணம் செய்தவர்கள் விவரங்களை … Read more