விஜய் சேதுபதியின் மகாராஜா எப்போது ரிலீஸ்?

அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் நடித்த ஜவான் படத்தை அடுத்து தனது ஐம்பதாவது படமான மகாராஜாவில் நடிக்க தொடங்கினார் விஜய் சேதுபதி. விதார்த் நடித்த குரங்கு பொம்மை என்ற படத்தை இயக்கிய நித்திலன் இப்படத்தை இயக்குகிறார். விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்நிலையில் வருகிற மே மாதம் 16-ம் … Read more

ரஜினி 171 : நாளை அறிமுக வீடியோ படப்பிடிப்பு

ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இணையும் ரஜினியின் 171வது படம் பற்றிய அறிமுக போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. இப்படம் பற்றி அடுத்தடுத்து சில அப்டேட்கள் வெளிவந்தன. அவற்றில் எதுவுமே அதிகாரப்பூர்வமானது அல்ல. ஆனால், படத்தில் மல்டிஸ்டார்கள் இடம் பெறுவது மட்டும் உறுதி என்கிறார்கள். இதனிடையே, இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிப்பை தனது ஸ்டைலில் ஒரு வீடியோவாக எடுத்து வெளியிட திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்', விஜய்யை வைத்து 'லியோ' படங்களுக்காக அப்படித்தான் அறிமுக வீடியோவை … Read more

பாஜகவில் இணைந்த காமெடி நடிகை ஆர்த்தி

ஜெயலலிதா காலத்தில் அதிமுகவிற்கு பல நடிகர் நடிகைகள் பிரச்சாரம் செய்து வந்தார்கள். அதன் பிறகு பாஜகவிலும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என பலரும் இணைந்து கொண்டார்கள். அதோடு பாஜகவில் இணைந்திருந்த கவுதமி, காயத்ரி ரகுராம் போன்றவர்கள் சமீபத்தில் அங்கிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தார்கள். அதேசமயம் கடந்த காலங்களில் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்து வந்த நடிகர் செந்தில் இந்த முறை பாஜகவுக்கு பிரச்சாரம் செய்து வருகிறார். இப்படி பல நடிகர்களும் பல கட்சிகளில் இடம்பெற்று பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் … Read more

தயாரிப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

எம்.ஜி.ஆர்., கழக நிறுவனரும், முன்னாள் அதிமுக அமைச்சரும், தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98. பட அதிபர்புதுக்கோட்டையில் பிறந்த இவர், எம்.ஜி.ஆர்., அமைச்சரவையிலும், ஜெயலலிதா அமைச்சரவையிலும் அமைச்சராக இடம்பெற்று இருந்தார். கே.ஆர்.ஆர்., நாடகக் கம்பெனியில் கணக்கு பிள்ளையாக பணியாற்றினார். பின்னர் எம்ஜிஆர் அண்ணன் சக்கரபாணி, எம்.ஜி.ஆர் ஆகியோரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகினார். எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ் மேலாளராக இருந்தார். சத்யா மூவீஸ் பட நிறுவன அதிபராகவும் இருந்தார். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் நடித்த படங்களை தயாரித்துள்ளார்.வயது மூப்புஅ.தி.மு.க.,வில் … Read more

ஆர்.எம்.வீரப்பனின் அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கை

கலைத்துறை மற்றும் அரசியலில் சிறப்பாக பங்காற்றிய ஆர்எம் வீரப்பன், 98 வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவர் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பி பார்க்கலாம் பயோகிராபிபெயர் : இராம வீரப்பன்சினிமா பெயர் : ஆர் எம் வீரப்பன்பிறப்பு : 09-09-1926இறப்பு : 09-04-2024பெற்றோர் : இராமசாமி – தெய்வானைபிறந்த இடம் : வல்லத்திராக் கோட்டை – அறந்தாங்கி – புதுக்கோட்டை மாவட்டம் – தமிழ்நாடுமனைவி : ராசம்மாள்குழந்தைகள் : வீ தமிழழகன் … Read more

என் வாழ்நாளில் மறக்க முடியாத நபர் : ஆர்.எம் வீரப்பனுக்கு அஞ்சலி செலுத்திய பின் ரஜினி உருக்கம்

தயாரிப்பாளரும், எம்.ஜி.ஆர்., கழக நிறுவனரும், முன்னாள் அதிமுக., அமைச்சருமான ஆர்எம் வீரப்பன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை, திநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி : ஆர்எம்வி., பணத்திற்கு பின்னால் என்றும் போனது கிடையாது. அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷ்யர்கள் அரசியலில் மத்திய, மாநில அமைச்சர்களாக இருந்துள்ளனர். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என வாழ்ந்தவர். என் வாழ்நாளில் மறக்க … Read more

5 மொழிகளில் வெளியாகும் வரலட்சுமியின் திரில்லர் படம்

சோலா ஹீரோயின் படங்கள் அதிக அளவில் வெளிவருகிறது. அதில் முன்னணி ஹீரோயின்கள் மட்டுமல்ல அடுத்த வரிசையில் உள்ள ஹீரோயின்களும் ஆர்வத்துடன் நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள படம் 'சபரி'. இந்த படத்தில் கணேஷ் வெங்கட்ராம், மதுநந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் அனில் இயக்கியுள்ள இந்த படத்துக்கு கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற மே 3ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய … Read more

100 மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் வழங்கிய உன்னி முகுந்தன்

மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். சமீப காலமாக பட தயாரிப்பாளராகவும் மாறி வெற்றிகரமாக படங்களை தயாரித்து வருகிறார். அது மட்டுமல்ல தெலுங்கிலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மலையாளத்தில் இவர் நடித்துள்ள ஜெய் கணேஷ் திரைப்படம் வரும் ஏப்-11ம் தேதி வெளியாக இருக்கிறது. ரஞ்சித் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் உன்னி முகுந்தனும் மகிமாவும் பம்பரமாக … Read more

தம்பிக்கு உதவிய சிரஞ்சீவி : தேர்தல் செலவுக்கு ரூ.5 கோடி கொடுத்தார்

தெலுங்கு சினிமாவின் டாப் நடிகரான சிரஞ்சீவி அரசியலுக்கு சென்று 'பிரஜா ராஜ்யம்' என்ற கட்சியை தொடங்கினார். அது வெற்றி பெறவில்லை. பின்பு காங்கிரசில் சேர்ந்து மத்திய அமைச்சர் ஆனார். பின்னர் அரசியலில் இருந்து விலகி தற்போது சினிமாவில் தீவிரம் காட்டி வருகிறார். சிரஞ்சிவியின் தம்பி பவன் கல்யாணும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர். அவர் 'ஜனசேனா' என்ற கட்சியை நடத்தி வருகிறார். தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும் கட்சியை நடத்தி வருகிறார். நடைபெற இருக்கும் பார்லிமென்ட் தேர்தலில் … Read more

நித்யா மேனின் புதிய படம் அறிவிப்பு

நித்யா மேனன் தற்போது திரைப்படங்களை விட வெப் தொடர்களில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'மாஸ்டர் பீஸ்', தெலுங்கில் வெளியான 'குமாரி ஸ்ரீமதி' தொடர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போதும் சில வெப் தொடர்களில் நடித்து வருகிறார். தமிழில் கிருத்திகா உதயநிதி இயக்கும் 'காதலிக்க நேரமில்லை' படத்தில் நடிக்கும் நித்யா மேனனின் அடுத்த புதிய பட அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. படத்தின் டைட்டில் 'டியர் எக்சஸ்'. இது பேண்டசி ரொமான்ஸ் காமெடி படமாக உருவாகிறது. … Read more