வைபவ், ஜெய்ஸ்வால் அதிரடி… ராஜஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஜெய்ப்பூர், ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து குஜராத்தின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் களம் இறங்கினர். இருவரும் நிதானமாகவும், அதே வேளையில் மோசமான பந்துகளை பவுண்டரிகள் அடித்து ரன்கள் குவித்தனர். இதில் கேப்டன் சுப்மன் அரைசதம் … Read more

இந்தியா நிச்சயம் தாக்குதல் நடத்தும்; பாக். பாதுகாப்புத்துறை மந்திரி

லாகூர், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காஷ்மீர் தாக்குதலை ஈடுபட்டவர்கள் நினைத்து பார்க்கமுடியாத … Read more

ரெயிலுக்கு காத்திருந்த பெண் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை – அதிர்ச்சி சம்பவம்

பாட்னா, பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டம் ஷியாம்பூர் கிராமத்தை சேர்ந்த பெண் உத்தரபிரதேசத்தில் வசித்து வந்தார். இதனிடையே, அப்பெண்ணின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பெண் கடந்த சில நாட்களுக்குமுன் சொந்த ஊருக்கு வந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையை கவனித்து வந்தார். இந்நிலையில், அப்பெண் இன்று அதிகாலை 5 மணியளவில் மீண்டும் உத்தரபிரதேசத்திற்கு செல்ல அப்பகுதியில் உள்ள சசமுசா ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். உத்தரபிரதேச ரெயிலுக்கு காத்திருந்த அப்பெண் அருகில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: 14 வயது வைபவ் அரைசதம் அடித்து சாதனை

ஜெய்ப்பூர், ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடி … Read more

ஈரான் துறைமுக வெடி விபத்து; பலி எண்ணிக்கை உயர்வு

தெஹ்ரான் ஈரான் நாட்டின் பாந்தர் அப்பாஸ் நகரில் துறைமுகம் உள்ளது. இது ஈரானின் மிகப்பெரிய வர்த்தக துறைமுகம் ஆகும். இந்த துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. துறைமுகத்தில் கண்டெய்னர்கள் நிறுத்தி வைத்திருந்த பகுதியில் இந்த வெடி விபத்து ஏற்பட்டது. ஏவுகணைகளுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்களை சரிவர கையாளாததால் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அமோனியம் பெர்குளோரேட் என்ற வேதிப்பொருள் அந்த … Read more

மத்திய பிரதேசத்தில் லாரி மீது மோதிய கார் – 4 பேர் பலி

போபால், மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டம் இந்தூர்-அகமதாபாத் நெடுஞ்சாலையில் இன்று காலை கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் 4 பேர் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் பால்வாடி கிராமத்திற்கு அருகே காலை 7 மணியளவில் கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் நின்றுகொடிருந்த லாரி மீது அதிவேகத்தில் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் … Read more

கில்லுக்கு பதிலாக குஜராத் அணியை வழிநடத்தும் ரஷித் கான் – ஏன் தெரியுமா..?

ஜெய்ப்பூர், ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து குஜராத்தின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் களம் இறங்கினர். இருவரும் நிதானமாகவும், அதே வேளையில் மோசமான பந்துகளை பவுண்டரிகள் அடித்து ரன்கள் குவித்தனர். இதில் கேப்டன் சுப்மன் … Read more

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 7 பேர் பலி

லாகூர், பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் தெற்கு வாரிஸ்தான் மாவட்டம் வனா கிராமத்தில் அமைதி பேச்சுவார்த்தை குழு அலுவலகம் (Peace Commitee office) உள்ளது. கிராமங்களுக்கு இடையேயான பிரச்சினை, உள்ளூர் பிரச்சினை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த அலுவலகத்தில் ஆலோசிக்கப்படுவது வழக்கம். இந்த கூட்டத்தில் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொள்வர். இந்நிலையில், இந்த அலுவலகத்தில் இன்று காலை 20க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அப்போது திடீரென அலுவலகத்தில் குண்டு வெடித்தது. இதில், 16 பேர் … Read more

திருப்பதி அருகே ரூ.2.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் – 7 பேர் கைது

திருப்பதி, ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக ஆந்திர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின்போது திருப்பதி அருகே லாரிகள் மூலம் செம்மரக்கட்டையில் கடத்தி வருவது தெரியவந்தது. இதனையடுத்து கடத்தல் லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் ரூ. 2.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள், லாரி மற்றும் கார் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் உட்பட மொத்தம் 7 பேரை கைது … Read more

பாகிஸ்தானில் இருந்து 1,000 இந்தியர்கள் வெளியேற்றம்

லாகூர், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் வசித்து வந்த பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. மருத்துவ விசாவில் இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் நாளைக்குள் வெளியேற … Read more