டெல்லி, குருகிராம், பெங்களூருவில் உள்ள சீன செல்போன் கம்பெனியில் வருமான வரித்துறை சோதனை

புதுடெல்லி: வரி ஏய்ப்பு தொடர்பாக, டெல்லி, குருகிராம், பெங்களூருவில் உள்ள ஹூவாய் சீன செல்போன் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் சீன செல்போன் நிறுவனமான ஹூவாய், வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில், டெல்லி, குருகிராம் மற்றும் பெங்களூருவில் உள்ள இந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முதல்  அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, இந்திய வணிகங்கள் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 5,866,885 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58.66 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,866,885 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 417,885,540 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 338,396,416 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 84,604 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உக்ரைன் எல்லையில் படைகளை வாபஸ் பெற்றதாக ரஷ்யா சொல்வதை நம்ப முடியாது: அமெரிக்கா, நேட்டோ கருத்து; எந்நேரமும் தாக்குதல் நடக்கும்

புதுடெல்லி: உக்ரைன் எல்லையில் படைகளை வாபஸ் பெற்று வருவதாக ரஷ்யா கூறுவதை நம்ப முடியாது என அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் தெரிவித்துள்ளன. எந்த நேரத்திலும் திடீர் தாக்குதலில் அது ஈடுபடக் கூடும் என கூறியுள்ள அவை, அப்படி நடந்தால் சரியான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளன. இதனால், உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் நீடிக்கிறது.அமெரிக்கா, நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, அந்நாட்டை தாக்குவதற்காக 3 எல்லைகளிலும் சுற்றிவளைத்து 1.50 லட்சம் … Read more

முதல் டி20 போட்டி: இந்திய அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது மேற்கு இந்திய தீவுகள் அணி

கொல்கத்தா: முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு  ரன்களை வெற்றி இலக்காக மேற்கு இந்திய தீவுகள் அணி நிர்ணயம் செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 157 ரன்களை மேற்கு இந்திய தீவுகள் அணி எடுத்தது.  முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.158 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் அறிமுகம் செய்யப்பட்டார்.

பல்வேறு உட்பிரிவுகள் உள்ளதால் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கலாம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

புதுடெல்லி: தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் வந்தன. அப்போது, நீதிபதி நாகேஸ்வர ராவ், ‘இந்த வழக்கை அரசியல் சாசன உயர் அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. அதனால், மனுதாரர்கள் வாதங்களை முன் வைக்கலாம்,’ என தெரித்தார்.இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, குமணன் ஆகியோர், ‘தமிழகத்தில் அமலில் … Read more

முதல் டி20 போட்டி: மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

கொல்கத்தா: முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக மேற்கு இந்திய தீவுகள் அணி நிர்ணயம் செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 157 ரன்களை மேற்கு இந்திய தீவுகள் அணி எடுத்து இருந்தது. பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

நடிகர் ரவி கிஷன் மீது காங்., பெண் நிர்வாகி ஆபாச புகார்

நொய்டா: உத்தரபிரதேச காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர் பங்குரி பதக், பாஜ எம்பியும் நடிகருமான ரவி கிஷன் மீது ஆன்லைனில் துன்புறுத்தல், மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார்.பாலிவுட் நடிகரும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜ எம்பியுமான ரவி கிஷன், இந்தி மற்றும் போஜ்புரி, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அவர் மீது காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான பங்குரி பதக் நொய்டா போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், ‘நொய்டாவில் நடந்த வாக்குப் பதிவுக்கு அடுத்த … Read more

நெட் தேர்வு முடிவு 2 நாளில் வெளியீடு

புதுடெல்லி: கடந்த 2020, 2021ம் ஆண்டு ஜூனில் நடக்க இருந்த யுஜிசி நெட் தேர்வுகள் கொரோனா காரணமாக நடக்கவில்லை. இந்த தேர்வுகள் ஒன்றாக  கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி முதல் 2022 ஜனவரி 5ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 12 லட்சம் பேர் தேர்வு எழுதினர். கடந்த மாதமே தேர்வு முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை  வெளியிடப்படவில்லை. இந்நிலையில், தேசிய தேர்வு முகமை இன்னும் ஒன்று அல்லது … Read more

இசை அமைப்பாளர் பப்பி லஹிரி மரணம்

மும்பை: பாலிவுட் இசை அமைப்பாளர் பப்பி லஹிரி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69.கடந்த ஆண்டு கொரோனா நோயால் பப்பி லஹரி பாதிக்கப்பட்ட நிலையில், மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். பிறகு குணமடைந்த நிலையில் அவர் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மும்பையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது … Read more

சென்னை உயர் நீதிமன்றத்தின் 6 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

டெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்தின் 6 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. நிதுமோலு மாலா, சுந்தர் மோகன், கபாலி குமரேஷ் பாபு, சௌந்தர், அப்துல் கனி அப்துல் ஹமீத், ஜான் சத்யன் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.