நீங்கள் மட்டும் தான் சம்பாதிக்கணுமா… : ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை சாடிய விஷால்

நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலும், முன்னாள் நடிகரும், தற்போதைய அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். சமீபத்தில் கூட நடிகர் சங்க கட்டடம் கட்ட உதயநிதி ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார். இந்த நிலையில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் எனது படமான 'மார்க் ஆண்டனி'யை வெளிவரவிடாமல் தடுத்தது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் விஷால். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒரு படத்தை தள்ளி ரிலீஸ் செய்ய சொல்வதற்கு யாருக்கும் … Read more

பிளாஷ்பேக் : ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடையும் முன் சவுந்தர்யா செய்த காரியம்

தனது அழகாலும், நடிப்பாலும் தென்னிந்திய ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை சவுந்தர்யா 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (ஏப்ரல் 17) இதே மாதிரியான ஒரு தேர்தல் காலத்தில் தீவிர பிரச்சாரம் செய்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில், கார்த்திக் ஜோடியாக தமிழில் 'பொன்னுமணி' படத்தில் அறிமுகமானார் சவுந்தர்யா. தொடர்ந்து அருணாச்சலம், படையப்பா போன்ற படங்களில் ரஜினிக்கும், காதலா காதலா படத்தில் கமல்ஹாசனுக்கும், தவசி, சொக்கத்தங்கம் ஆகிய படங்களில் விஜயகாந்துக்கும் ஜோடியாக நடித்திருந்தார் . கன்னடம், மலையாளம், … Read more

நீ நான் காதல் சீரியலில் கெஸ்ட் ரோலில் வெற்றி வசந்த்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களிலேயே சிறகடிக்க ஆசை தொடருக்கு தான் ரசிகர்களின் பேராதரவு கிடைத்து வருகிறது. அதிலும் இந்த தொடரில் நாயகனாக நடித்து வரும் வெற்றி வசந்த் தனது எதார்த்தமான நடிப்பால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இதன்மூலம் இவருக்கு மற்ற சீரியல்களிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. முன்னதாக பொன்னி என்கிற தொடரில் என்ட்ரி கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுத்த வெற்றி வசந்த், தற்போது விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் நீ நான் காதல் … Read more

அனிமல் படத்தின் வெற்றிக்கு வித்யாபாலன் சொல்லும் காரணம்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி என்கிற படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறிய சந்தீப் ரெட்டி வங்கா பாலிவுட்டில் ரன்பீர் கபூரை வைத்து அனிமல் என்கிற படத்தை இயக்கினார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆயிரம் கோடி வசூலை நெருங்கியது. ஏற்கனவே பாலிவுட்டில் இரண்டு படங்கள் சரியாக போகாத நிலையில் ராஷ்மிகா மந்தனாவுக்கும் இந்த படம் கை கொடுத்தது. அது மட்டுமல்ல வில்லனாக நடித்த பாபி தியோலும் … Read more

பழம்பெரும் மலையாள இசை அமைப்பாளர் கே.ஜி.ஜெயன் காலமானார்

தமிழ்நாட்டில் விஸ்நாதன் – ராமமூர்த்தி ஜோடிகள் இசையில் கொடிகட்டி பறந்த காலத்தில் கேரளாவில கொடி கட்டி பறந்த இசை ஜோடி விஜயன் – கே.ஜி.ஜெயன். ஆயிரக்கணக்கான பக்தி பாடல்களுக்கு, இசை அமைத்தும், பாடியும் உள்ளனர். கர்நாடக இசையிலும் இருவரும் சாதனைகள் பல படைத்தனர். இந்த ஜோடிகளில் விஜயன் 1986ம் ஆண்டே மரணம் அடைந்து விட்டார். அவரது மறைவிற்கு பிறகு அவரது பெயரையும் இணைந்து ஜெய விஜயன் என்கிற பெயரில் இசை அமைத்து வந்தார் கே.ஜி.ஜெயன். 89 வயதான … Read more

