டெல்லியில் புதிதாக 1,964 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, வட இந்தியாவில் காய்ச்சல், தொண்டையில் கரகரப்பு, இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல் உள்ளிட்ட மேல் சுவாசக் குழாய் தொடர்பான அறிகுறிகளைக் கொண்ட ஏராளமான நோயாளிகள் எண்ணிக்கை சமீப நாட்களில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 20,844 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் கொரோனா … Read more

"என்னை நேசிப்பவர்கள் இருந்தாலும் கூட தனிமையை உணர்ந்துள்ளேன்"- மனம் திறந்து பேசிய விராட் கோலி

மும்பை, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி விராட் கோலி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை தனது ஆட்ட திறன் மூலம் கிரிக்கெட் உலகையே கோலி ஆட்சி செய்து வந்தார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அவரால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினோடு ஒப்பீடு பேசப்பட்ட அவர் தற்போது ரன்கள் குவிக்க திணறி வருகிறார். இந்த நிலையில் … Read more

கட்டி அணைத்ததால் உடைந்த விலா எலும்பு, நண்பர் மீது இளம்பெண் புகார்

பீஜிங், சீனாவின் உகான் மாகாணத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த மே மாதம் தனது அலுவலக நண்பர்களுடன் டீ அருந்திக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் விளையாட்டாக அவரை திடீரென கட்டி அணைத்திருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், மாலை பணிமுடிந்து வீடு திரும்பியிருக்கிறார். இரவு வலி அதிகமாக இருக்கவே, சூடு நீரில் ஒத்தடம் வைத்துக்கொண்டு படுத்திருக்கிறார். மறுநாளும் வலி குறையாததால் அலுவலகத்தில் விடுமுறை … Read more

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் மத்திய மந்திரி நிதின் கட்கரி சந்திப்பு

மும்பை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை இன்று மும்பையில் நேரில் சந்தித்து பேசினார். தேசிய சாலைப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவு பெறுவதற்காக நிதின் கட்கரி இன்று அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்தியாவில் ஆண்டுக்கு 80,000 பேர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். இது உலகளவில் சாலை விபத்து இறப்புகளில் 13 சதவீதம் ஆகும். இதனால் … Read more

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி தனது கணவருடன் விவாகரத்து..? – கிரிக்கெட் வீரர் விளக்கம்!

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரராக தற்போது திகழ்கிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனஸ்ரீ வர்மா சமூக வலைத்தளங்களில் மிகவும் ‘ஆக்ட்டிவாக’ இருப்பவர். இவர் பதிவிடும் நடன வீடியோக்களை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் … Read more

இந்தியாவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம்- தலீபான்கள்

காபுல், ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஓர் ஆண்டாக தலீபான்கள் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது, பெண்கள் மேல் நிலைக் கல்வி பயில தடை உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தனர். கடந்த ஓர் ஆண்டில் அங்கு மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளை மதிக்கும் பல உறுதிமொழிகளை தலீபான்கள் மீறியுள்ளதால் சர்வதேச சமூங்கங்கள் அவர்கள் மீது அதிருப்தியில் … Read more

குறுகிய கால விவசாயக் கடனுக்கு 1.5% வட்டி மானியம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி, மத்திய அமைச்சரவை ரூ.3 லட்சம் ரூபாய் வரையில், விவசாயிகளுக்கு குறுகியக்காலக் கடன் வழங்கும் அனைத்து வகையான நிதிநிறுவனங்களுக்கும் ஆண்டுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு நடப்பு 2022-23 நிதியாண்டு முதல் 2024 – 25 வரை, ரூ. 3 லட்சம் வரை குறுகியக்காலக் கடனுதவி அளிக்கும், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு மற்றும் கணினி மயமாக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு … Read more

சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி இளம் வீராங்கனை எம்மா ராடுகானு வெற்றி

சின்சினாட்டி, சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் ஓஹியோவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்று ஒன்றில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (40 வயது) இங்கிலாந்து இளம் வீராங்கனை எம்மா ராடுகானு (19 வயது) மோதினர். இந்த போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய எம்மா ராடுகானு 6-4, 6-0 செட் கணக்கில் செரீனாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். வெற்றிக்கு பிறகு பேசிய … Read more

50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு தற்போது மன்னிப்பு கோரிய ஆஸ்கர் குழு

லாஸ் ஏஸ்சல்ஸ், 1973-ம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி 45-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. இதில் ‘தி காட்பாதர்’ படத்துக்கு சிறந்த படம், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த நடிகர் என 3 விருதுகள் கிடைத்தன. இந்த திரைப்படத்தில் புகழ்பெற்ற ‘விட்டோ கார்லியோனி’ கதாபாத்திரத்தில் நடித்திருந்த மார்லான் பிராண்டோவிற்கு சிறந்த நடிகருக்கான விருது விழா மேடையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய விருது விழாவில் மார்லான் பிராண்டோ கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த … Read more

அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை கொடுங்கள்- பில்கிஸ் பானு வேண்டுகோள்

ஆமதாபாத், குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பின், பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளாக 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு நேற்று முன்தினம் விடுதலை செய்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட … Read more