ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம்…!

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை 8.01 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் ஜெய்ப்பூரில் இருந்து வடமேற்கே 92 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொருட் சேதங்கள், உயிரிழப்பு போன்ற எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆசிய பேட்மிண்டன் போட்டி: இந்திய அணிக்கு முதல் வெற்றி

ஷா ஆலம், ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) இந்திய அணி, ஹாங்காங்கை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தியது.  ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் லக்‌ஷயா சென், மிதுன் மஞ்சுநாத் ஆகியோரும், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹரிகரன் அம்சகருணன்-ரூபன் ரத்தினசபாபதி குமார் ஜோடியும் வெற்றி கண்டனர். ஒற்றையர் பிரிவில் கிரண் … Read more

போர் தொடுக்காமல் இருந்தால் அடுத்த வாரம் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை – அமெரிக்கா தகவல்

வாஷிங்டன், உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரஷியா தனது படைகளை குவித்தது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்தது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.  அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே ரஷியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. ரஷியா படையெடுக்கும்பட்சத்தில் உக்ரைனுக்கு ஆதரவு அளிப்போம் என அமெரிக்கா, நேட்டோ படைகள் தெரிவித்தன. மேலும், உக்ரைனுக்கு … Read more

தானே- திவா இடையே புதிதாக 2 ரெயில் பாதைகள் – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

மும்பை, மத்திய ரெயில்வே வழித்தடத்தில் கல்யாண் முக்கியமான சந்திப்பு ரெயில் நிலையமாக உள்ளது. இதில் கல்யாண் – சி.எஸ்.எம்.டி. இடையே 4 ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதையில் ஸ்லோ மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற 2 பாதையில் விரைவு மின்சார ரெயில்களுடன், எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்படுகின்றன.  பெரும்பாலான நேரங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில், நீண்ட தூர ரெயில்களால் மின்சார ரெயில்களை தாமதமாக இயக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இதை தடுக்கும் வகையில் தானே – … Read more

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை கைப்பற்றும் ஆவலில் இந்தியா

20 ஓவர் கிரிக்கெட் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 158 … Read more

உக்ரைன் மீது குண்டு வீச்சு தாக்குதல் – தொடங்குகிறதா 3-ம் உலகப்போர்?

கிவ், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது.  உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரஷியா தனது படைகளை குவித்தது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்தது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வந்தது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை … Read more

பசுமை ஹைட்ரஜன், அமோனியா குறித்த கொள்கை: மத்திய அரசு வெளியிட்டது

புதுடெல்லி,  பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா குறித்த மத்திய மின்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட கொள்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மரபுசாரா எரிசக்தியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி, ஹைட்ரஜனும், அமோனியாவும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா என்று அழைக்கப்படுகின்றன. எதிர்காலத்தில், பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக இவை உருவெடுக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளாக கருதப்படுகின்றன. இதன்மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடியும். தூய்மையான எரிபொருளை அளிக்க வேண்டிய சர்வதேச கடமையை இந்தியா பூர்த்தி … Read more

‘அர்ஜூன் ஆட்டத்தை நேரில் பார்க்கமாட்டேன்’ – தெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கரை ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. இடக்கை வேகப்பந்து வீச்சாளரான 22 வயதான அர்ஜூன் உள்ளூர் 20 ஓவர் போட்டியில் மும்பை அணிக்காக 2 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். மும்பை ரஞ்சி அணியில் இடம் பெற்றுள்ளார்.  இந்த நிலையில் மகனின் ஆட்டம் குறித்து தெண்டுல்கர் யுடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் ‘பெற்றோர் தங்களது பிள்ளைகள் விளையாடுவதை நேரில் பார்க்கும் போது … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34.38 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 99 லட்சத்து 86 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே … Read more

கேரளாவில் பரபரப்பு: சபரிமலையில் நடிகர் சிரஞ்சீவி இளம்பெண்ணுடன் சாமி தரிசனம்? – தேவஸ்தானம் மறுப்பு

திருவனந்தபுரம், மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 12-ந் தேதி திறக்கப்பட்டது. 13-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. 5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பின் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) அடைக்கப்படுகிறது. இந்தநிலையில் சபரிமலைக்கு வந்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கடந்த 13-ந் தேதி சபரிமலையில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, அவருடன் அவரது மனைவி மற்றும் பீனிக்ஸ் குரூப் உரிமையாளர்களான சுக்கப்பள்ளி சுரேஷ், … Read more