கர்நாடகாவில் சோகம்; ஒரே பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் விபத்தில் பலி

பெங்களூரு, கர்நாடகாவின் தேவனஹள்ளி நகரில் அகலகோட் கிராமம் அருகே மாநில நெடுஞ்சாலையில் இளைஞர்கள் 3 பேர் ஒரே பைக்கில் சென்றுள்ளனர். அவர்கள் தேவனஹள்ளியில் இருந்து புடிகெரே சாலையை நோக்கி சென்றபோது, விரைவாக எதிரே வந்த லாரி ஒன்று அவர்களின் பைக் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து லாரியில் இருந்த ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று அவர்களை மீட்க முயற்சித்தனர். ஓட்டுநர்களின் அலட்சியத்தினால் இதுபோன்ற விபத்துகள் … Read more

சின்னசாமி மைதானத்திற்கு கிடைத்தது கிரீன் சிக்னல்…ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி

பெங்களூரு , பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா, நடக்காதா?” என்று தவித்துக் கொண்டிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ரசிகர்களுக்கு, தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஐபிஎல் 2026 தொடரின் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் நடத்த கர்நாடக அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதுகுறித்து கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் , “பெங்களூரு சின்னசாமி திடலில் சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளை நடத்த மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு கர்நாடக அரசின் உள்துறை அனுமதி … Read more

கிரீன்லாந்து மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்: ஐரோப்பிய ஆணைய தலைவர் பேச்சு

பிரஸ்ஸல்ஸ், உலக நாடுகளுக்கு கடுமையான வரி விதிப்புகள், எண்ணெய் வளம் கொண்ட வெனிசுலாவின் அதிபர் கைது, வெனிசுலாவின் பல கோடி மதிப்பிலான எண்ணெய் பீப்பாய்கள் கொள்முதல், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிப்புகள் என அதிரடி காட்டி வரும் அமெரிக்கா, அடுத்து கிரீன்லாந்து மீதும் குறி வைத்துள்ளது. கிரீன்லாந்து தனக்கு வேண்டும் என டிரம்ப் கூறி வருகிறார். இதற்கு பிற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர்களிடம் … Read more

ம.பி.: ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை துவக்கி வைத்த மத்திய மந்திரி கட்காரி

விதிஷா, மத்திய பிரதேசத்தின் விதிஷா நகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான 8 தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான திட்ட பணிகளை மத்திய மந்திரி நிதின் கட்காரி துவக்கி வைத்துள்ளார். இதனுடன், ரூ.450 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டன. இதேபோன்று, ரூ.16 ஆயிரம் கோடி செலவில் விதிஷா-சாகர்-கோட்டா பசுமை விரைவு சாலை அமைப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது என கட்காரி மேடையில் அறிவித்தார். இதுதவிர, மத்திய பிரதேசத்திற்கு மத்திய சாலை நிதியின் கீழ் ரூ.1,600 கோடியை நிதின் … Read more

யு19 உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

புலவாயோ, 16-வது இளையோர் (19 வயதுக்கு உட்பட்டோர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் புலவாயோவில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, வங்காளதேசத்தை (பி பிரிவு) எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த … Read more

கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டை எதிர்க்கும் நாடுகளுக்கு வரி: பிப்.1-ம் தேதி முதல் அமல் – டிரம்ப் அறிவிப்பு

நூக் [கிரீன்லாந்து], அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் உருவாவதற்கான பணிகளை செய்வேன் என உறுதியேற்று செயலாற்றி வரும் ஜனாதிபதி டிரம்ப். அதற்காக பிற நாடுகளின் மீது கடுமையான வரிகளை விதித்து உத்தரவிட்டு வருகிறார். இதனால், அமெரிக்க கஜானாவுக்கு நிறைய டாலர்கள் வந்து குவியும் என கணக்கு போடுகிறார். சமீபத்தில், உலக அளவில் பெரிய எண்ணெய் இருப்பு கொண்ட வெனிசுலாவின் அதிபரை கைது செய்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்தினார். உலக நாடுகளை அதிர செய்த இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக கொலம்பியாவை … Read more

பள்ளிக்கூட பையில் பதுங்கி இருந்த விஷ பாம்பு.!

திருவனந்தபுரம், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அத்தாணி அருகே எலவக்காட்டு வீட்டை சேர்ந்தவர் அப்துல் அஸீஸ். இவரது மகன் சிராஜ், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கூடம் சென்ற சிராஜ் மாலையில் டியூசனுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினான். பள்ளிக்கூட பையை வீட்டில் இருந்த மேஜையில் வைத்தான். நேற்று காலை வீட்டை சுத்தம் செய்தபோது சிராஜின் பள்ளிக்கூட பையை எடுத்து ஓரமாக வைக்கப்பட்டது. அப்போது அந்த பையில் நாகப்பாம்பு … Read more

கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

இந்தூர், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் வதோதராவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான, ஒருநாள் தொடரை வெல்லப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் … Read more

இலங்கையில் 3-வது பெய்லி பாலம் கட்டுமான பணியை நிறைவு செய்த இந்திய ராணுவம்

கொழும்பு, இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தின் தொடர்ச்சியாக பெய்த கனமழையால், வரலாறு காணாத பாதிப்புகளை மக்கள் சந்தித்தனர். கனமழையால், நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுதவிர டிட்வா புயலும், இலங்கையை கடுமையாக தாக்கியது. இதனால் 600-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. பலர் காயமடைந்து உள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவித்தது. புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள … Read more

டெல்லி-பாட்னா தேஜஸ் ராஜ்தானி ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் அச்சம்

பாட்னா, டெல்லியில் இருந்து பீகாரின் பாட்னா நகர் நோக்கி தேஜஸ் ராஜ்தானி ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில், ரெயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் கூறியுள்ளார். இதனால், நேற்றிரவு ரெயிலில் சோதனை நடந்தது. உடனடியாக, ரெயிலை நிறுத்தி விரிவான சோதனையில் பாதுகாப்பு குழுவினர் ஈடுபட்டனர். வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர், மோப்ப நாய் பிரிவினர், தீயணைப்பு அதிகாரிகள், உள்ளூர் போலீசார், அரசு நிர்வாகத்தினர், மண்டல … Read more