இறந்தவரின் தொடையில் உயிருடன் இருந்த வெளியே வந்த பாம்பு – பிரேத பரிசோதனையில்…அலறி அடித்து ஓடிய பெண்…!

நியூயார்க், ஜெசிகா லோகன் என்ற 31 வயது பெண் அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் பிரேத பரிசோதனை செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். மருத்துவமனையில் ஜெசிகா 9 ஆண்டுகளாக இந்த பணியில் உள்ளார். இந்நிலையில், தனக்கு நேர்ந்த ஒரு திகில் அனுபவத்தை ஜெசிகா பற்றி பகிர்ந்துள்ளார். ஒரு முறை, இறந்தவரின் உடலில் பிரேத பரிசோதனை செய்துக்கொண்டிருந்தபோது, அந்த உடலில் இருந்து பாம்பு ஒன்று உயிருடன் வெளிவருவதை பார்த்துள்ளார். பாம்பு அந்த நபரின் தொடை பகுதியிலிருந்து வெளிவந்ததை பார்த்த ஜெசிகா … Read more

கடந்த 6 ஆண்டுகளில் எம்.பி., எம்எல்ஏக்களின் மீது 56 வழக்குகள் பதிவு

புதுடெல்லி, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று காலை கூடியது. இந்தக்கூட்டத்தொடர்தான், தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகிற கடைசிக்கூட்டத்தொடர் ஆகும். இந்தக் கூட்டத்தொடர் மொத்தம் 23 நாட்கள் நடக்கும். 17 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் 29-ந் தேதி முடிவுக்கு வருகிறது.இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. நிர்வாகத்தை பலப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், பொறுப்புணர்வை அதிகரித்தல் மற்றும் பல மாநில கூட்டுறவுச் சங்கங்களில் தேர்தல் செயல்முறையை சீர்திருத்துதல் ஆகிய நோக்கங்களுடன் தற்போதுள்ள … Read more

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: மீராபாய் சானு வெள்ளி வென்று அசத்தல்

பொகோட்டா, கொலம்பியாவில் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு மொத்தம் 200 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். சீனாவின் ஒலிம்பிக் சாம்பியனான ஹூ ஜிஹுவாவை வீழ்த்தி மீரா பாய் சானு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இந்த பிரிவில் மற்றொரு சீன வீரரான ஜியாங் ஹுய்ஹுவா, (206 கிலோ) எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மீராபாய் … Read more

இந்தோனேசியா: போலீஸ் நிலையத்திற்கு புகுந்து தற்கொலைப்படை தாக்குதல் – போலீஸ் அதிகாரி பலி

ஜகார்தா, ஆயிரக்கணக்கான தீவுகளை கொண்ட தீவு நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் முக்கிய தீவு மாகாணமான ஜாவா தீவி பண்டங்க் என்ற நகரம் உள்ளது. பண்டங்க் நகரில் அஸ்தனா அன்யர் என்ற பகுதியில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்நிலையில், இந்த போலீஸ் நிலையத்தில் இன்று இன்று காலை போலீசார் வழக்கமான அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, உடல் முழுவதும் வெடிகுண்டை கட்டிக்கொண்டு ஒரு நபர் பைக்கில் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்தார். அங்கு அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் அருகே … Read more

கொரோனா உயிரிழப்பு; உறவினர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்குகிறோம்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வருகிற டிசம்பர் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில், நாட்டில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மேலவையில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வ கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து இன்று பேசினார். அவர் பேசும்போது, பேரிடர் மேலாண் சட்டம் 2005-ன் கீழ் தேசிய பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்ட … Read more

4 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவின் கேப்டன் பொறுப்பேற்கும் ஸ்டீவ் ஸ்மித்

அடிலெய்டு, 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தை சேதப்படுத்தினர். இந்த விவகாரத்தில் அப்போது அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இருவருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது. மற்றொரு வீரர் பான்கிராப்ட்க்கு 9 மாத காலம் தடை விதித்தது. அந்த சம்பவத்தை அடுத்து ஸ்மித்தின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. இரு ஆண்டுகள் … Read more

பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்ட விவகாரத்தில் சவுதி இளவரசருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

வாஷிங்டன், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்ட வழக்கில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிரான வழக்கை அமெரிக்க பெடரல் நீதிபதி நேற்று தள்ளுபடி செய்தார். 59 வயதான ஜமால் கசோகி சவுதி அரேபிய அரச குடும்பத்தின் தீவிர விமர்சகராக இருந்தார். கடந்த 2017-ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார். துருக்கி பெண்ணான ஹதீஜா ஜென்கிஸை காதலித்தார். அவரை திருமணம் செய்ய முடிவு செய்த அவர், முதல் திருமணத்தின் … Read more

குளிர்கால கூட்டத்தொடர்; முதல் நாளில் ஊடகங்களுடன் பிரதமர் மோடி உரையாடல்: மக்களவை செயலகம்

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நாளை முதல் தொடங்கி வருகிற டிசம்பர் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடப்பட்டது. நாடாளுமன்றத்தின் வளாகத்தில் மத்திய ராணுவ மந்திரி மற்றும் மக்களவையின் துணை தலைவரான ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் முறைப்படி இன்று கூடியது. இந்த கூட்டத்தில், அரசு சார்பில் நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்ற இணை மந்திரிகள் முரளீதரன் மற்றும் அர்ஜூன் ராம் மேக்வால் … Read more

2-வது ஒருநாள் போட்டி: பதிலடி கொடுக்குமா இந்தியா ? வங்காளதேசத்துடன் நாளை மோதல்

மிர்பூர், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் மிர்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.- இந்தியா-வங்காளதேச அணிகள் மேலும் 2-வது ஒரு நாள் போட்டி மிர்பூரில் நாளை (7-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இந்த ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. வெற்றிபெற … Read more

ஹிஜாப் 'அறநெறி போலீஸ்' பிரிவை ஈரான் கலைத்ததை நம்ப மறுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்…!

தெஹ்ரான், இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரான். அந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தவும் ‘அறநெறி போலீஸ்’ பிரிவு செயல்பட்டு வருகிறது. இதனிடையில் ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறு போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். … Read more