எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு

புதுச்சேரி: புதுச்சேரி,  தேங்காய்திட்டு, வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன்  (32). பட்டதாரியான இவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். புதுவையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கேற்பதற்காக இவர் உள்பட பலர் கடந்த 2 மாதமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் வழக்கம்போல் உப்பளம் இந்திரா காந்தி  விளையாட்டு மைதானத்தில் ஓட்டப் பயிற்சியில் பிரபாகரன் ஈடுபட்டிருந்தார். அப்போது  திடீரென நெஞ்சை பிடித்தபடி அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற வாலிபர்கள் அவரை மீட்டு அரசு  … Read more

கிரிமினல் வழக்கில் உயர் நீதிமன்ற தடை எதிரொலி லட்சத்தீவு எம்பி முகமது பைசல் தகுதி நீக்கம் வாபஸ்: மக்களவை செயலகம் அறிவிப்பு

புதுடெல்லி:  கிரிமினல் வழக்கில் விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததால்,  லட்சத்தீவு எம்பி முகமது பைசல் மீதான தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம்  திரும்ப பெற்றுள்ளது.  தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சத்தீவு நாடாளுமன்ற  உறுப்பினரான முகமது பைசல் கடந்த 2009ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது, அரசியல் விவகாரம் தொடர்பாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிஎம் சயீத்தின் மருமகன் பாடாநாத் சாலிக்கை தாக்கியதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் … Read more

ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் நடக்கும் மலர் கண்காட்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இது குறித்து நீலகிரி கலெக்டர் அம்ரித் கூறியதாவது: இந்த ஆண்டு கோடை விழா மே 6ம் தேதி கோத்தகிரியில் 12வது காய்கறி கண்காட்சியுடன் துவங்குகிறது. 6, 7 ஆகிய 2 நாட்கள் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடத்தப்படும்.  10வது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி கூடலூரில் மே 12ம் தேதி துவங்கி 14ம் தேதி … Read more

கூகுளுக்கு ரூ. 1,337 கோடி அபராதம்: கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி: கூகுள் மீது வர்த்தக ஒழுங்குமுறை ஆணையமான சிசிஐயின் உத்தரவு சரியானது என தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்தது. 30 நாட்களுக்குள் 1,337 கோடி ரூபாய் அபராத தொகையை செலுத்த உத்தரவிட்டுள்ளது. பல்வேறு சந்தைகளில் ஆண்ட்ராய்டு செல்போன்கள் தொடர்பான வர்த்தகத்தில் நேர்மையற்ற வழியில் செயல்பட்டதாக கூகுள் நிறுவனத்துக்கு இந்திய வணிக போட்டி ஆணையம்(சிசிஐ) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது. இந்திய வணிக போட்டி ஆணையம் விதித்த அபராதத்தை … Read more

நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு

திங்கள்சந்தை: நாகர்கோவில் தம்மத்துக்கோணம் பகுதியை சேர்ந்தவர் லாவண்யா. மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆன்லைன் மூலம் இவர் அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது: களியங்காடு அருகே சுரேஷ்குமார் என்பவர், அந்த பகுதியில் நாகர் கோயில் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் தன்னை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், தனக்கு தெய்வ அருள் வந்ததால் அந்த பதவியை விட்டுவிட்டு இந்த கோயிலை நடத்தி வருவதாகவும் கூறினார். எங்கள் குடும்பத்தில் பிரச்னை இருப்பதாகவும், அதை தீர்க்க  தனது கோயிலில் குடி கொண்டுள்ள … Read more

சவாலை சந்திப்பவர்களால்தான் சாதிக்க முடியும்: சிவகார்த்திகேயன் பேச்சு

சென்னை: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளர் என்.எஸ்.பொன்குமார் எழுதி இயக்கியுள்ள படம், ‘1947 ஆகஸ்ட் 16’. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில், ஏப்ரல் 7ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் கவுதம் …

வெளிநாடுகளில் இருந்து தமிழ் நாடு என்ஜி ஓக்களுக்கு 3 ஆண்டில் ரூ. 6804 கோடி நிதி: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி,மார்ச்30: கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ரூ.55,600 கோடியில் தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்கள் அதிக நிதி பெற்றுள்ளன என்று ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த்ராய் கூறியதாவது:  வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் 2010ன் படி, வெளிநாட்டு நிதி பெறும் ஒவ்வொரு அரசு சாரா நிறுவனமும் வரவு செலவு கணக்கை ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் கடந்த 3 ஆண்டுகளில் … Read more

அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆவின் பணி நியமனம் ரத்து எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி

மதுரை: அதிமுக ஆட்சியில் முறைகேடாக நியமிக்கப்பட்டவர்கள் நீக்கத்தை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆவினில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முறைகேடாக மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டன. இதை எதிர்த்து மதுரை, தேனி, திருச்சி மற்றும் விருதுநகர் ஆவினில் பணி நீக்கம் செய்யப்பட்ட 60 பேர் தனித்தனியே ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதி எம்.தண்டபாணி நேற்று விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: பணி நியமன தேர்வு அனுமதி … Read more

விடுதலை படத்துக்கு 11 இடங்களில் ‘மியூட்’

சென்னை: வெற்றிமாறனின் விடுதலை படத்தில் 11 இடங்களில் வசனங்களை மியூட் செய்திருக்கிறது சென்சார் போர்டு. விஜய் சேதுபதி, சூரி, பவானி, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன் நடித்துள்ள படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். …

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே மசோதா நிறைவேற்றம்: வன பாதுகாப்பு திருத்த மசோதா தாக்கல்

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு நடுவே மக்களவையில் நிறுவனங்கள் போட்டி சட்ட திருத்த மசோதா எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. மேலும் வன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. ராகுல் தகுதி நீக்கம் விவகாரம் மற்றும் அதானி குழும மோசடி தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், மக்களவை நேற்று காலை கூடியதும், இந்த விவகாரங்களை எழுப்பி, கருப்பு உடையில் வந்திருந்த காங்கிரஸ் உள்ளிட்ட … Read more