ஒடிசா: நடுக்கடலில் சென்று கொண்டிருந்த படகில் திடீர் தீ விபத்து – 10 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

புவனேஸ்வர், ஒடிசா கடற்கரையில் உள்ள நடுக்கடலில் சென்று கொண்டிருந்த படகில் திடீரென தீப்பிடித்தது. படகில் இருந்த மீனவர்கள் 10 பேர் காயமின்றி உயிர் தப்பினர். ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் உள்ள தாம்ரா பகுதியில் உள்ள தோசிங்கா கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென படகில் தீப்பிடித்தது. வீலர்ஸ் தீவு அருகே சென்றபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதைத் தொடர்ந்து, கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீப்பிடித்த படகில் இருந்த … Read more

பெண்கள் ஆசிய கிரிக்கெட்: தாய்லாந்து, வங்காளதேச அணிகள் வெற்றி

சில்ஹெட், 7 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் தாய்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 116 ரன்கள் எடுக்க, அந்த இலக்கை தாய்லாந்து ஒரு பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்து வரலாறு படைத்தது. குட்டி அணியான தாய்லாந்துக்கு இது மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகும். … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.51 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 55 லட்சத்து 47 ஆயிரத்து 319 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

ஷிண்டேவுக்கு வந்த கூட்டம், எது உண்மையான சிவசேனா என்பதை காட்டுகிறது பட்னாவிஸ் கருத்து

மும்பை, சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு காரணமாக அந்த கட்சியின் பாரம்பரியமான தசரா பொதுக்கூட்டம் வரலாற்றில் முதல் முறையாக 2 இடங்களில் நடந்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் பொதுக்கூட்டம் தாதர் சிவாஜி பார்க்கிலும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் கூட்டம் பி.கே.சி. மைதானத்திலும் நடந்தது. 2 கூட்டங்களிலும் லட்சக்கணக்கில் அந்த கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டேவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டம் எது உண்மையான சிவசேனா என்பதை காட்டுவதாக துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து கொச்சியில் இன்று தொடக்கம் – முதலாவது ஆட்டத்தில் கேரளா-பெங்கால் மோதல்

கொச்சி, இந்த ஆண்டுக்கான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. பெங்களூரு, புனே, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், கவுகாத்தி, சென்னை, மும்பை, ஐதராபாத், புவனேஷ்வர், கோவா ஆகிய நகரங்களிலும் இந்த போட்டி நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் எப்.சி., 3 முறை சாம்பியனான ஏ.டி.கே. மோகன் பகான், 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ், ஈஸ்ட் பெங்கால்,, பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் … Read more

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் உயிரிழப்பு -அமெரிக்கா கடும் கண்டனம்!

வாஷிங்டன், தாய்லாந்து நாட்டில் நோங் புவா லாம்பு என்ற இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று இயங்கி வந்தது. இங்கு பள்ளி செல்வதற்கு முந்தைய பருவத்தில் உள்ள குழந்தைகளை பெற்றோர் சேர்த்து, அவர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்த மையத்திற்குள் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஒரு நபர் நுழைந்து, அங்கிருந்த குழந்தைகளை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினார். இந்த பயங்கர சம்பவத்தில், 38 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 24 … Read more

அடுத்த மாதம் முதல் தனியார் விமானத்திலும் செல்லப்பிராணிகள் பயணிக்கலாம் 15-ந் தேதி முன்பதிவு தொடங்குகிறது

புதுடெல்லி, தற்போது, ஏர் இந்தியா விமானங்களில் மட்டுமே செல்லப்பிராணிகளுடன் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்தநிலையில், ‘ஆகாசா ஏர்’ என்ற தனியார் விமான நிறுவனமும் தங்கள் விமானங்களில் செல்லப்பிராணிகளை அனுமதிக்க முடிவு செய்துள்ளது. கடந்த ஆகஸ்டு 7-ந் தேதி, இந்த நிறுவனம் விமான போக்குவரத்தை தொடங்கியது. 6 விமானங்களை கொண்டுள்ளது. 30 தினசரி சேவைகளை இயக்கி வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் இருந்து விமான சேவையை தொடங்குகிறது. இதையொட்டி, ‘ஆகாசா ஏர்’ விமான நிறுவன அதிகாரிகள் கூறும் போது, நவம்பர் … Read more

தேசிய விளையாட்டுப் போட்டி – பேட்மிண்டனில் தமிழக ஆண்கள் இரட்டையர் அணிக்கு வெள்ளிப்பதக்கம்

ஆமதாபாத், 36-வது ஆசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பேட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஆகர்ஷி காஷ்யப் (சத்தீஷ்கர்) 21-8, 22-20 என்ற நேர் செட்டில் மால்விகா பான்சோத்தையும் (மராட்டியம்), ஆண்கள் பிரிவில் முன்னணி வீரர் சாய் பிரனீத் (தெலுங்கானா) 21-11, 12-21, 21-16 என்ற செட் கணக்கில் மிதுன் மஞ்சுநாத்தையும் (கர்நாடகா) சாய்த்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினர். இதே போல் பெண்கள் இரட்டையரில் தெலுங்கானாவின் சிக்கி ரெட்டி- … Read more

இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர திட்டம்

கொழும்பு, இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியவில்லை. வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடனையும் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையே, பொருளாதார சிக்கலில் இருந்து மீள சர்வதேச நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தியது. இலங்கைக்கு ரூ.23 ஆயிரத்து 200 கோடி கடன் வழங்க சம்மதம் தெரிவித்து சர்வதேச நிதியம் பூர்வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால், இந்த கடனை இறுதி செய்வதற்கு முன்பு, … Read more

மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருள் வைத்திருந்த நபர் கைது – ரூ.80 கோடி மதிப்புள்ள 16 கிலோ ஹெராயின் பறிமுதல்

மும்பை, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் வைத்திருந்த நபரை வருவாய் புலனாய்வு இயக்குனரக (டிஆர்ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடமிருந்து 16 கிலோ உயர்தர ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.80 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று டிஆர்ஐ தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் கேரளாவைச் சேர்ந்த பினு ஜான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். டிஆர்ஐ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பினு ஜான் விமான நிலையத்தை … Read more