வைபவ், அதுல்யா ரவி நடிக்கும் ‛சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குனர்கள் விக்ரம் ராஜேஸ்வர், அருண் கேசவ் இருவரும் இணைந்து இயக்கி வரும் புதிய படம் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' . நடிகர் வைபவ், நடிகை அதுல்யா ரவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, மணி, ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கும் இப்படத்தை பீ.டி.ஜி யூனிவர்சல் நிறுவனம் தயாரிக்கின்றது. கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு சென்னை புறநகரில் விறுவிறுப்பாக நடைபெற்று … Read more

'கேம் சேஞ்சர்' ரிலீஸ் எப்போது? ராம் சரண் தகவல்

ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. இப்படம் கடந்த மூன்று வருடங்களாக படமாகி வருகிறது. படம் எப்போது வெளியாகும் என ராம் சரண் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பட வெளியீடு குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார் ராம் சரண். செப்டம்பர் கடைசி அல்லது அக்டோபரில் படம் வெளியாகும் என்றும், பான் இந்தியா படமாக தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி … Read more

மலையாளப் படங்களைத் திரையிட பிவிஆர் ஐநாக்ஸ் சம்மதம்

டிஜிட்டலில் திரைப்படங்களைத் தியேட்டர்களில் திரையிட வி.பி.எப் என்ற கட்டணத்தைத் தயாரிப்பாளர்கள் செலுத்த வேண்டும். அப்படி கட்டணம் செலுத்தினால் மட்டுமே அந்தப் படங்கள் தியேட்டர்களில் திரையிடப்படும். சில தனியார் நிறுவனங்கள் அந்த விபிஎப் கட்டணத்தை அதிகமாக வாங்குவதால் சொந்தமாகவே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தது மலையாள தயாரிப்பாளர் சங்கம். அதன்படி அவர்களது 'பிடிசி' என்ற நிறுவனம் மூலம் தியேட்டர்களுக்குத் தேவையான 'கன்டென்ட்'களை வாங்கிக் கொள்ள அறிவுறுத்தியது. ஆனால், இந்த புதிய முறைக்கு பிரபல மல்டிபிளக்ஸ் நிறுவனமான பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் … Read more

ஹிட் சீரியலிலிருந்து விலகிய ரிஹானா! அவரே சொன்ன காரணம்

சின்னத்திரை நடிகை ரிஹானா ஆனந்த ராகம், மீனாட்சி பொண்ணுங்க ஆகிய சீரியல்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2விலும் நடித்து வந்தார். இந்நிலையில், அவர் தனது தனிப்பட்ட காரணங்களால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகுவதாகவும், சீரியலில் அவர் நடித்து வரும் கேரக்டர் தொடர்ந்து பயணித்து கொண்டிருப்பதால் ப்ரேக் எடுக்க முடியவில்லை என்றும், இதன் காரணமாகவே சீரியலை விட்டு விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுவரை ரிஹானா நடித்து வந்த கதாபாத்திரத்தில் மற்றொரு சின்னத்திரை நடிகையான மாதவி இனி நடிக்க இருக்கிறார்.

தில்லானா மோகனாம்பாள், வீரா, லவ் டுடே – தமிழ் புத்தாண்டு சிறப்பு ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 14) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 11:00 – பிகில்மதியம் 02:30 – முத்துமாலை 06:30 – … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகலா? – ரவிச்சந்திரன் பேட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இரண்டாவது பாகமும் மக்களிடம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் பாகத்தில் ஜனார்த்தனன் கதாபாத்திரத்தில் நடித்த ரவிச்சந்திரன் மீண்டும் அதே ஜனார்த்தனன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதல் சீசனில் இவருக்கான அதிக முக்கியத்துவம் இருந்தது. ஆனால், இரண்டாவது சீசனில் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி காட்சிகள் இதுவரை இல்லை. இதனால், பலரும் ரவிச்சந்திரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன்2 வை விட்டு … Read more

சமந்தா பாணியில் கவர்ச்சியை வெளிப்படுத்திய ராஷி கண்ணா

ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா 2018ம் ஆண்டில் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் தமிழுக்கு வந்தார். அதன்பின் அடங்க மறு, அயோக்கியா, திருச்சிற்றம்பலம், சர்தார் போன்ற படங்களில் நடித்தவர் தற்போது அரண்மனை 4 படத்தில் நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு சமந்தா உள்ளாடை அணியாமல் கோட் மட்டுமே அணிந்து ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது ராஷி கண்ணாவும் அதே பாணியில் உள்ளாடை அணியாமல் கோட் அணிந்து எடுத்துக் … Read more

கமலின் தக்லைப் படத்திலிருந்து சித்தார்த்தும் வெளியேறினார்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் தக் லைப். திரிஷா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், சித்தார்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருந்தார்கள். ஆனால் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று விட்டதால் தங்களது கால்ஷீட்டை வீணடித்து விட்டதாக சொல்லி தக்லைப் படத்திலிருந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் வெளியேறிய நிலையில் அவர்களுக்கு பதிலாக சிம்பு, அரவிந்த்சாமி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி … Read more

விஜய் கட்டிய சாய்பாபா கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த ராகவா லாரன்ஸ்

கோட் படத்தை அடுத்து தனது 69வது படத்தில் நடிக்க உள்ளார் விஜய். தனது தாயார் ஷோபா சந்திரசேகரின் விருப்பத்திற்காக சென்னை கொரட்டூரில் ஒரு சாய்பாபா கோயில் கட்டியுள்ளார் விஜய். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகின. இந்த கோயிலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும் உடன் இருந்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகவா லாரன்ஸ். அதன் … Read more

சாயாஜி ஷிண்டேவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை

தமிழில் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான பாரதி என்ற படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானவர் சாயாஜி ஷிண்டே. அதன் பிறகு பாபா, பூவெல்லாம் உன் வாசம், அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் பரவலாக நடித்து வந்தார். இந்த நிலையில் நேற்று சாயாஜி ஷிண்டேவுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து அவருக்கு ஆஞ்சியோ … Read more