பாக்.,கிற்கு படிக்க செல்ல வேண்டாம்: யு.சி.ஜி.,| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-‘வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள், பாகிஸ்தான் சென்று படிப்பதை தவிர்க்க வேண்டும்’ என, பல்கலைக்கழக மானிய குழுவும், அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவும் அறிவுறுத்தி உள்ளன .நம் நாட்டில் உள்ள இளைஞர்கள், வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி படிப்பதில், அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானிய குழுவும், ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவும் சேர்ந்து, நேற்று இந்திய … Read more

ரஷ்யாவை சார்ந்திருக்க வேண்டாம் இந்தியாவுக்கு அமெரிக்கா குடைச்சல்| Dinamalar

வாஷிங்டன் : ‘நாட்டின் ராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய, இந்தியா, ரஷ்யாவை சார்ந்திருக்கக்கூடாது’ என, அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.ஒப்பந்தம்ரஷ்யா – உக்ரைன் இடையில் போர் துவங்கியது முதல், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ரஷ்யா உடனான வர்த்தக உறவுகளை துண்டித்து, ரஷ்யாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால், நாட்டின் ராணுவ உள்கட்டமைப்பை வலுபடுத்த, இந்தியா பல்வேறு ராணுவ தளவாடங்களை, ரஷ்யாவிடம் இருந்து தான் வாங்கி வருகிறது. … Read more

கும்பலாக நடனம் போட்ட சீரியல் அழகிகள்

ஜீ தமிழ் சேனல் பல்வேறு ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் ஆப் ஸ்கீரினிலும் தங்களது நட்பை தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஜீ தமிழில் நடித்து வரும் சீரியல் நடிகைகள் ஒன்றாக சேர்ந்து விஜய் சேதுபதியின் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் 'டிப்பம் டப்பம்' பாடலுக்கு அழகாக நடனமாடியுள்ளனர். இந்த வீடியோவில் 'நீதானே எந்தன் பொன் வசந்தம்' தொடரில் நடித்த தர்ஷனா அசோகன், நிவாஷினி திவ்யா, ரிஷ்மிதா … Read more

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இஸ்லாமிய அரசு பாடம் நீக்கம்| Dinamalar

புதுடில்லி : சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், பிளஸ் ௧ மற்றும் பிளஸ் ௨ வகுப்புக்கான வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்த ‘ஆப்ரிக்க – ஆசிய பகுதிகளில் இஸ்லாமிய அரசுகளின் வளர்ச்சி’ என்ற பாடத்தை நீக்கியுள்ளது. சி.பி.எஸ்.இ., புதிய கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் செய்துள்ளது.இது பற்றி அந்த வட்டாரங்கள் கூறியதாவது:சி.பி.எஸ்.இ., நிர்வாகம், பிளஸ் ௧ மற்றும் பிளஸ் ௨ வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து, ‘அணிசேரா இயக்கம், பனிப்போர் காலம், … Read more

6 வருடங்களுக்கு பிறகு தமிழில் வெளியாகும் ஹரிப்பிரியாவின் கன்னட படம்

தமிழில் சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராஜன், கன்னடத்தில் இயக்கிய படம் ரணதந்திரா. தற்போது அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் 6 வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் இயக்கிய ரணதந்திராவை மாஸ்க் என்ற பெயரில் தமிழில் வெளியிடுகிறார். மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜய ராகவேந்திரா, மேக்னா நாயுடு, ஐஸ்வர்யா, விஷால் ஹெக்டே, மது உட்பட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ் கே நாராயன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எம் கார்த்திக் இசையமைத்திருக்கிறார். … Read more

இலங்கைக்கு ரூ.3,800 கோடி கடன் கூடுதலாக வழங்க இந்தியா ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு,-பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, கூடுதலாக 3,800 கோடி ரூபாய் கடன் வழங்க இந்தியா சம்மதித்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்ததால், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாமல் திணறி வருகிறது. இதனால், அங்கு விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ளது.இந்நிலையில், இலங்கைக்கு கடனுதவி, உணவுப் பொருட்கள், எரிபொருட்கள் அளித்து இந்தியா உதவி வருகிறது. அதேபோல், … Read more

நிடி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் நியமனம்| Dinamalar

புதுடில்லி : ‘நிடி ஆயோக்’ அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பொருளாதார நிபுணர் சுமன் பெர்ரி அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 2015 ஜனவரியில் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு, நிடி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் துணைத் தலைவராக இருந்த அரவிந்த் பனகாரியா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, 2017 ஆகஸ்டில், மூத்த பொருளாதார நிபுணர் ராஜிவ் குமார் அப்பதவியை ஏற்றார். ராஜிவ் குமாரின் பதவிக்காலம் வரும் 30ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், … Read more

ஆன்மிகமும், காதலும் நிறைந்தவராக மீண்டும் வருகிறார் தோர்

மார்வல் சூப்பர் ஹீரோக்களில் ஒருவர் தோர். அவருக்கும், அவரது ராட்சத சுத்தியலுக்கும் பெரும் ரசிகர் கூட்டமே இருக்கிறது. அவென்ஜர் எண்ட் கேமோடு எல்லா சூப்பர் ஹீரோக்களுக்கும் மார்வெல் நிறுவனம் முடிவுகட்டிவிட்டது என்று கருதிக் கொண்டிருக்கும்போது சூப்பர் ஹீரோக்கள் தற்போது வேறு பரிமாணங்களில் வரத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வரிசையில் தோர் இப்போது 'லவ் அண்ட் தண்டர்' என்ற தலைப்போடு வருகிறார். இந்த முறை அவர் தனது போராட்ட வழியை மாற்றி தனது சுத்தியலை அன்பின் ஆயுதமாக்கி ஆன்மீக … Read more

ரஷ்ய – உக்ரைன் அதிபர்களை சந்திக்கும் ஐ.நா.,பொதுச் செயலர்

நியூயார்க் : போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய, உக்ரைன் அதிபர்களை ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் சந்தித்து பேச உள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவிடம், தாக்குதலை நிறுத்தும்படி ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் பல முறை வலியுறுத்தினார். அத்துடன், போர் நிறுத்தம் தொடர்பாக பேச, ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய தலைவரை ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு அனுப்பி வைத்தார். எனினும், அன்டோனியோ குட்டரஸ் அந்நாடுகளுக்குச் செல்லவில்லை. உலக … Read more

டிரெண்டிங்கில் கலக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலர்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. நயன்தாரா, சமந்தா இருவரையும் காதலித்து அவர்களிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தை படும் நாயகனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். டிரைலரின் ஆரம்பமே குஷி படத்தில் இடம்பெற்ற அணையப் போகும் ஒரு விளக்கை அணைய விடாமல் தடுக்க, விஜய் சேதுபதி நயன்தாரா, சமந்தா மூன்று பேருமே ஓடிவந்து தங்களது கைகளால் விளக்கு அணையாமல் தடுக்கிறார்கள். இப்படி தொடங்கும் இந்த … Read more