இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர திட்டம்

கொழும்பு, இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியவில்லை. வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடனையும் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையே, பொருளாதார சிக்கலில் இருந்து மீள சர்வதேச நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தியது. இலங்கைக்கு ரூ.23 ஆயிரத்து 200 கோடி கடன் வழங்க சம்மதம் தெரிவித்து சர்வதேச நிதியம் பூர்வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால், இந்த கடனை இறுதி செய்வதற்கு முன்பு, … Read more

மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருள் வைத்திருந்த நபர் கைது – ரூ.80 கோடி மதிப்புள்ள 16 கிலோ ஹெராயின் பறிமுதல்

மும்பை, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் வைத்திருந்த நபரை வருவாய் புலனாய்வு இயக்குனரக (டிஆர்ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடமிருந்து 16 கிலோ உயர்தர ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.80 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று டிஆர்ஐ தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் கேரளாவைச் சேர்ந்த பினு ஜான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். டிஆர்ஐ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பினு ஜான் விமான நிலையத்தை … Read more

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா..? புதிய ஆதாரம் வெளியீடு

லண்டன், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்தில் திரவ நீர் இருப்பதற்கான ஆதாரங்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்து இருக்கிறது. இதுபற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2018-ம் ஆண்டு, மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஆர்பிட்டர், செவ்வாய் கிரகத்தின் தென்துருவத்தில் பனிக்கட்டியின் (மூடுபனி) மேற்பரப்பு தாழ்வதையும், உயர்வதையும் கண்டறிந்து, அதன் அடியில் திரவ வடிவில் தண்ணீர் இருக்கலாம் … Read more

கேரளாவில் அரசு பேருந்து – பள்ளி சுற்றுலா பேருந்து மோதி கோர விபத்து – 9 பேர் பலி

பாலக்காடு, கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த சுற்றுலா பஸ்சில் 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் உள்ளிட்ட 51 பேர் இருந்துள்ளனர். இந்த நிலையில், பாலக்காடு-வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற சுற்றுலா பஸ்சானது முன்னால் சென்று கொண்டிருந்த கேரள அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதனையடுத்து சுற்றுலா பஸ்சானது சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் சுற்றுலா பஸ்சில் இருந்த 5 … Read more

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து – இந்திய அணி அறிவிப்பு

புவனேஷ்வர், 7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்கு உட்பட்டோருக்கான) இந்தியாவில் உள்ள புவனேஷ்வர், கோவா, நவிமும்பை ஆகிய நகரங்களில் வருகிற 11-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இதில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அமெரிக்கா, மொராக்கோ, … Read more

உக்ரைனில் இருந்து சிறுத்தைகளை மீட்டு தர மத்திய அரசுக்கு ஆந்திர டாக்டர் கோரிக்கை

லண்டன், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எலும்பியல் மருத்துவரான கிரிகுமார் பாட்டீல் உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் டான்பாஸ் மாகாணத்தில் உள்ள செவரோடோனெட்ஸ்க்கி நகரில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையை விலைக்கு வாங்கி வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்தார். இந்த சூழலில்தான் கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியது. போர் காரணமாக உக்ரைனில் வசித்து … Read more

நீதிபதிகள் நியமனத்துக்கு எழுத்துமூலம் ஒப்புதல் கேட்பதா? – நீதிபதிகள் அதிருப்தி

புதுடெல்லி, ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளையும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளையும் நியமிப்பதில் ‘கொலிஜியம்’ என்ற அமைப்பு மத்திய அரசுக்கு சிபாரிசு செய்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியத்தில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சந்திரசூட், எஸ்.கே.கவுல், எஸ்.ஏ.நாசர், கே.எம்.ஜோசப் ஆகிய 5 பேர் இடம்பெற்றுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கு 4 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதன், பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரவிசங்கர் … Read more

முதலாவது ஒருநாள் போட்டி: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்

லக்னோ, பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து தென்ஆப்பிரிக்க அணி தொடரை இழந்தது. ஆனால் இந்தூரில் நடந்த 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் … Read more

17 வயது ரசிகை பாலியல் வன்கொடுமை புகார்: விசாரணைக்காக இன்று நேபாளம் திரும்புகிறார் கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சானே

காத்மாண்டு, நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர் இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார். கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார். இந்த நிலையில் தான் சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நண்பர் … Read more

காஷ்மீரில் கழுத்தை அறுத்து டி.ஜி.பி. படுகொலை: நண்பர் வீட்டு வேலைக்காரர் கைது

ஜம்மு, காஷ்மீர் சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்தவர் ஹேமந்த்குமார் லோகியா. இவர், ஜம்மு புறநகர் பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவர் வீட்டில் சில நாட்களாக தங்கியிருந்தார். கடந்த திங்கட்கிழமையன்று இரவு உணவு உண்டபின் லோகியா படுக்கை அறைக்குச் சென்றார். அப்போது அந்த அறைக்குள் நுழைந்த வீட்டு வேலைக்காரர், ஒரு கூர்மையான ஆயுதத்தால் டி.ஜி.பி.யை கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தேடிவந்த போலீசார், வயல்வெளியில் பதுங்கியிருந்த யாசிர் லோகர் என்ற … Read more