பிரேசில் அதிபர் தேர்தல்: மீண்டும் வெற்றி பெறுவாரா ஜெயீர் போல்சனரோ..?

பிரேசிலியா, உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ மீண்டும் போட்டியிடுகிறார். அவர் உள்பட மொத்தம் 9 பேர் அதிபர் பதவிக்கான போட்டியில் களத்தில் … Read more

விண்வெளியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட மங்கள்யான் விண்கலம் செயலிழந்தது

பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு ரூ.450 கோடி செலவில் பி.எஸ்.எல்.வி.-25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அது 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந் தேதி செவ்வாய் கிரக கோளப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அதன் செயல்பாடு நின்றுள்ளது. இதன் மூலம் மங்கள்யான் விண்கலம் விடை பெற்று கொண்டது. இதுகுறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறியதாவது:- மங்கள்யான் விண்கலத்தில் … Read more

டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்த இரு அணிகளுக்கு தான் அதிக வாய்ப்பு – ஷேன் வாட்சன்

8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் … Read more

இந்தோனேசியா: கால்பந்து ரசிகர்கள் வன்முறையில் 174 பேர் உயிரிழந்த சம்பவம்- அந்நாட்டு அதிபர் இரங்கல்

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் மலாங் நகரில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து போட்டி நடந்தது. இதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா சுரபயா அணிகள் களம் கண்டன. கால்பந்து போட்டியை காண சுமார் 42 ஆயிரம் பார்வையாளர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். அவர்கள் அனைவருமே அரேமேனியாக்கள் என்று அழைக்கப்படும் அரேமா கால்பந்து அணியில் ரசிகர்கள் ஆவர். வீண் சச்சரவுகளை தவிர்க்கும் பொருட்டு பெர்செபயா சுரபயா கால்பந்து அணியின் ரசிகர்கள் யாரும் மைதானத்தில் … Read more

உ.பி.யில் துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து: 42 பேர் காயம்!

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை பந்தலில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 42 பேர் காயமடைந்தனர். இரவு 9.30 மணியளவில் ஆரத்தி நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த தீ விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின் போது பந்தலுக்குள் சுமார் 300 பேர் இருந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த தகவலறிசம்பவந்து தீயணைப்பு வீரர்கள் உடனே அங்கு சென்று தீயை அணைத்தனர். மீட்புப் பணிகளை மேற்பார்வையிட … Read more

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி: பெரம்பலூர்-சென்னை அணிகள் இறுதி போட்டியில் மோதுகின்றன

பெரம்பலூர் தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் சார்பில் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான 13-வது மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தின் விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் அரையிறுதி போட்டிகள் நடந்தது. இதில் பெரம்பலூர்-திருப்பத்தூர் அணிகள் மோதின. மற்றொரு ஆட்டத்தில் சென்னை-அரியலூர் அணிகள் மோதின. இதில் பெரம்பலூர் அணியும், சென்னை அணியும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தன. இறுதி போட்டி இன்று (திங்கட்கிழமை) … Read more

மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது – 3 வீரர்கள் உயிரிழப்பு

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ நாட்டின் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, தென்கிழக்கு மாகாணமான தபாஸ்கோவில் கவுதமலா நாட்டு எல்லைக்கு அருகே வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. ஹெலிகாப்டரில் விமானிகள் உள்பட கடற்படை வீரர்கள் 5 பேர் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் தபாஸ்கோவில் உள்ள சென்ட்லா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். எனினும் அதற்குள் … Read more

சோனியாகாந்தி குடும்பம் என்னை ஆதரிப்பதாக கூறுவது தவறு – மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல், வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர், கே.என்.திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். திரிபாதியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால், மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் மட்டும் களத்தில் உள்ளனர். இந்தநிலையில், மல்லிகார்ஜுன கார்கே நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சோனியாகாந்தி குடும்பத்தின் ஆதரவு பெற்றவராக அவர் கருதப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:- சோனியாகாந்தி குடும்பம் என்னை ஆதரிப்பதாக … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டி: இந்திய கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை

கவுகாத்தி, இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. அதில் முதல் மற்றும் 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி வரும் செவ்வாய் கிழமை நடைபெறுகிறது. இதில் நேற்று நடந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய … Read more

இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு அமல்..!

இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என அந்நாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. 92 ரக பெட்ரோலின் விலையில் 40 ரூபாய் குறைக்கப்பட்டு 410 ரூபாய்க்கும், 95 ரக பெட்ரோலின் விலையில் 30 ரூபாய் குறைக்கபப்ட்டு 510 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பிற எரிப்பொருள்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் பெட்ரோல் விலையை குறைக்க உள்ளதாக வெளியான தகவல் இலங்கை மக்களுக்கு … Read more