கன்னட தயாரிப்பாளர் துவாரகீஷ் மரணம் : ரஜினிகாந்த் இரங்கல்

கன்னட திரையுலகத்தைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் துவாரகீஷ் நேற்று காலமானார். 81 வயதான இவர் இதயம் செயலிழந்த நிலையில் மரணத்தை தழுவியுள்ளார். திரையுலகை சேர்ந்த பலரும் அவரது மறைவுக்கு தங்களது இரங்கலையும் அஞ்சலியையும் செலுத்தி வரும் நிலையில் அவரது மிக நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த் இவரது மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “என்னுடைய நீண்டநாள் நண்பரான துவாரகீஷின் மரணம் எனக்கு ரொம்பவே வேதனை அளிக்கிறது. ஒரு நகைச்சுவை நடிகராக … Read more

புதிய சீரியல் இயக்கும் திருமுருகன்

மெட்டி ஒலி, நாதஸ்வரம், தேன் நிலவு, கல்யாண வீடு உள்ளிட்டு பல மெகா சீரியல்களை இயக்கி முக்கிய வேடங்களில் நடித்தவர் திருமுருகன். ஆனால் கடந்த 2020ம் ஆண்டு அவர் இயக்கிய கல்யாண வீடு என்ற சீரியல் முடிந்த நிலையில் அடுத்த சீரியல் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது திருமுருகன் தன்னுடைய புதிய சீரியல் குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ் புத்தாண்டு தினத்தில் தனது புதிய சீரியல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு … Read more

ரூ.50 கோடி வசூலை கடந்த பஹத் பாசிலின் ஆவேசம்

மலையாளத்தில் உருவான மஞ்சும்மேல் பாய்ஸ் என்ற படம் மலையாளம், தமிழ் உள்பட பல மொழி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதையடுத்து வெளியான பிரேமலு, ஆடு ஜீவிதம் போன்ற மலையாள படங்களும் கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வரவேற்பை பெற்றன. இந்த இரண்டு படங்களுமே ரூ.100 கோடி வசூலை கடந்துவிட்டன. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் பஹத் பாசில் நாயகனாக நடித்துள்ள ஆவேசம் என்ற படம் திரைக்கு வந்து ஐந்து நாட்களில் ரூ.50 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. வித்தியாசமான … Read more

மம்முட்டியின் டர்போ ரிலீஸ் தேதி அறிவிப்பு

மலையாளத்தில் சமீபகாலமாக சிறிய பட்ஜெட்டில் வெளியாகும் படங்கள் மிகப் பெரிய அளவில் வரவேற்பையும், கோடிகளில் வசூலையும் வாரிக் குவித்து வருகின்றன. அதேசமயம் கடந்த வருடத்திற்கு முன்பு வரை சற்று இறங்கு முகத்தில் இருந்த நடிகர் மம்முட்டியின் படங்கள் கடந்த வருட இறுதியிலும், இந்த வருட துவக்கத்திலும் ஒவ்வொன்றாக வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக கடந்த பிப்ரவரியில் வெளியான பிரம்மயுகம் படத்தில் ஒரு புதிய மம்முட்டியை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் … Read more

தொடர்ந்து காமெடி படங்களில் நடிக்கும் பஹத் பாசில்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை மலையாள திரையுலகில் மட்டுமே தனது நடிப்பு எல்லையை சுருக்கிக் கொண்டிருந்த நடிகர் பஹத் பாசில், இந்த இரண்டு வருடங்களில் விக்ரம், புஷ்பா, மாமன்னன் என இந்த மூன்று படங்கள் மூலமாக தென்னிந்தியாவில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் கூட பேசப்படும் நடிகராக மாறிவிட்டார். ஆனால் இவை எல்லாவற்றிலும் வில்லன் மற்றும் சீரியஸ் கதாபாத்திரங்களில் தான் நடித்துள்ளார். அதேசமயம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் அவரது நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படத்தில் மிகப்பெரிய … Read more