காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்

* 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு சென்னை: காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் திருடிய 150 சவரன் நகையை செய்யாறு அருகே வயல்வெளி கிணற்று நீரில் பதுக்கி இருப்பதாக குற்றவாளி கூறிய தகவலை தொடர்ந்து பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு நகைகளுடன் பொட்டலம் மீட்கப்பட்டது. காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடையை சத்தியமூர்த்தி என்பவர் நடத்தி வருகிறார். இவரின், வீடு தனியார் கல்லூரி அருகே கண்ணப்பர் தெருவில் உள்ளது. இந்நிலையில் சத்தியமூர்த்தி, தனது … Read more

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால்

சென்னை: பசங்க, மெரினா, பசங்க 2, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை, கதகளி, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். இவர் கடைசியாக கடந்த ஆண்டு எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கினார். …

நாளை மறுநாள் முதல் 1000 மருந்துகள் விலை 11% உயர்கிறது

புதுடெல்லி: நாளை மறுநாள் முதல் 384 அத்தியாவசிய  மருந்துகள் மற்றும்  1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின்  விலைகள் 11 சதவீதக்கும் அதிகமாக  உயர்த்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  மருத்துவ துறையில்  மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில்  384 அத்தியாவசிய  மருந்துகள்  மற்றும் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின்  விலைகள் 11 சதவீதத்துக்கும்  அதிகமாக உயர்த்தப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 1ம்  தேதி முதல் மருந்துகளின் விலை  உயர்வு நடைமுறைக்கு வரும். குறிப்பாக வலி  நிவாரணி, தொற்று எதிர்ப்பு,  … Read more

கைதிகளுக்கு 1000 நூல் வழங்கிய விஜய் சேதுபதி

மதுரை: மதுரை சிறைக்கைதிகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி ஆயிரம் நூல்களை வழங்கினார். மதுரை மத்திய சிறைச்சாலை நூலகத்திற்கு நடிகர் விஜய்சேதுபதி நேற்று வந்தார். அங்கு சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன் ஆகியோரை சந்தித்தார். அப்போது சிறையில் இருக்கும் கைதிகள், தங்களது வாசிப்புத்திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், அங்குள்ள நூலக பயன்பாட்டிற்கு அவரது சொந்த செலவில் இருந்து 1,000 புத்தகங்களை வழங்கினார். அவருக்கு டிஐஜி மற்றும் அதிகாரிகள், சிறைக்கைதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

வெறுப்பு பேச்சு முடிவுக்கு வர அரசியலில் மதத்தை பயன்படுத்த கூடாது: உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி:  அரசியலில் மதத்தைப் பயன்படுத்துவதை அரசியல்வாதிகள் நிறுத்தும் தருணத்தில், வெறுப்புப் பேச்சுகள் முடிவுக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில் நடந்த 50 பொதுக்கூட்டங்களில் வெறுப்பு பேச்சு பேசப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் டெல்லி, உபி, உத்தரகாண்ட் மாநிலங்களில் வெறுப்பு பேச்சு குறித்தும் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்குகள் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு … Read more

தமிழ்நாட்டில் மொத்தம் 3.38 கோடி வாகனங்கள் உள்ளன: பேரவையில் போக்குவரத்துத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 3.38 கோடி வாகனங்கள் உள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் 20,127 அரசுப் பேருந்துகளும், 7,764 தனியார் பேருந்துகளும் இருப்பதாக போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. 2.85 கோடி இருசக்கர வாகனங்களும், 33 லட்சம் மோட்டார் கார்களும் உள்ளதாகவும் சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்தது.

நிலக்கரி வரி விதிப்பில் முறைகேடு சட்டீஸ்கர் காங். தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி வரி விதிப்பில், ஒரு டன்னுக்கு ரூ. 25 வீதம் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 540 கோடி வரை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த முறைகேட்டில் காங்கிரஸ் தலைவர்கள், இடைத்தரகர்கள், வணிகர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில், ராய்ப்பூர் மேயரும் காங்கிரஸ் தலைவருமான அய்ஜாஸ் தேபர், ஐஏஎஸ் அதிகாரி அனில் குமார் துதேஜா, மதுபான தொழிலதிபர் பல்தேவ் சிங் பாட்டியா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் … Read more

கட்டணமில்லா பேருந்துகளில் 20 மாதங்களில் 256.66 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயணம்: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: கட்டணமில்லா பேருந்துகளில் 20 மாதங்களில் 256.66 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் செய்துள்ளனர். கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் மூலம் மகளிருக்கு ரூ.200 முதல் ரூ.1,500 வரை சேமிப்பு என்று அமைச்சர் கூறியுள்ளார்.

புதுச்சேரி காவலர்களுக்கு பிறந்தநாள், திருமண நாளில் விடுமுறை தரப்படும்: அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி: புதுச்சேரி காவலர்களுக்கு பிறந்தநாள், திருமண நாள், முக்கிய நிகழ்வுகளுக்கு விடுமுறை தரப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். போதைப் பொருளை தடுக்க குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் 60 எஸ்.ஐ., 26 ஓட்டுநர்கள், 500 ஊர்க்காவல் படை வீரர்கள் என காலி பணியிடங்கள் இவ்வாண்டுக்குள் நிரப்பப்படும் எனவும் கூறினார்.

ஆவின் தயிரில் தஹி என்ற இந்தி பெயரை அச்சிடக் கூறிய FSSAI-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஆவின் தயிரில் தஹி என்ற இந்தி பெயரை அச்சிடக் கூறிய FSSAI-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு (FSSAI) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். எங்கள் தாய்மொழியை தள்ளிவைக்கச் சொல்லும் FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்.மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும், இந்தித் திணிப்பு முயற்சியை நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.