மத்திய அரசு உத்தரவை ஏற்று… காங்கிரஸ் ஆளும் தெலுங்கானாவில் லோக் பவன் என உடனடியாக பெயர் மாற்றம்

ஐதராபாத், நாட்டின் மாநிலங்களில் மத்திய அரசு பிரதிநிதியாக செயல்படும் கவர்னர்கள் தங்க கூடிய கவர்னர் மாளிகை, ராஜ் பவன் என்று அழைக்கப்படுகிறது. மாநிலங்களில் கவர்னர்களும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களும் பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜ் பவன் பெயரை, லோக் பவன் என மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் கவர்னர்களின் மாநாடு புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் … Read more

முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்: சூர்யவன்ஷி புதிய சாதனை

ஆமதாபாத், 18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதன் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. இதில் கொல்கத்தாவில் நடந்த ஒரு ஆட்டத்தில் (பி பிரிவு) மராட்டிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பீகாரை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது. இதில் வைபவ் சூர்யவன்ஷி சதத்தின் (ஆட்டமிழக்காமல் 108 ரன், 61 … Read more

உயிரியல் பூங்காவில் தடுப்புச் சுவரை தாண்டி குதித்த வாலிபரை தாக்கி கொன்ற சிங்கம்

பிரேசிலியா, பிரேசிலின் ஜோவா பெசோவா நகரில் ஜூபோடானியோ அருடா கமாரா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. அங்கு சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. இதனை காண நண்பர்கள் சிலர் அங்கு சென்றிருந்தனர். அதில் மச்சாடோ (வயது 20) என்ற வாலிபர் ஆர்வ மிகுதியில் தடுப்புச்சுவரை தாண்டி உள்ளே சென்றார். பின்னர் அங்கிருந்த ஒரு மரம் வழியாக கீழே இறங்க முயன்றார். அப்போது அங்கிருந்த ஒரு சிங்கம் அவரை தாக்கி இழுத்து சென்றது. இதில் படுகாயம் அடைந்த மச்சாடோ … Read more

அதிர்ச்சி சம்பவம்.. கள்ளக்காதலி, மகனை கொலை செய்து விட்டு தொழிலாளி செய்த விபரீத செயல்

திருப்பதி, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் சத்யராஜ், கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். திருப்பதி அருகே திருச்சானூர், தாமினேடு, இந்திரம்மா காலனியை சேர்ந்தவர் நாயகி. இவருடைய மகன் மனிஷ் (வயது 3). நாயகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக மகனுடன் வசித்து வந்தார். நாயகி குடியாத்தத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்போது சத்யராஜுக்கும், நாயகிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த 3 … Read more

உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் விராட் கோலி

புதுடெல்லி, ராஞ்சியில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி விராட் கோலியின் சதம் (135 ரன், 120 பந்து, 11 பவுண்டரி, 7 சிக்சர்), ரோகித் சர்மா (57 ரன்), கேப்டன் கே.எல். ராகுல் (60 ரன்) ஆகியோரது அரைசதங்களால் 8 விக்கெட்டுக்கு 349 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 49.2 ஓவர்களில் … Read more

ரஷிய கப்பல்கள் மீது தாக்குதல்… உக்ரைனை கடலில் இருந்தே துண்டித்து விடுவோம்: புதின் மிரட்டல்

மாஸ்கோ, ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், கருங்கடலில் சென்று கொண்டிருந்த ரஷியாவின் 2 கப்பல்களை கடந்த வாரத்தில், நீருக்கடியில் இருந்து ஆளில்லா விமானம் கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இது ரஷியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மிரட்டல் விடும் வகையில் பேசியுள்ளார். இந்நிலையில், ரஷியாவின் முன்னணி செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், உக்ரைனை கடலில் இருந்தே … Read more

கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் – 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

பெலகாவி, கர்நாடக மாநிலம் பெலகாவி (மாவட்டம்) தாலுகா முர்கோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். அந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் கடந்த மாதம் (நவம்பர்) 23-ந்தேதி அந்த மாணவி, தனது வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள மாவு அரைவை ஆலைக்கு மாவு அரைக்க சென்றாள். அப்போது அங்கு அதேப்பகுதியை சேர்ந்த மணிகண்டா தின்னிமணி, ஈரண்ணா ஆகியோர் வந்தனர். … Read more

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் ஜெர்சி இன்று அறிமுகம்

மும்பை, நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 20 அணிகள் பங்கேற்கும் 10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, முதல் முறையாக தகுதி பெற்றுள்ள இத்தாலி உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். … Read more

பெரு நாட்டில் ஆற்றில் படகுகள் கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு

லிமா, தென் அமெரிக்க நாடான பெருவின் உகாயாலி நகரில் உள்ள அமேசான் ஆற்றங்கரையில் படகுகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அப்போது திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஆற்றங்கரையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் கரையோரம் நிறுத்தப்பட்டு இருந்த 2 படகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பின்னர் அந்த இரு படகுகளும் கவிழ்ந்து அதில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கினர். தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் செல்வதற்குள் குழந்தைகள் உள்பட 12 பேர் ஆற்றில் மூழ்கி … Read more

கனமழை எதிரொலி: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

புதுச்சேரி, வங்கக் கடலில் உருவான ‘டிட்வா’ பயுல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. இந்தநிலையில் புயல் வலுவிழந்து தாழ்வு மண்டலமாக உருமாறியது. தொடர்ந்து புதுச்சேரியில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது விட்டுவிட்டு மழை தூறியது. நேற்று இரவு 9 மணியளவில் இருந்து சுமார் 1 மணி நேரம் பரவலாக மழை பெய்தது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் … Read more