சென்னை பிராட்வே பேருந்து நிலையம் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையமாக மாற்றப்படும்!

சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையம் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையமாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்நோக்கு வசதி வளாகம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பல அடுக்கு வாகன நிறுத்தம், வணிக வளாகம் மற்றும் கடை நிலை இணைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளுடன் மேம்படுத்தப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய நபரை கைது செய்து போலீஸ் விசாரணை

ஆந்திரா: ஆந்திராவில் பேருந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய ரகளை செய்த நபரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். கர்னூல் மாவட்டம் பத்திகொண்டா காவல்நிலையம் அருகே ஒருவர் வெறி பிடித்தவர் போல் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தார். அந்த வழியாக சென்ற இரண்டு பேருந்துகளை வழிமறித்த அவர் கையில் வைத்திருந்த இரும்பு ராடால் கண்ணாடியை உடைத்ததோடு கார் கண்ணாடிகளையும் சேதப்படுத்தினார். தொடர்ந்து காவல் நிலையம் சென்று அங்கிருந்த இருக்கைகளையும் அடித்து நொறுக்கியிருக்கிறார். இதனை கண்டா சிலர் அச்சத்தில் … Read more

வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன விவகாரத்தில் 7 பேர் கைது..!!

வேலூர்: வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்ற சொன்னதாக எழுந்த புகாரின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரசித்திபெற்றது வேலூர் கோட்டை ஆகும். இந்த கோட்டைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி வேலூர் கோட்டைக்கு இஸ்லாமிய பெண்கள் சிலர் சுற்றுலா வந்துள்ளனர். அப்பொழுது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் … Read more

வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன விவகாரம்!

வேலூர்: வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் 22-ம் தேதி வேலூர் கோட்டையை சுற்றிப்பார்த்த பெண்ணை வீடியோ பதிவு செய்ததுடன் ஹிஜாப்பை அகற்ற சொன்னதாக புகார் எழுந்துள்ளது.

என்.எல்.சி.யில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் குடிநீர் விநியோகம்: பேரவையில் அமைச்சர் லெட்சுமி நாராயணன் அறிவிப்பு

புதுச்சேரி: என்.எல்.சி.யில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் குடிநீர் விநியோகம் வழங்கப்படும் என்று அம்மாநில பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லெட்சுமி நாராயணன் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் பின் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று அமைச்சர் நமச்சிவாயம், காவலர்களுக்கு விடுமுறை, பெண் காவலர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுமுறை, ராணுவ வீரர்களுக்கு சலுகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அறிவித்திருந்தார். இந்த நிலையில், பேரவையில் பேசியஅமைச்சர் லெட்சுமி நாராயணன், புதுச்சேரி மாநிலத்தில் நிலவக்கூடிய குடிநீர் தட்டுப்பாட்டுக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை … Read more

மழையால் பழைய பாலம் சேதம்: மங்குழி புதிய பாலம் கட்டும் பணி துவங்கியது

கூடலூர்: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு மங்குழி பகுதியில் கடந்த மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பழைய பலத்திற் பதிலாக புதிய பாலம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் பெய்த கனமழையில் இந்த பாலத்தின் ஒரு பக்க தூண் சேதம் அடைந்ததால் பாலம் பலமிழந்து காணப்பட்டது. இதனால் இந்த பாலத்தில் கனராக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த வருடம் மழை காலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பாலம் முழுமையாக … Read more

விருதுநகர் ஆவின் நிர்வாக குழு கலைப்பு

விருதுநகர்: பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் காரணமாக விருதுநகர் ஆவின் நிர்வாக குழு கலைக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாக குழு அமைக்கப்பட்டது. நிர்வாக குழு மூலம் சுமார் 25 பணியிடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டது விசாரணையில் அம்பலமானது.

அறிய வகை நோய்களுக்கான மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து ஒன்றிய அரசு அரசாணை..!!

டெல்லி: அறிய வகை நோய்களுக்கான மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘பெம்ப்ரோலிசுமாப்’ உள்ளிட்ட மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு ஒன்றிய அரசு குறிப்பிட்ட வரியை இறக்குமதி வரியாக வசூலித்து வருகிறது. இதனிடையே அறிய வகை நோய்களுக்கு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு முழுமையாக வரி விலக்கு அளிக்க … Read more

விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.93 லட்சம் மோசடி செய்த பெண் கைது

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி சீட்டு நடத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.93 லட்சம் வரை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் நான்கு பேரை தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் வானுரை அடுத்த பாட்டானுர் பகுதியை சேர்ந்த காத்தலிங்கம் என்பவரின் மனைவி பூங்கொடி மகன் நிர்மல் குமார், மகள் மகாலக்ஷ்மி உறவினர் விக்னேஸ்வரன் ஆகியோர் 25 ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்திவருகின்றனர். அவர்களிடம் புதுச்சேரி மாநிலம் ரெட்டி பாளையத்தை சேர்ந்த இளங்கோவனின் மனைவி … Read more

கலைஞர் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த குளித்தலை தொகுதியில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைக்க கோரிக்கை!

சென்னை: கலைஞர் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த குளித்தலை தொகுதியில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. நங்கவரத்தில் கலைஞருக்கு நினைவுச்சின்னம் அமைக்க அரசு ஆவன செய்யுமா என குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வரலாற்றை வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையில் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கலைஞர் நூற்றாண்டு காணும் இந்த காலகட்டத்தில் முதல்வர் கவனத்துக்கு கொண்டுசென்று முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.