ஆப்பிரிக்காவில் கனமழை, வெள்ளம்; 100 பேர் பலி

ஜோகன்ஸ்பெர்க், ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே, மொசாம்பிக்யூ, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கனமழை காரணமாக இந்நாடுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கனமழை, வெள்ளத்தில் சிக்கி ஆப்பிரிக்காவில் உள்ள இந்த 3 நாடுகளிலும் மொத்தம் 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, தென் ஆப்பிரிக்காவில் 19 பேரும், ஜிம்பாப்வேயில் 70 பேரும், மொசாம்பிக்யூவில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கனமழை … Read more

போலந்து துணை பிரதமர் இன்று இந்தியா வருகை

புதுடெல்லி, போலந்து நாட்டின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு துறை மந்திரியான ரதோஸ்லாவ் சிகோர்ஸ்கி இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இந்தியாவுக்கு இன்று வருகை தருகிறார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகருக்கு வருகை தரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில், போலந்து துணை பிரதமர் ரதோஸ்லாவ் சிகோர்ஸ்கி இன்று இந்தியாவுக்கு வருகிறார். இதன்பின்பு, நாளை நடைபெற உள்ள ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொள்வார். … Read more

2 வருடங்களுக்குப் பின்…இந்திய டி20 அணியில் என்ட்ரி கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர்!

சென்னை, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் காயம் காரணமாக விலகிய திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக ஷ்ரேயாஸ் மற்றும் ரவி பிஷ்னோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்க உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ள இந்திய அணியே, இந்த டி20 தொடரிலும் விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், விஜய் ஹசாரே தொடரின்போது திலக் வர்மா காயம் அடைந்தார். இதனால் திலக் வர்மா … Read more

ஈரான்: 800 பேரின் தூக்கு தண்டனை ரத்து; டிரம்ப் வரவேற்பு

தெஹ்ரான், ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதேபோன்று குடிநீர், மின்சார பற்றாக்குறை மற்றும் வேலை வாய்ப்பின்மையாலும் தவித்து வருகின்றனர். இதனால், அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு, தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, கடந்த டிசம்பர் 28-ந்தேதி தொடங்கிய போராட்டம் ஈரானின் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 100 நகரங்களுக்கு பரவியது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி … Read more

டெல்லியில் குளிர் அலை பரவல்; விமான சேவை பாதிப்பு

புதுடெல்லி, டெல்லியின் பல்வேறு நகரங்களிலும் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே கடுமையான குளிர்ச்சி நிலவுகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி என்ற அளவுக்கு குறைந்து காணப்படுகிறது. பாலம், சப்தர்ஜங், டெல்லி-என்.சி.ஆர்., இந்தியா கேட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இது தவிரவும் முக்கிய நகரங்களில் காற்று மாசும் அதிகரித்து உள்ளது. தெளிவற்ற வானிலையும் காணப்படுகிறது. இதனால், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் சில … Read more

ஆக்கி இந்தியா லீக்: ராஞ்சி அணி 3-வது வெற்றி

ராஞ்சி, 8 அணிகள் இடையிலான 7-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஆட்டம் ஒன்றில் ராஞ்சி ராயல்ஸ் – சூர்மா ஆக்கி கிளப் அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ராஞ்சி ராயல்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ராஞ்சி அணியில் மன்மீத் சிங் ராய் (14-வது நிமிடம்), டாம் பூன் (20-வது மற்றும் 22-வது நிமிடம்), மன்தீப் … Read more

தமிழ் மக்களின் மிக முக்கியமான கலாசாரம் தைப் பொங்கல் விழா: அனுர குமார திசநாயகே

யாழ்ப்பாணம், பொங்கல் பண்டிகையையொட்டி இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே தமிழர்களின் கலாசார தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணத்துக்கு சென்றார். அங்கு தமிழர்கள் மத்தியில் அவர் பேசுகையில், தமிழ் மக்களின் மிக முக்கியமான கலாசார தினமான தைப் பொங்கல் விழாவில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம். இங்கே இருக்கும் பலரும் கடந்த … Read more

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சரிந்து விட்டது – ராகுல்காந்தி

புதுடெல்லி, மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் மார்க்கர் பேனாக்களில் பயன்படுத்தப்பட்ட அழியாத மையின் தரம் குறித்து சர்ச்சை எழுந்தது. இந்த மை மூலம் வாக்காளர்களின் விரலில் வைக்கப்பட்ட அடையாளத்தை எளிதில் அகற்ற முடியும் என்றும், இது போலி வாக்குப்பதிவுக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றன என மராட்டிய மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது. இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ‘உண்மை என்ன என்பதை பார்க்காமல் மாநில தேர்தல் ஆணையம், … Read more

மகளிர் பிரீமியர் லீக்: 32 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

மும்பை, 5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நவி மும்பையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் அதிரடி காட்டிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் … Read more

தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர்

வாஷிங்டன், வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோ (வயது 58) இரும்பு பெண்மணி என அறியப்படுகிறார். அவர் அங்கு ஜனநாயக உரிமையை மீட்டெடுக்க 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார். இதனிடையே கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போதே அந்தப் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்த அவர், தனது நோபல் பரிசை டிரம்ப்புக்கு வழங்கினார். … Read more