இந்தியாவில் பிறந்து பாகிஸ்தானின் புல்புல் என அழைக்கப்பட்ட பிரபல பாடகி காலமானார்

கராச்சி, பாகிஸ்தான் நாட்டின் புல்புல் என அழைக்கப்பட்ட பழம்பெரும் பாடகி நய்யரா நூர் (வயது 71). உடல்நல குறைவால் அவர் காலமானார். இதனை அவரது மருமகன் ராணா ஜைடி டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார். அதில், நய்யரா நூர் மறைவு செய்தியை கனத்த மனதுடன் அறிவிக்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது மென்மையான குரலுக்காக, பாகிஸ்தானின் புல்புல் என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது என தெரிவித்து உள்ளார். நூரின் மறைவு செய்தியறிந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், இசை … Read more

கட்சி தலைமையை மாற்றக்கோரி புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் அதிருப்தியாளர்கள் ரகளை

காங்கிரஸ் கோஷ்டி பூசல் புதுவை காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் ஆகியோர் மற்றொரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர். கட்சி கூட்டம், பொது போராட்டங்களிலும் இது எதிரொலித்து வருகிறது. இந்தநிலையில் நாராயணசாமி, ஏ.வி.சுப்ரமணியன் ஆகியோருக்கு எதிராக சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் 42 பேர் கடிதம் அனுப்பினர். தொடர்ந்து பெங்களூருவில் புதுவை மாநில காங்கிரஸ் மேலிட பார்வையாளரான தினேஷ் … Read more

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடரை முழுமையாக வெல்லும் உத்வேகத்தில் இந்தியா

Inspirations Favourite meal Best batting partner A round of Quick Answers with @Ruutu1331 as he shares this & more! ⚡ ⚡ #TeamIndia | #ZIMvIND pic.twitter.com/Xu6SNmFR2H — BCCI (@BCCI) August 21, 2022 ஒரு நாள் கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி எளிதில் வெற்றி … Read more

பாகிஸ்தானில் சீக்கிய சிறுமி துப்பாக்கி முனையில் கடத்தி, பலாத்காரம் செய்து திருமணம்

பியூனர், பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பியூனர் மாவட்டத்தில், சிறுபான்மையினராக உள்ள சீக்கிய சமூக நபரான குருசரண் சிங் என்பவரின் மகளான தினா கவுர் என்பவரை, துப்பாக்கி முனையில் கடத்திய நபர், பாலியல் பலாத்காரம் செய்து பின்னர், உள்ளூர் நிர்வாகம் மற்றும் போலீசார் உதவியுடன் திருமணம் செய்து கொண்டார் என்ற அதிர்ச்சி தகவல் வைரலாக பரவியது. சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் இதுபோன்ற வேற்றுமை மற்றும் ஒடுக்குதல் ஆகியவற்றை கண்டித்து சீக்கியர்கள் நூற்றுக்கணக்கான பேர் நீதி கேட்டு சாலையில் … Read more

உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் – யுஜிசி தகவல்

சென்னை: வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2021-ம் ஆண்டில் இந்தியாவுக்கு உயர்படிப்புகளில் சேருவதற்கு 24 ஆயிரத்து 439 வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமே வந்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டுகளின் எண்ணிக்கையைவிட இது மிகவும் குறைவு ஆகும். அதாவது, தொற்று நோய்க்கு முந்தைய காலமான 2019-ம் ஆண்டில் 75 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் உயர் படிப்புக்காக இந்தியா வந்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கான சேர்க்கையை எளிதாக்கும் வகையில், பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது. இந்த … Read more

3-வது ஒருநாள் போட்டி: நெதர்லாந்தை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்

ரொட்டர்டாம், நெதர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி தொடரை வென்று இருந்த நிலையில் இன்று 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 91 குவித்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில் அந்த அணி 49.4 ஓவர்களில் 206 … Read more

நேர்காணலில் பெண்ணிடம் வயது பற்றி கேள்வி… ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கிய பீட்சா நிறுவனம்

பெல்பாஸ்ட், வடக்கு அயர்லாந்து பகுதியில் வசித்து வரும் பெண் ஜேனிஸ் வால்ஷ். இவர் டோமினோ பீட்சா விற்பனை செய்யும் நிறுவனம் நடத்திய பணி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். பீட்சா வினியோகம் செய்யும் வாகன ஓட்டுனருக்கான அந்த நேர்காணலில் வால்ஷிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் இடையே அவரது வயது பற்றிய கேள்வி ஒன்றும் இடம் பெற்றிருந்தது. அதற்கு அவர் பதிலளித்து விட்டு சென்றுள்ளார். இதன்பின், அந்த பணிக்கு அவர் தேர்வாகவில்லை. அவர் நிராகரிக்கப்பட்ட பின்னர், நேர்காணலை மீண்டும் நினைவுகூர்ந்துள்ளார். … Read more

2-வது திருமணம் செய்துகொள்ள முடிவா? நடிகை மேக்னாராஜ் பதில்

பெங்களூரு: நடிகை மேக்னாராஜ் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது மனைவி மேக்னாராஜ். இவர், நடிகை ஆவார். இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 7-ந் தேதி நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அப்போது நடிகை மேக்னாராஜ் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். தற்போது அவருக்கு ராயன்ராஜ் சர்ஜா என்ற ஆண் குழந்தை உள்ளது. கணவர் உயிர் இழந்த சோகத்தில் இருந்து வந்த நடிகை மேக்னாராஜ், அதில் … Read more

தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: லயோலா கல்லூரி அணி சாம்பியன் பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம். கல்லூரி அணி வெற்றி

தூத்துக்குடி தூத்துக்குடியில் கல்லூரிகளுக்கு இடையே நடந்த 12-வது அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை லயோலா கல்லூரி அணியும், பெண்கள் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி அணியும் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றன. கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் தூத்துக்குடி ஜிம்கானா கிளப் இணைந்து நடத்திய 12-வது அகில இந்திய கல்லூரிகளுக்கு இடையேயான டி.எம்.பி. கோப்பைக்கான மின்னொளி கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பில் நடந்தது. கடந்த 16-ந் தேதி … Read more

மகுடம் சூடினார் பழங்குடியினர்களின் புதிய மன்னர்…! சந்தோஷத்தில் திளைத்த மக்கள்

தென் ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்காவில் ங்குனி (Nguni) மொழி பேசும் பழங்குடியினர்களின் புதிய அரசருக்கு முடி சூட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த பாரம்பரிய விழாவில் ஆயிரக்கணக்கான ஜுலு போர் வீரர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். 48 வயதான “மிசுசுலு கா ஸ்வெலிதினி” ஜுலு ராஜ்ஜியத்தின் அரசராக முடிசூட்டப்பட்டார். வழக்கப்படி ஏராளமான விலங்குகள் பலியிடப்பட்டு விழா கோலாகலமாகத் துவங்கப்பட்டது. 1879 இசண்டல்வானா போரின் போது பிரிட்டிஷ் படைகளையே விரட்டியடித்த பெருமை இந்த ஜுலு ராச்சியத்திற்கு உண்டு. தங்கள் … Read more