பஞ்சாபில் 'ஒரே எம்.எல்.ஏ. ஒரே ஓய்வூதியம்' சட்ட மசோதா – மாநில கவர்னர் ஒப்புதல்

சண்டிகர், பஞ்சாப் மாநிலத்தின் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, ‘ஒரே எம்.எல்.ஏ. ஒரே ஓய்வூதியம்’ என்ற பெயரில் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கும் சட்ட திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவின் மூலம், ஒரு சட்டமன்ற உறுப்பினர் எத்தனை முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு ஒரே ஒருமுறை மட்டுமே ஓய்வூதியம் வழங்க வழிவகை … Read more

வெளிநாட்டு டி20 தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க தடை : பிசிசிஐ அதிரடி

மும்பை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டி20 லீக்கில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் முதலீடு செய்துள்ளன. தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் தென் ஆப்பிரிக்காவில் நடக்க உள்ள 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். அந்த வகையில் ஜோகனஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியுள்ளது. இதே … Read more

ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறப்பட்டதை மறைத்து அமெரிக்காவுக்கு இந்திய கப்பல்கள் கொண்டு செல்வது கவலையளிக்கிறது – அமெரிக்கா

புதுடெல்லி, ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறப்பட்டதை மறைத்து அமெரிக்காவுக்கு நகரங்களுக்கு இந்திய கப்பல்கள் கொண்டு செல்வது கவலையளிக்கிறது என இந்தியாவுக்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இந்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் மைக்கேல் பத்ரா தெரிவித்தார். ரஷியாவில் இருந்து பெறப்பட்ட கச்சா எண்ணெயிலிருந்து எரிபொருள் தயாரித்து அவற்றை நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களுக்கு கடல் வழியாக இந்தியா கொண்டு செல்வதாகவும், ரஷியா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீறி இந்தியா செயல்படுவதாக அமெரிக்கா … Read more

கவுரிபிதனூர் அருகே வரதட்சணை கொடுமையால்: தூக்குப்போட்டு பெண் தற்கொலை-கணவர் கைது

கோலார் தங்கவயல்: வரதட்சணை கொடுமை சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா டி.பாள்யா கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவருக்கும், தொட்டபள்ளாப்பூர் தாலுகா சென்னபுரா கிராமத்தை சேர்ந்த அனிதா (வயது 24) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது அனிதாவின் பெற்றோர் சுப்ரமணி குடும்பத்தார் வரதட்சனையாக கேட்ட பணம்-நகைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த நாள் முதல் சுப்ரமணி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். வேலைக்கு செல்லாததால் வரதட்சணையாக கொடுத்த நகை-பணத்தை அடகு வைத்து … Read more

இன்ஸ்டாகிராமில் தேசியக்கொடியை முகப்பு படமாக மாற்றினார் டோனி

நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் ‘சுதந்திர தின அமிர்த பெருவிழா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக ‘இல்லம் தோறும் தேசிய கொடி’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதன்படி, இன்று முதல் சுதந்திர தினமான 15-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்யுமாறு அழைப்பு … Read more

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பலுக்கு அனுமதி அளித்தது இலங்கை

கொழும்பு, சீன உளவு கப்பல் ‘யுவான் வாங்-5’ கடந்த 11-ந் தேதி இலங்கையின் அம்பந்தொட்டை துறைமுகத்துக்கு வருவதாக இருந்தது. 17-ந் தேதி வரை அங்கேயே நங்கூரமிட்டு நிறுத்தப்படும் என்று கூறப்பட்டது. எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட காரணங்களுக்காக அக்கப்பல் வருவதாக கூறப்பட்டது. இருப்பினும், அது உளவு பார்க்க வாய்ப்புள்ளதால் அதன் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதையடுத்து, கப்பலின் வருகையை தள்ளிப்போடுமாறு சீனாவிடம் இலங்கை கூறியது. ஆனால் அதற்குள் சீன உளவு கப்பல், இந்திய பெருங்கடலில் நுழைந்து … Read more

பீகாரில் நிதிஷ்குமார் எடுத்த முடிவு பாஜகவுக்கு விழுந்த சரியான அடி! சோனியா காந்தியை சந்தித்த பிறகு தேஜஸ்வி யாதவ் பேச்சு

புதுடெல்லி, நிதிஷ் குமார் எடுத்த முடிவு பாஜகவுக்கு விழுந்த சரியான அடி என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அம்மாநில துணை முதல் மந்திரியாக மீண்டும் பொறுப்பேற்றுள்ள முன்னாள் மத்திய மந்திரி லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு டெல்லி சென்ற அவர், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ் தெரிவித்ததாவது, “நான் சந்தித்த தலைவர்கள் … Read more

"நாட்டுக்காக விளையாடுங்கள் என வீரர்களிடம் பிச்சையா எடுக்க முடியும்"- வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் வேதனை

போர்ட் ஆப் ஸ்பெயின், உலகம் முழுவதும் 20 ஓவர் மற்றும் 10 ஓவர் லீக் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. குறிப்பாக ஐபிஎல் தொடருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்புக்கு பிறகு பல நாடுகள் இது போன்ற லீக் தொடரை நடத்தி வருகின்றனர். இது போன்ற கிரிக்கெட்டுகளை நடத்துவதால் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கிரிக்கெட் அணிகளுக்கு பாதிப்பு இல்லை. ஆனால் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் தேசிய கிரிக்கெட் அணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக … Read more

இங்கிலாந்தின் பல பகுதிகளில் வறட்சி- அதிகாரப்பூர்வமாக அறிவித்த அரசாங்கம்

லண்டன், இங்கிலாந்து நாட்டில் வரலாறு காணாத வெப்பம் நிலவி வருகிறது. 1935 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் மிகவும் வறண்ட மாதமாக கடந்த ஜூலை மாதம் திகழ்கிறது. ஜூலை மாதத்தில் மழை பொழிவு மிகவும் குறைவு என இங்கிலாந்து வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜூலையில் வறட்சி நிலவியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் ஆறு இதுவரை இல்லாத அளவுக்கு வறண்டுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தின் தெற்கு, … Read more

பள்ளி பாடத் திட்டத்தில் ராணுவ வீரர்களின் வீர தீர செயல்கள்: மாணவர்களுக்கான "வீர கதை" போட்டியில் கல்வித்துறை மந்திரி பேச்சு!

புதுடெல்லி, ராணுவ வீரர்கள் நாட்டுக்காக ஆற்றிய பணிகள் மற்றும் செய்த தியாகங்கள் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் நோக்கில், “வீர கதை” போட்டி நடைபெற்றது. அக்டோபர் 21 முதல் நவம்பர் 20, 2021 வரை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில், 4,788 பள்ளிகளைச் சேர்ந்த 8.04 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கட்டுரைகள், கவிதைகள், வரைபடங்கள் மற்றும் மல்டிமீடியா விளக்கக்காட்சிகள் மூலம் உத்வேகம் தரும் கதைகளைப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கப்பட்டனர். பல சுற்று மதிப்பீட்டிற்குப் பிறகு, 25 மாணவர்கள் … Read more