மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று புதுச்சேரிக்கு வருகை| Dinamalar

புதுச்சேரி: சென்னை மியாட் மருத்துவமனை சார்பில் இரைப்பை, குடல் மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவ நிபுணர் ஆலோசனை வழங்க, புதுச்சேரிக்கு இன்று வருகை தருகின்றனர். சென்னை மியாட் மருத்துவமனை சார்பில் இரைப்பை மற்றும் குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திக் மருதாச்சலம், மூளை மற்றும் நரம்பியல் நிபுணர் சுப்பிரமணியன் ஆகியோர் புதுச்சேரிக்கு ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள தி பாஷ் மருத்துவமனைக்கு இன்று (23ம் தேதி) மாலை 5 முதல், இரவு … Read more

நான் உனை நீங்க மாட்டேன் : மறைமுகமாக மோடியை பாடும் இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் அம்பேத்ரும், மோடியும் என்ற புத்தகத்திற்கு எழுதிய அணிந்துரையில் அம்பேத்கரின் சிந்தனைகளை மோடி நடைமுறைபடுத்தி வருகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதற்கு தனது தம்பி மூலம் பதிலளித்த இளையராஜா நான் மெட்டு போட்டுவிட்டால் அதை மாற்றி திரும்ப போட மாட்டேன். அதேபோல எனது கருத்தில் இருந்தும் பின்வாங்க மாட்டேன் என்ற அறிவித்தார். இந்த நிலையில் இளையராஜா, சமூகவலைதளத்தில் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஷோபனா நடித்திருந்த 'தளபதி' … Read more

நிடி ஆயோக் துணை தலைவராக சுமன் கே. பெர்ரி நியமனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நிடி ஆயோக் துணைதலைவராக சுமன் கே. பெர்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.நிடி ஆயோக் துணை தலைவராக 2017-ம் ஆண்டிலிருந்து பதவிவகித்து வரும் ராஜிவ் குமார் , பதவி காலம் ஏப். 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் ராஜிவ் குமார் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவை மத்திய ஏற்றுக் கொண்டதையடுத்து புதிய துணை தலைவராக சுமன் கே. பெர்ரி நியமிக்கப்பட்டார். இவர் வரும் மே.1-ம் தேதி பதியேற்க உள்ளார். … Read more

கபீர் சிங் படத்தில் நடித்தபின் புகை பிடிப்பதை நிறுத்தி விட்டேன் ; ஷாகித் கபூர்

நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு மிகப்பெரிய அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்த படம் அர்ஜுன் ரெட்டி. அந்த படம் பின்னர் ஹிந்தியில் ஷாகித் கபூர் நடிக்க கபீர் சிங் என்கிற பெயரில் ரீமேக் ஆக வெளியாகி அங்கேயும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் கதாநாயகன் பெரும்பாலும் மதுவுக்கும் சிகரெட்டும் அடிமையானவனாகவும் பின் அதிலிருந்து மீண்டு வருவதாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த படத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ள சாகித் கபூர், “கபீர் சிங் படத்தில் … Read more

வானத்தை விட வாழ்க்கையை வசப்படுத்துவோம்| Dinamalar

சென்னை, அண்ணா நகர் மலர் குடியிருப்பில் உள்ள தன் வீட்டில், மலையென குவிந்துள்ள புத்தகங்களை தலைப்பு வாரியாக பிரித்து வைப்பதில் மிகவும் பரபரப்பாக இருந்தார், ஏர்வாடி ராதாகிருஷ்ணன். கவிதை உறவு இலக்கிய அமைப்பின் நிறுவனர், இவர்.ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்த நாளை, கவிதை உறவு இலக்கிய அமைப்பின் ஆண்டு விழாவாக நடத்தி வருகிறார். ஆண்டுதோறும் சிறந்த கதை, கவிதை, நாவல், கட்டுரை போன்ற புத்தகங்களை தேர்ந்து எடுத்து, அதை எழுதிய ஆசிரியர்களை பாராட்டி கவுரவிப்பதே ஆண்டு விழாவின் … Read more

வெளியீட்டுக்கு தயாராகிறது கள்ளபார்ட்

என்னமோ நடக்குது, அச்சமின்றி படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கும் 3வது படம் கள்ளபார்ட். விக்ரம், தமன்னா நடிப்பில் உருவான ஸ்கெட்ச் படத்தை தயாரித்த மூவிங் பிரேம்ஸ் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.. அரவிந்த்சாமி, ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். பார்த்தி, ஆதேஷ் பாலா, பேபி மோனிகா, ஹரிஷ் பெராடி உள்பட பலர் நடித்துள்ளனர். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. இதுகுறித்து … Read more

சிதிலமடைந்த நீர்த்தேக்க தொட்டி விபத்து அபாயத்தில் பொதுமக்கள்| Dinamalar

பட்டாபிராம் : பட்டாபிராம் அருகே, நீண்ட நாட்களாக சிதிலமடைந்த நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியையும், போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையையும் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டாபிராம், சோரஞ்சேரி 6வது வார்டு, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. சிதிலமடைந்த காரணத்தால், ஆறு மாதங்களாக தண்ணீர் நிரப்பாமல் வைத்திருந்தனர்.மாற்று நடவடிக்கையாக, பஜனை கோவில் தெருவில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, அப்பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு … Read more