செர்பியா அரசில் ஊழல்; ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்ப்பு பேரணி

நோவி சாத், செர்பியா நாட்டில் ஜனாதிபதியாக அலெக்சாண்டர் உசிக் பதவி வகித்து வருகிறார். அவருடைய அரசில் பெரிய அளவில் ஊழல்கள் நடந்து வருகின்றன என கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அதில், அரசில் உள்ள ஊழல் அதிகாரிகளை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்களின் சொத்துகளை பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் கோரி உள்ளனர். இதற்காக மாணவர்கள் ஒன்றாக கூடி, தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு … Read more

போலந்து துணை பிரதமருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்திப்பு

புதுடெல்லி, போலந்து நாட்டின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு துறை மந்திரியான ரதோஸ்லாவ் சிகோர்ஸ்கி இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 17-ந்தேதி இந்தியாவுக்கு வருகை தந்த அவரை, டெல்லியில் கூடுதல் செயலாளர் பூஜா கபூர் வரவேற்றார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகருக்கு வருகை தந்த அவர், ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் நேற்று கலந்து கொண்டார். இந்நிலையில், இன்று காலை அவர் டெல்லி சென்று சேர்ந்துள்ளார். டெல்லியில் அவர், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை இன்று … Read more

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு பதிலடி கொடுக்குமா குஜராத்? – வதோதராவில் இன்று மோதல்

வதோதரா, 5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டின் முதற்கட்ட ஆட்டங்கள் நவி மும்பையில் நடந்தன. இந்த நிலையில் ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடக்கிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 12-வது லீக்கில் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்சுடன் மல்லுகட்டுகிறது. … Read more

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு

பீஜிங், சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், திபெத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.27 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக தேசிய … Read more

அமீரக அதிபர் இன்று இந்தியா வருகை; பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்

புதுடெல்லி, அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக இன்று (திங்கட்கிழமை) வருகிறார். சமீபத்தில் அமீரகம் சென்ற மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமிடம் பிரதமர் மோடியின் அழைப்பை வழங்கினார். அந்த அழைப்பை ஏற்று இந்த சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவருடன் அமீரகத்தின் பல மந்திரிகள், மூத்த அதிகாரிகள், உயர் மட்ட வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் … Read more

இந்திய ஓபன் பேட்மிண்டன்: லின் சுன் யி, அன்சே யங் சாம்பியன்

புதுடெல்லி, இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் சீனதைபே வீரர் லின் சுன் யி, இந்தோனேசிய வீரர் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லின் சுன் யி 21-10, 21-18 என்ற நேர் செட்டில் ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவர் பேட்மிண்டனில் சூப்பர்750 வகை … Read more

ஸ்பெயினில் அதிவிரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து; 10 பேர் பலி

மாட்ரிட், ஸ்பெயினில் கார்டோபா மாகாணத்தில் மலகா பகுதியில் இருந்து மாட்ரிட்-பூர்டா டி அதோசா நகர் நோக்கி ஐரியோ என்ற தனியார் நிறுவனத்தின் அதிவிரைவு ரெயில் ஒன்று திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இது அடுத்திருந்த மற்றொரு தண்டவாளத்தில் சென்றது. அப்போது, மாட்ரிட் நகரில் இருந்து ஹுவெல்வா நோக்கி சென்ற அரசால் நடத்தப்படும் ரெயில் மீது மோதியது. இந்த சம்பவத்தில் பயணிகள், ரெயில் பெட்டிகளுக்குள் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். ஜன்னலை உடைத்து கொண்டு வெளியேறும்போது, … Read more

சத்தீஷ்கார்: 2 நாட்களில் முக்கிய தலைவர் உள்பட 6 நக்சலைட்டுகள் படுகொலை

ராய்ப்பூர், சத்தீஷ்காரில் பிஜாப்பூர் மாவட்டத்தில் வன பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என உளவு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், காட்டில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், படையினரை நோக்கி திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நீண்டநேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சம்பவத்தில் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. … Read more

விராட் கோலியின் சதம் வீண்…இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்து தொடரை வென்ற நியூசிலாந்து

சென்னை, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் 2 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்தநிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என்ற கணக்கில் இருந்தது. அதனை தொடர்ந்து இந்த ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரை கைப்பற்றும் என்பதால் … Read more

வங்காளதேசத்தில் இந்து வியாபாரி அடித்து கொலை

டாக்கா, வங்காளதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் 9 இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்துக்கள் வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் மேலும் ஒரு இந்து கொலை செய்யப்பட்டார். காஜிபூர் மாவட்டம் காளிகஞ்ச் பகுதியில் ஓட்டல் மற்றும் இனிப்பு கடை நடத்தி வந்தவர் லிட்டன் சந்திர கோஷ் (வயது 55). இவரது கடைக்கு மசூம் மியா என்ற வாலிபர் வந்தார். அப்போது … Read more