பிளாஷ்பேக் : 22 படங்களுக்கு இசை அமைத்து, 43 வயதில் மரணமடைந்த ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தந்தை ராஜகோபால குலசேகர் என்கிற ஆர்.கே.சேகர். மலையாள பட இசை அமைப்பாளர். ரகுமானின் தாத்தா ராஜகோபால பாகவதர் பஜனை பாடகர். மயிலாப்பூர் காபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் பஜனை பாடி வந்தார். அதன்பிறகு மலையாள நாடகங்களுக்கு இசை அமைத்தார். தனக்கு உதவியாக ரகுமானின் தந்தை சேகரை அவர் அழைத்து சென்றார். அந்த அறிமுகத்தில் பின்னாளில் சேகர், எம்.கே.அர்ஜுனன், எம்.பி.ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட முன்னணி இசை அமைப்பாளர்ளுக்கு உதவியாளராக இருந்துள்ளார். 1964ம் ஆண்டில் முதன்முதலாக … Read more

சாய்பாபா கோவிலில் விஜய் : படத்தை நீக்கியது ஏன்?

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், யோகிபாபு, அஜ்மல், சினேகா, லைலா ஆகியோர் நடிக்கின்றனர். மீனாட்சி சவுத்ரி ஹீரோயின். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். படத்தின் 4வது கட்ட படப்பிடிப்புக்காக துபாய் சென்றுள்ளார் விஜய். படப்பிடிப்பு இடைவெளியில் துபாயில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். … Read more

ஆடுஜீவிதம் படத்தை இயக்க மறுத்தேனா? – இயக்குனர் லால் ஜோஸ் விளக்கம்

மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் சமீபத்தில் ஆடுஜீவிதம் படம் வெளியானது. இந்த படத்தின் கதையும் பிரித்விராஜின் நடிப்பும் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. எழுத்தாளர் பென்யமின் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதையுடன் இயக்குனர் பிளஸ்சியும், பிரித்விராஜும் கிட்டத்தட்ட 14 வருடங்களாக பயணித்து வந்ததாக இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் இருவரும் கூறியுள்ளனர், இந்த நிலையில் இந்த படத்தை முதலில் இயக்க ஒப்புக்கொண்டு, பின்னர் … Read more

'சென்னை ஸ்டோரி' படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகல்?

பிலிப் ஜான் இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க 'சென்னை ஸ்டோரி' என்ற சர்வதேசத் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பமாகியது. அப்படத்தின் பூஜை, படப்பிடிப்பில் கலந்து கொண்டது பற்றி கடந்த வாரம் தான் அப்டேட் கொடுத்திருந்தார் ஸ்ருதிஹாசன். திமேரி என் முராரி எழுதிய 'தி அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்' என்ற நாவலைத் தழுவி உருவாகும் படம் இது. சென்னை மாநகரப் பின்னணியில் காதல், காமெடி கலந்த படமாக ஆரம்பமானது. “புதிய நாள், புதிய படம், புதிய எனர்ஜி” … Read more

பாலா, கவுதம் மேனன், ஹரி, வரிசையில் சுதா கொங்கரா???

சூர்யாவும் அவருக்குத் திருப்புமுனை தந்த இயக்குனர்களும், அந்த இயக்குனர்களுக்கு பதிலுக்கு 'திருப்பு' முனை தந்த சூர்யாவும் எனவும் பேசலாம் போலிருக்கிறது. காதல் நாயகனாக வலம் வந்த சூர்யாவுக்கு 'நந்தா' படம் மூலம் ஒரு 'டெரர்' லுக்கைத் தந்து அவரை அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியவர் இயக்குனர் பாலா. அதற்குப் பிறகு 'காக்க காக்க' படத்தின் மூலம் அந்த மாற்றத்தை முன்னேற்றியவர் இயக்குனர் கவுதம் மேனன். அதற்கும் பிறகு மாற்றம், முன்னேற்றம், வசூல் என 'சிங்கம்' படம் மூலம் … Read more

புதிய சாதனை படைத்த 'புஷ்பா 2' டீசர்

தெலுங்குத் திரையுலகம் கடந்த சில வருடங்களில் பான் இந்தியா படங்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்து வருகிறது. பிரபாஸ், ராம் சரண், ஜுனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் ஆகியோர் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகர்களாக மாறியுள்ளார்கள். அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் 'புஷ்பா 2' படத்தின் டீசர் நேற்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. டீசர் வெளியான 12 மணி நேரங்களிலேயே 51 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தெலுங்கில் 24 … Read more

மாட்டிறைச்சி விவகாரம் : கங்கனா கொடுத்த பதிலடி

தமிழில் தாம்தூம், தலைவி, சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத். தற்போது பாஜக சார்பில் தனது சொந்த மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியை சார்ந்த விஜய் வடேட்டிவார் என்பவர், தனது எக்ஸ் பக்கத்தில், கங்கனா மாட்டிறைச்சியை விரும்புவதாகவும், அதை சாப்பிடுவதாகவும் பதிவிட்டதற்கு ஒரு பதிலடி கொடுத்து இருக்கிறார் கங்கனா. அதில், நான் மாட்டிறைச்சி மட்டுமின்றி வேறு எந்த வகையான … Read more

ரஜினி 171 வது படத்தில் இணைந்த விக்ரம் பட டெக்னீசியன்கள்

வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171 வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் வருகிற 22ம் தேதி டைட்டில் உடன் கூடிய டீசர் வெளியாக உள்ளது. இந்நிலையில் ரஜினி 171வது படத்திற்கான நடிகர் நடிகைகள் டெக்னீசியன்களை தற்போது ஒப்பந்தம் செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் விக்ரம் படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் அனிருத், ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் ஆகியோர் … Read more

'வனவாசம்' முடிந்து வந்துவிட்டேன் – கீர்த்தி சுரேஷ்

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது 'அக்கா' என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார். தர்மராஜ் ஷெட்டி இயக்கும் இத்தொடரில் 'கபாலி' பட கதாநாயகி ராதிகா ஆப்தேவும் நடிக்கிறார். இத்தொடரின் படப்பிடிப்பு கடந்த 40 நாட்களுக்கும் மேலாக கேரளாவில் நடந்துள்ளது. அது குறித்து கீர்த்தி சுரேஷ், “கேரளாவில் என்னுடைய வனவாசம் முடிந்து 40 நாட்கள் படப்பிடிப்புக்குப் பிறகு சோஷியல் மீடியாவிற்கும் திரும்பிவிட்டேன். அற்புதமான படப்பிடிப்பை முடித்து வீட்டுக்கு வந்துள்ளேன். என்னுடைய அடுத்த படப்பிடிப்புகளுக்காகக் காத்திருக்க … Read more

'ஹாட்ஸ்பாட்' 2ம் பாகம் அறிவிப்பு

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியிருந்த 'ஹாட் ஸ்பாட்' மார்ச் 29ம் தேதி வெளியானது. இந்த படத்தின் டீசரும், விளம்பரமும் இதை அடல்ட் கண்டன்ட் படமாக காட்டியதால் போதிய வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு இந்த படம் 4 கதைகளை கொண்ட வித்தியாசமான படம் என்ற விபரங்கள் வெளியாகின. இந்நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவை படக் குழுவினர் நடத்தினார்கள். இந்நிகழ்வில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியதாவது: திரையரங்கில் இப்போது படம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் வார இறுதியில் … Read more