உலககோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் அணிக்கு இத்தனை கோடியா..? – வியக்க வைக்கும் பரிசுத்தொகை

தோகா, பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்திவருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழா. 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. இந்த கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு … Read more

நிலவு ஆய்வு பணி: நீண்ட போராட்டத்திற்கு பின் விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்

புளோரிடா, அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு நிலவுக்கு கடந்த 1972-ம் ஆண்டில் விண்வெளி வீரர்களை அனுப்பியது. அதன்பின் கடந்த 50 ஆண்டுகளாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் பரிசோதனை முயற்சி நிறைவேறவில்லை. இந்த நிலையில், மீண்டும் நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் திட்டத்தில் முனைப்புடன் நாசா அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதன்படி, வருகிற 2025-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆர்டெமிஸ் என்ற ராக்கெட் அனுப்பும் … Read more

குஜராத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் மாயம்: பாஜக கடத்தி விட்டதாக மணிஷ் சிசோடியா குற்றச்சாட்டு

காந்திநகர், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், சூரத் (கிழக்கு) தொகுதி வேட்பாளாராக அறிவிக்கப்பட்டு இருந்த கஞ்சல் ஜரிவாலை பாஜக கடத்தி விட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. வேட்பு மனுவை … Read more

உலக கோப்பையை வெல்ல பிரேசில், பிரான்சுக்கு அதிக வாய்ப்பு – மெஸ்சி கணிப்பு

தோகா, 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. இந்த கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 20-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கத்தார்- ஈகுவடார் அணிகள் (இந்திய நேரப்படி இரவு 9.30 மணி) சந்திக்கின்றன. இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வரும் 35 வயதான நட்சத்திர வீரர் … Read more

புளூ டிக் கட்டண சேவை வரும் 29-ந்தேதி முதல் அமலாகிறது: எலான் மஸ்க் அறிவிப்பு

நியூயார்க், சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார். இந்த டுவிட்டரை பயன்படுத்துவோருக்கான சிறப்பம்சங்களில் ஒன்றாக, தங்களுடையது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு என உறுதிப்படுத்தி கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். இந்த புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.1600 வரை (19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என முதலில் … Read more

குஜராத் சட்டமன்ற தேர்தல்: சோனியா, ராகுல் பிரசாரம்- நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

அகமதாபாத், பாஜக ஆட்சி நடைபெற்றும் வரும் குஜராத்தில் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 27 ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, … Read more

கொரோனா தடுப்பூசி சர்ச்சை: நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

மெல்போர்ன், செர்பியா டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் விளையாடுவது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. கடந்த ஆஸ்திரேலிய ஓபனில் அவர் விளையாட அனுமதிக்கப்படவில்லை. ஜோகோவிச் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும், 2023-ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அவர் பங்கேற்க விசா வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு, ஆஸ்திரேலிய அரசு அங்கு வரும் பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கியது. ஆனால், ஜோகோவிச் தடுப்பூசி போட மறுத்துவிட்டார். அதன் பிறகு … Read more

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு கொரோனா தொற்று உறுதி

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு (வயது 71) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். எகிப்தில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்ற அவர் அங்கிருந்து, தனது மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க லண்டனுக்கு சென்று அங்கிருந்து பாகிஸ்தான் திரும்பிய மறுநாள் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி மரியம் அவுரங்கசீப் தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக பிரதமருக்கு கொரோனா … Read more

2022 – உலககோப்பை கால்பந்து கொண்டாட்டம்:சிறிய நாடு நடத்தும் பெரிய திருவிழா முழு விவரம்

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்திவருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழா. உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022 இந்த மாதம் 20ஆம் தேதி கத்தாரில் தொடங்கப்பட உள்ளது.கத்தார் கால்பந்தின் மிகப்பெரிய போட்டியை நடத்தும் மத்திய கிழக்கு நாடுகளில் முதல் நாடாகும். 1963-ம் ஆண்டு பிபாவின் அங்கீகாரம் பெற்ற கத்தார், ஒருமுறை கூட கால்பந்து போட்டிக்கு தகுதி … Read more

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை வெளியீடு

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) பக்தர்கள் ஆர்ஜித சேவையில் பங்கேற்று வழிபட நாளை (புதன்கிழமை) காலை 10 மணியளவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் தங்களுக்கு தேவையான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம். மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தினத்தந்தி Related Tags … Read more