ஒளிப்பதிவாளரை விவாகரத்து செய்த நடிகை

மலையாள சினிமாவின் முக்கியமான நடிகை மஞ்சு பிள்ளை. பழம்பெரும் நடிகர் எஸ்.பி.பிள்ளையின் மகள். குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். சிநேகிதியே, மன்மதன் அன்பு உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் முகுந்தன் என்ற தொலைக்காட்சி நடிகரை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு 2000மாவது ஆண்டில் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவை திருமணம் செய்து கொண்டார். சுஜித், கேரளா கபே, த்ரிஷ்யம், லூசிபர், மிஸ் … Read more

படம் புடிக்கலைனா செருப்பால அடிங்க : 'ஹாட்ஸ்பாட்' இயக்குனர் வேதனை

சமீபத்தில் வெளியான படம் ஹாட்ஸ்பாட். நான்கு கதைகள் மூலம் புதுமையான கருத்துக்களை சொன்ன படம். இந்த படத்தை விக்னேஷ் கார்த்திக் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். கலையரசன், சோபியா, சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சுபாஷ், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே.ஜே.பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியர் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே.ஜே.பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் தயாரித்துள்ளனர். படத்தை மீடியாக்கள் பாராட்டியபோதும் படத்திற்கு மக்கள் ஆதரவு இல்லாமல் … Read more

பிளாஷ்பேக்: முதல் அலிபாபா என்.எஸ்.கிருஷ்ணன்

புகழ்பெற்ற அரேபிய கதை 'ஆயிரத்தொரு இரவுகள்'. இதில் இடம் பெற்ற முக்கியமான கதை அலிபாபாவும், அலாவுதீனும். இரண்டுமே தமிழ் சினிமாவில் படமாகி உள்ளது. 1955ம் ஆண்டு வெளிவந்த எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழில் தயாரான முதல் கலர் (கேவா) படம் இது. அலிபாபா கதையில் முதலில் நடித்தது எம்.ஜி.ஆர். தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அலிபாபாவாக முதலில் நடித்தது என்.எஸ்.கிருஷ்ணன். 1941ல் வெளியான 'அலிபாபாவும் 40 … Read more

24ம் தேதி அபர்ணா தாஸ் திருமணம் : மஞ்சும்மேல் பாயை மணக்கிறார்

விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படத்தில் நடித்தவர் அபர்ணா தாஸ். அதன்பிறகு 'டாடா' படத்தில் நடித்து புகழ்பெற்றார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் 'ஆதிகேசவா' படத்திலும் நடித்தார். மலையாளத்தில் மனோஹரம், ப்ரியன் ஒட்டதில்லானு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 'சீக்ரெட் ஹோம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அபர்ணா தாஸ் தன் காதலையும், திருமணத்தையும் ஏற்கெனவே அறிவித்து விட்டார். அவரது திருமணம் வருகிற 24ம் தேதி கேரளாவின் வடக்கன்சேரியில் நடக்கிறது. எளிமையாக நடக்கும் இந்த திருமணத்தில் நெருங்கிய … Read more

தெலுங்கில் வசூலைக் குவிக்கும் 'தில்லு ஸ்கொயர்'

தமிழ் சினிமா மட்டும் இந்த ஆண்டில் தடுமாறிக் கொண்டிருக்க, மற்ற தென்னிந்திய மொழி சினிமாக்களில் குறைந்த பட்சம் ஒரு சில படங்களாவது வசூலை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தெலுங்கில் கடந்த வாரம் வெளியான 'தில்லு ஸ்கொயர்' என்ற படம் 80 கோடி வசூலைக் கடந்துள்ளது. மாலிக் ராம் இயக்கத்தில், சித்து ஜொன்னலகட்டா, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் என்டர்டெயின்மென்ட் ஆக அமைந்துள்ளது. காமெடியும், கிளாமருமாக நகரும் படத்தில் முத்தக் … Read more

சீரியலை விட்டு விலகிய தர்ஷனா : புதிய அன்பரசி யார் தெரியுமா?

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் கனா தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த தொடரில் நாயகியாக தர்ஷனா அசோகன் நடித்து வந்த நிலையில், திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளார். இதனையடுத்து அன்பரசி கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக்கொண்டது. தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வரும் டோனிஷா என்பவரை அன்பரசி கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் செய்துள்ளனர். சோசியல் மீடியாவில் ஏற்கனவே பிரபலமாகியுள்ள … Read more

செப் தாமுவின் இளம் வயது புகைப்படம் வைரல்

பிரபல சமையல் கலைஞரான செப் தாமு, ‛குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் செலிபிரேட்டியாக மாறியுள்ளார். சோஷியல் மீடியாக்களில் அவருக்கு ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். அவரும் மற்ற செலிபிரேட்டிகளை போலவே தன் அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் அண்மையில் திருமணத்திற்கு முன் எடுத்த தனது இளமைகால புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படமானது தற்போது வைரலாகி செப் தாமுவா இவர்? என ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

ஏப்ரல் 11ல் மலையாளத்தில் வாரிசுகளின் கூட்டணியும் மோதலும்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தமிழ் புத்தாண்டில் பெரிய நடிகர்கள் தங்களது படங்களை ரிலீஸ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் தற்போது ஒரு பக்கம் தேர்தல், இன்னொரு பக்கம் கிரிக்கெட் போட்டிகள் என இரண்டு பக்கமும் நெருக்கடி இருப்பதால் இந்த முறை தமிழ் புத்தாண்டு ரிலீஸ் பெரிய அளவில் களை கட்டவில்லை. அதேசமயம் கேரளாவிலும் சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு தங்களது படங்களை வெளியிட பிரபல ஹீரோக்களும், இயக்குனர்களும் ஆர்வம் காட்டுவார்கள். அந்தவகையில் இந்த முறை தேர்தலும், கிரிக்கெட் … Read more

காதலருடன் மும்பையில் காரில் பயணித்த பூஜா ஹெக்டே

தெலுங்கு முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே தற்போது ஹிந்தியில் சாஹித் கபூர் ஜோடியாக 'தேவா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் பாலிவுட் வாரிசு நடிகரான ரோஹன் மெஹ்ரா என்பவருடன் கடந்த சில வருடங்களாக காதலில் விழுந்துள்ளார் என்று செய்தி மட்டும் வெளியானது. ஆனால் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாக எந்த ஒரு புகைப்படமோ, வீடியோவோ இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் ரோஹன் மெஹ்ராவுடன் பூஜா ஹெக்டே ஒரு காரில் … Read more

'தலைவர் தரிசனம்' : நெகிழும் மஞ்சும்மேல் பாய்ஸ் வாரிசு நடிகர்

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் வெளியானது. கிட்டத்தட்ட முற்றிலும் புது முகங்கள், குறைந்த பட்ஜெட் என்கிற அளவில் வெளியான இந்த படம் கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இங்கே கமல்ஹாசன், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தினர். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த்தும் மஞ்சும்மேல் பாய்ஸ் படம் பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இது … Read more