ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் அணி வெற்றி

கோவா 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கோவா -ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின   இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் மோகன் பகான் அணியின் மண்விர் சிங்க் 3 வது நிமிடத்தில் ,மற்றும் 46  வது நிமிடத்தில் கோல் அடித்தார் .இதற்கு … Read more

பிரான்சில் புதிதாக 1,42,253 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!

பாரீஸ்,  தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதனிடையே உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா காட்டுத்தீயாக பரவி வந்த நிலையில் தற்போது வைரஸ் தொற்று சற்று குறைவாக பதிவாகி வருகிறது. இதன்படி பிரான்சில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.18 கோடியை கடந்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், … Read more

பீகாரில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு

பாட்னா,  சாயத்துக்காக அவுரிச்செடியை கட்டாயமாக பயிரிட உத்தரவிட்ட ஆங்கில அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி, 1917-ம் ஆண்டு பீகார் மாநிலம் சம்பாரனில் சத்தியாகிரக இயக்கத்தை தொடங்கினார். அதை நினைவுகூரும்விதமாக இங்குள்ள ராட்டை பூங்காவில் காந்தியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை நேற்று முன்தினம் இரவு உடைத்து கீழே தள்ளப்பட்டிருந்தது. இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்தப் பகுதியில் அன்றைய இரவு மதரீதியிலான முழக்கங்கள் கேட்டதாகவும், எனவே மதச்சார்பு குழுக்கள்தான் இதற்கு காரணமாக இருக்க வேண்டும் என்றும் … Read more

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷிய வீராங்கனை ஸ்கேட்டிங் போட்டியில் முன்னிலை!

பீஜிங், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு ஸ்கேட்டிங் போட்டியில் ரஷிய வீராங்கனை காமிலா வலைவா ஆதிக்கம் செலுத்தி முன்னிலை பெற்றார். அவர் 2 நிமிடம் 40 வினாடிகள் ஸ்கேட்டிங் செய்து பார்வையாளர்களை கவர்ந்தார். முன்னதாக அவர் பங்கேற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் அவர் 90.45 புள்ளிகள் பெற்றிருந்தார். இந்நிலையில், இம்முறை ஒலிம்பிக்கில் அவர் அதை விட குறைவாக 82.16 புள்ளிகள் பெற்றிருந்தாலும் முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து வியாழக்கிழமையன்று … Read more

உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஷ்யா குறிவைத்தால், தக்க பதிலடி கொடுப்போம்..! – ஜோ பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன்,  முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷியா அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. ஆனால் … Read more

பிரதமர் மோடி பஞ்சாப் வருகையால் விவசாய சங்க தலைவர்களுக்கு வீட்டுக்காவல்

ஜலந்தர்,  பிரதமர் மோடி, கடந்த மாதம் பஞ்சாப்புக்கு சென்றபோது, விவசாய சங்கத்தினரின் மறியல் போராட்டத்தால் டெல்லிக்கு திரும்ப செல்ல வேண்டியதாகி விட்டது. அச்சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக நேற்று அவர் பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றார். அவர் வருகையின்போது மீண்டும் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். விவசாய சங்க தலைவர்களின் வீடுகளுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலைவரை படையெடுத்தனர். அவர்களை வீட்டுக்காவலில் வைத்தனர். அவர்கள் வீடு அமைந்துள்ள கிராமங்களை … Read more

இந்தியா-நியூசிலாந்து மகளிர் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது..!

குயின்ஸ்டவுன், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இதில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி கடந்த 12-ந்தேதி குயின்ஸ்டவுனில் நடைபெற்றது. அந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து மகளிர் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் இன்று நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த மிதாலிராஜ் … Read more

ஸ்வீடனில் முதியோர்களுக்கு 4-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்…!

ஸ்வீடனில் 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு 4-ஆவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த அந்த நாட்டு தொற்று நோயியல் நிபுணா் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் குழுவின் தலைவா் ஆண்டா் டெக்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  80 வயதுக்கு மேற்பட்டவா்கள், முதியோா் பராமரிப்பு மையங்களில் இருப்பவா்கள் மற்றும் வீடுகளிலேயே மருத்துவப் பராமரிப்பில் இருப்போருக்கு 4-ஆவது தவணை செலுத்துவது கொரோனாவிடமிருந்து அவா்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பி.யூ.சி. உள்பட கல்லூரிகள் நாளை திறப்பு மாநில அரசு அறிவிப்பு

பெங்களூரு,  உடுப்பி மாவட்டத்தில் அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. இதுதொடர்பாக மாணவர்கள் கடந்த 8-ந் தேதி போராட்டம் நடத்தினர். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து பதற்றம் ஏற்பட்டதால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கர்நாடக ஐகோர்ட்டு மாணவர்கள் மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்புக்கு வர … Read more

விராட் கோலியின் ‘பார்ம்’ குறித்து கவலையில்லை – பேட்டிங் பயிற்சியாளர் ரதோர் பேட்டி

கொல்கத்தா, இந்திய வீரர் விராட் கோலியின் பேட்டிங் ‘பார்ம்’ குறித்து கவலையில்லை. அவர் நன்றாக ஆடுகிறார் என்று பேட்டிங் பயிற்சியாளர் ரதோர் கூறினார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இந்தியா- ெவஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை (இரவு 7.30 மணி) நடக்கிறது. இதையொட்டி இந்திய … Read more