உ.வே.சா பிறந்தநாளில் அவரின் தொண்டை போற்றுகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: தமிழ்த்தாத்தா உ.வே.சா பிறந்தநாளில் அவர்தம் தொண்டைப் போற்றுகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:தமிழ்த் தொன்மையின் அடையாளங்களான சங்க இலக்கியங்கள்; சமணம், பவுத்தக் காப்பியங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பழந்தமிழ் நூல்களின் ஏட்டுச்சுவடிகளை அலைந்து திரிந்து அச்சிலேற்றித் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் நிலைபெற்றிட்ட தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் தொண்டைப் போற்றுகிறேன்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

நிதிஷ் குமார் – பிரசாந்த் கிஷோர் இரவு விருந்தில் ரகசிய சந்திப்பு: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன், பிரசாந்த் கிஷோர் திடீரென சந்தித்து பேசியது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்படும் பிரசாந்த் கிஷோர், கடந்த 2015ம் ஆண்டு நடந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணிக்கு ஆதரவாக பிரசார வியூகங்களை வகுத்து கொடுத்து தேர்தலில் வெற்றி பெற வைத்தார். தேர்தல் முடிந்த பின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்து, கட்சியின் … Read more

மீனவர் சிக்கலுக்கு பேச்சுவார்த்தை அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி டிவிட்டரில் கூறியுள்ளதாவது: வங்கக்கடலில் கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் 6 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். இது தொடர்பாக இலங்கை அரசுடன் இந்திய  அதிகாரிகள் பேச்சு நடத்த வேண்டும். மீனவர் சிக்கலுக்கு தீர்வு காண இரு தரப்பு மீனவர்களிடையிலான பேச்சுக்களை விரைவில் தொடங்குவதென அண்மையில் நடந்த இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இரு  தரப்பு பேச்சுக்களை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க … Read more

மீண்டும் நடிக்க வந்திருப்பதாக சொல்வது முட்டாள்தனம்: மாதுரி தீட்சித் கோபம்

மும்பை: நெட்பிளிக்ஸில் வெளியாகும் தி ஃபேம் கேம் என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளார், மாதுரி தீட்சித். இதுகுறித்து அவர் கூறியதாவது:தி ஃபேம் கேம் வெப்தொடரில் நடிகையாகவே நடிக்கிறேன். அதனால்தான் இந்த வேடம் எனக்கு கஷ்டமாக இல்லை. இத்தொடரில் நடித்திருப்பதால், மாதுரி கம் பேக் என்று மீடியாவினர் கூறுகின்றனர். மீண்டும் நடிக்க வந்த மாதுரி என்றெல்லாம் கட்டுரை வெளியிடுகின்றனர். அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் எங்கும் ஓடிவிடவில்லை, திரும்பவும் வந்திருப்பதற்கு. நான் எனது சினிமா துறையில்தான் இருக்கிறேன். … Read more

வீடு, வீடாக தேடிச்சென்று வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகள் : அதிமுகவினர் இருவர் கைது

திருவள்ளூர்:  திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு அதிமுக வேட்பாளர் சுமித்ரா வெங்கடேசனின் ஆதரவாளர்கள் நேற்று வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகள் வழங்கினர். தகவலறிந்த திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்ம பபி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது, வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகளை வழங்கி வந்த பாரி, ராகுல் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து தங்க மூக்குத்திகளை பறிமுதல் செய்தனர்.

அர்ஜூன் மாமனார் கன்னட நடிகர் ராஜேஷ் மரணம்

பெங்களூரு: கன்னடத்தில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர், ராஜேஷ் (89). இவர், கடந்த சில மாதங்களாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் உடல் ரவீந்திர கலாஷேத்ராவில் பொதுமக்கள்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் மாநில அமைச்சர்கள், திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பிறகு நேற்று … Read more

மதுரை மேலூர் 8வது வார்டில் பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறி பிரச்னை செய்த பாஜக முகவர் கிரிராஜன் கைது

மதுரை: மதுரை மேலூர் 8வது வார்டில் பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறி பிரச்னை செய்த பாஜக முகவர் கிரிராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிஜாப்பை அகற்றக் கூறி பிரச்னை செய்த பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; பஞ்சாப்பில் ஆட்சியை பிடிப்பது யார்?.. உத்தரபிரதேசத்தில் 59 தொகுதிகளில் 3ம் கட்ட தேர்தல்

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் 59 தொகுகளுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. அதே நேரத்தில் பஞ்சாப்பில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு ஆட்சியை பிடிப்பது யார் என்ற போட்டி கடுமையாக நிலவுகிறது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து இந்திய தலைமை  தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்துள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் … Read more

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது: டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். ஓரிரு இடங்களில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உடனடியாக விரைந்து சரிசெய்யப்பட்டது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதால் வன்முறைச் சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

“தனக்கு பிறக்கவில்லை என்று தகராறு” 2 வயது குழந்தையை சீரழித்த தந்தைக்கு ஆயுள் சிறை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இரண்டரை வயதான தனது மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் முட்டடா பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் (34). அவருக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை பிறந்த போது தன்னுடைய குழந்தை இல்லை என்று கூறி மனைவியிடம் அலெக்ஸ் அடிக்கடி தகராறு செய்து வந்து உள்ளார். தன்னுடைய குழந்தை தானா? என்பதை கண்டுபிடிக்க டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் … Read more