'புஷ்பா 2' ஆடியோ உரிமை இவ்வளவு விலையா ?

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் ஆடியோ உரிமை சுமார் 50 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியத் திரையுலகத்தில் சமீபகாலத்தில் இந்த அளவு விலைக்கு வேறு எந்தப் படங்களின் ஆடியோ உரிமையும் விற்கப்படவில்லை என்கிறார்கள். இதற்கான ஒப்பந்தம் கூட கடந்த வருடமே போடப்பட்டுவிட்டது என்றும் தகவல். 'புஷ்பா' படத்தின் முதல் பாகப் பாடல்கள் தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழ், ஹிந்தி … Read more

9 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் வெளியாகும் ஆஸ்கர் விருது படம்

சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருது 'தி பாய் அண்ட் தி ஹெரான்' என்ற படத்திற்கு கிடைத்தது. இந்த படத்தை உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குனர் ஹயாவோ மியாசாகி இயக்கி இருந்தார். இதற்கு முன் 11 படங்களை இயக்கி இருந்த அவர் இந்த படத்தை தனது கடைசி படமாக அறிவித்து வெளியிட்டார். உலக நாடுகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான இப்படம், இந்தியாவில் வெளியாகவில்லை. 9 மாத இடைவெளிக்குப் … Read more

நடிகர் அருள்மணி காலமானார்

தமிழில் பல படங்களில் குணச்சித்ர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்த அருள்மணி(65) மாரடைப்பால் சென்னையில் நேற்று இரவு காலமானார். தமிழில் பொன்னுமணி, தர்மசீலன், கருப்பு ரோஜா, அழகி, வேல் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் அருள்மணி. நடிப்பு தவிர்த்து நடிப்பு மற்றும் இயக்குனர் பயிற்சிக்கான பள்ளியும் இவர் நடத்தி வந்தார். அதிமுக.,வின் நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளார். பார்லிமென்ட் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கடந்த 10 நாட்களாக பல்வேறு ஊர்களில் … Read more

சிம்பு நடிக்க இருந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனா?

ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் இயக்குனரானவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பிறகு லவ் டுடே படத்தை இயக்கி நடித்தவர், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் 26வது படத்தில் அவர் நாயகனாக நடிக்கப் போகிறார். அஸ்வத் மாரிமுத்து என்பவர் இயக்கும் இந்த படத்தின் ப்ரமோ வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த கதையில் ஏற்கனவே சிம்பு நடிக்க இருந்ததாகவும், அந்த கதையில்தான் தற்போது பிரதீப் … Read more

காதலன் பட பாடலுக்கு மனைவியுடன் சேர்ந்து அசத்தல் நடனமாடிய ராஜமவுலி

மகதீரா, நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ராஜமவுலி. தற்போது மகேஷ் பாபு நடிப்பில் தனது புதிய படத்தை இயக்க ஆரம்பகட்ட பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். ஹாலிவுட் தொழில் நுட்பத்தில் உருவாகும் இந்த படத்தில் பல வெளிநாட்டு நடிகர் நடிகைகளும் நடிக்க உள்ளார்கள். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் ராஜமவுலி தனது மனைவியுடன் இணைந்து நடன பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ஒன்று … Read more

தயாரிப்பாளராக உருவெடுத்த கேஜிஎப் யஷ்

கன்னட நடிகர் யஷ் கேஜிஎப், கேஜிஎப்- 2 படங்களில் நடித்து பிரபலமான நிலையில், தற்போது நடிகை கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் தானே தயாரிக்கிறார் யஷ். இதையடுத்து பாலிவுட்டில் தயாராகி வரும் ராமாயணம் என்ற படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க, ராவணனாக நடிக்கிறார் யஷ். 500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் யஷும் இணை தயாரிப்பாளராகி இருக்கிறார். இது … Read more

33 வருடங்களாகி விட்டதா… ஆச்சரியத்தில் குஷ்பு!

தமிழ் சினிமாவில் தாறுமாறாக ஓடி பெரும் வெற்றியைப் பெற்ற படம் 'சின்னத்தம்பி. பி.வாசு இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், பிரபு, குஷ்பு, கவுண்டமணி, மனோரமா, ராதாரவி மற்றும் பலர் நடிப்பில் 1991ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி வெளியான படம். இன்றுடன் இப்படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆகிவிட்டது. இளையராஜாவின் இசையில் இடம் பெற்ற இனிமையான பாடல்கள்தான் இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணம். பிரபுவின் அப்பாவித்தனமான நடிப்பு, குஷ்புவின் அழகான நடிப்பு என அந்தக் காலத்தில் … Read more

மலையாளத் திரையுலகத்தில் புதிய பிரச்சனை : மற்ற மொழிகளுக்கும் பரவுமா ?

2024ம் வருடத்தில் இந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரை மற்ற எந்த மொழி படங்களைக் காட்டிலும் மலையாளப் படங்கள்தான் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும், வசூலையும் பெற்று வருகின்றன. தற்போது அத்திரையுலகம் புதிய பிரச்சனை ஒன்றை சந்திக்க ஆரம்பித்துள்ளது. இந்திய அளவில் அதிகமான தியேட்டர்களைக் கொண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனமான பிவிஆர், ஐனாக்ஸ், அவர்களது தியேட்டர்களில் மலையாளப் படங்களை திரையிடுவதை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தியுள்ளது. இதனால், மலையாளத் திரையுலகினல் கடும் கோபத்தில் உள்ளார்கள். விபிஎப் எனப்படும் விர்சுவல் பிரிண்ட் கட்டணம் தான் … Read more

100 மில்லியனைக் கடந்த 'புஷ்பா 2' டீசர்

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 8ம் தேதி வெளியிடப்பட்டது. நான்கு நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதற்கு முன்பு பிரபாஸ் நடித்த 'சலார்' படத்தின் டீசர் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து … Read more

ஜூனில் திரைக்கு வரும் ஸ்ரேயா ரெட்டியின் அண்டாவக் காணோம்

விஷால் நடித்த திமிரு மற்றும் காஞ்சிவரம், பள்ளிக்கூடம் என பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா ரெட்டி. அதையடுத்து கடந்த 2020ம் ஆண்டு அண்டாவக் காணோம் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் சில பிரச்னைகளால் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில், ரிலீஸ் குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அண்டாவக் காணோம் படம் ரிலீசுக்கு தயாராகி விட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் தனது எக்ஸ் … Read more