‛பீட்சா 4' உருவாகிறது : தமிழுக்கு வரும் தெலுங்கு 'பிக் பாஸ்' ரத்திகா

தெலுங்கு 'பிக் பாஸ்' சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ் பெற்றவர் ரத்திகா. 'நேனு ஸ்டூடன்ட் சார்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் தயாராகும் பீட்சா 4ம் பாகத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த படத்தில் அவர் நாசர் மகன் அபி ஹசன் ஜோடியாக நடிக்கிறார். 'கடாரம் கொண்டான்' மற்றும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அபி ஹசன். எஸ் தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி … Read more

அபர்ணதி அம்மாவாக நடிக்கும் 'நாற்கரப்போர்'

வி6 பிலிம் சார்பில் எஸ்.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'நாற்கரப்போர்'. ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்ரீவெற்றி இயக்குகிறார். அபர்ணதி நாயகியாக நடிக்கிறார், இதில் அவர் 12 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்கிறார். 'சேத்துமான்' அஸ்வின், கபாலி லிங்கேஷ், சுரேஷ் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். பிரபல மலையாள இயக்குநர் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி, மற்றும் ஞானசேகரன் ஆகியோர் இப்படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்கள். சந்தோஷ் நாராயணனிடம் பல … Read more

படம் இயக்க தயாராகிறார் ஹரியின் மகன்

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஹரி. சாமி, சிங்கம் படங்களின் மூலம் புகழ் பெற்றவர். அருண் விஜய் நடிப்பில் 'யானை' படத்தை இயக்கியவர் தற்போது விஷால் நடிக்கும் 'ரத்னம்' படத்தை இயக்கி வருகிறார். நடிகர் விஜயகுமார் மகளும், நடிகையுமான ப்ரீத்தாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் மூத்தவர் ஸ்ரீராம் ஹரி தந்தையை போலவே சினிமா இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர். அதற்கான பயிற்சி எடுத்து வந்தார். இந்த நிலையில் அவா 'ஹம்' என்ற … Read more

அப்பாவிடம் ஏமாற்றி பணம் வாங்கி படம் தயாரித்தேன்: இயக்குனர் உருக்கம்

விநாயக் துரை என்ற புதுமுகம் தயாரித்து, இயக்கி உள்ள ஹைபர்லிங்க் படம் 'வல்லவன் வகுத்ததடா'. வரும் 11ம் தேதி வெளிவருகிறது. தனஞ்செயன் வெளியிடுகிறார். இப்படத்தில் தேஜ் சரண்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாக்ஷி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார், சகிஷ்னா சேவியர் இசை அமைத்துள்ளார். படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குனரும், தயாரிப்பாளருமான விநாயக் துரை பேசியதாவது : 2 வருட போராட்டம் … Read more

நகையை அடமானம் வைத்த சிம்பு பட இயக்குனர்: அதையும் ஆட்டைய போட்ட உதவியாளர்

துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க தயாராகி வருகிறார். தேசிங்கு பெரியசாமி, சென்னை அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரிடம் முகமது இக்பால் என்பவர் 2018ம் ஆண்டு முதல் உதவி இயக்குனராக பணி புரிந்து வருகிறார். தேசிங்கு பெரியசாமியின் அனைத்து விதமான வரவு, செலவு மற்றும் பண பரிவர்த்தனைகளையும் அவர் கவனித்து வந்தாக கூறப்படுகிறது. கடந்த … Read more

ஆடுஜீவிதம் சர்ச்சை : இயக்குனர் விளக்கம்

தேசிய விருது பெற்ற மலையாள இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'ஆடு ஜீவிதம்'. பிரபல மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய 'ஆடு ஜீவிதம்' என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் அமலா பால், ஜிம்மி ஜீன், கே.ஆர்.கோகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 29-ம் தேதி வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கேரளாவை சேர்ந்த நஜீப் என்பவர் வேலைக்காக அரபு நாட்டுக்கு … Read more

புஷ்பா 2 : பிறந்தநாளில் வெளியான ராஷ்மிகாவின் லுக்

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 பான்-இந்தியா படமாக ஆகஸ்ட் 15ல் வெளியாக உள்ளது. முதல்பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாய் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் தயாராகி வருகிறது. இன்று(ஏப்., 5) ராஷ்மிகாவின் பிறந்தநாளையொட்டி படத்தில் இருந்து அவரின் அழகான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். படத்தின் முதல் பாகத்தின் மூலம் முத்திரை பதித்த ஸ்ரீவள்ளி மீண்டும் இந்தப் பாகத்திலும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். முதல் பாகத்தை விட … Read more

தந்தை மறைவு : மீரா ஜாஸ்மின் உருக்கம்

லிங்குசாமி இயக்கிய ரன் படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதை தொடர்ந்து விஜய், அஜித் படங்களில் கதாநாயகியாக நடித்தவர். சண்டக்கோழி படத்தின் மூலம் இன்னும் பிரபலமானார். இந்த நிலையில் மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் நேற்று காலமானார். 83 வயதான இவர் வயோதிகம் காரணமாக மரணத்தை தழுவியுள்ளார். இவரது இறுதிச் சடங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தனது தந்தையின் இளமைக்கால புகைப்படம் உள்ளிட்ட சில புகைப்படங்களை தனது சோசியல் மீடியா … Read more

விமல் நடிக்கும் மா.பொ.சி படத்தின் போஸ்டர் வெளியீடு

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், மா.பொ.சி என்ற படத்தை தனது நிறுவனத்தின் சார்பில் வெளியிடுகிறார். கன்னி மாடம் என்ற படத்தை இயக்கிய நடிகர் போஸ் வெங்கட் இயக்கும் இந்த படத்தில் விமல் நாயகனாக நடிக்கிறார். தற்போது மா.பொ.சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் வகுப்பறையில் உள்ள கரும்பலகையில் சாக்பீசால் எழுதிக் கொண்டிருக்கிறார் விமல். இதை வைத்து பார்க்கும் போது அவர் படத்தில் ஆசிரியராக நடிப்பது தெரிகிறது. அதோடு அவரது … Read more

ரத்னம் பற்றி இயக்குனர் ஹரி வெளியிட்ட தகவல்

தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பின் விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ரத்னம். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில், ரத்னம் படத்தின் கதை குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஹரி. அதில், நாட்டில் 60 சதவீத பேர் கெட்டவர்கள், … Read more