லாரி மோதி சிங்கம் உயிரிழப்பு – டிரைவர் கைது

காந்திநகர், குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள தேவலியா கிராம அருகே அம்ரேலி-சவர்குண்ட்லா நெடுஞ்சாலையில் கடந்த 24-ந்தேதி அதிகாலை அதிவேகமாக வந்த லாரி மோதி பெண் சிங்கம் ஒன்று உயிரிழந்தது. லாரியை ஓட்டிய டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்ற நிலையில், போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து சம்பந்தப்பட்ட நபரை தீவிரமாக தேடி வந்தனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரியை கண்டறிந்த போலீசார், அதன் டிரைவரான ராஜேஷ் பதாரியாவை … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி

புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் போரல், பாப் டு பிளஸ்சிஸ் இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் … Read more

ஈரான் துறைமுக வெடி விபத்து – மேலும் உயர்ந்த பலி எண்ணிக்கை

தெஹ்ரான், ஈரான் நாட்டின் பாந்தர் அப்பாஸ் நகரில் துறைமுகம் உள்ளது. இது ஈரானின் மிகப்பெரிய வர்த்தக துறைமுகம் ஆகும். இந்த துறைமுகத்தில் நேற்று மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. துறைமுகத்தில் கண்டெய்னர்கள் நிறுத்தி வைத்திருந்த பகுதியில் இந்த வெடி விபத்து ஏற்பட்டது. எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்களை சரிவர கையாளாததால் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்டமாக தகவல் வெளியான நிலையில் பலி எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது. … Read more

கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்த வேன் – 10 பேர் பலியான சோகம்

போபால், மத்திய பிரதேசம் மாநிலம் மாண்ட்சவுர் மாவட்டம், நாராயண்கர் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் இன்று 14 பேருடன் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று, பைக் ஒன்று குறுக்கே வந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள திறந்த வெளி கிணற்றில் விழுந்தது. தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவம் குறித்து மண்ட்சவுர் … Read more

ஏமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்; 2 பேர் பலி

சனா, இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி தோல்வி

பெர்த், இந்திய பெண்கள் ஆக்கி 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் முதல் 2 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியுடனும், அடுத்த மூன்று ஆட்டங்களில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய சீனியர் அணியுடனும் மோதுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா ‘ஏ’ பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் பெர்த்தில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி 3-5 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இவ்விரு … Read more

தெலுங்கானாவில் 30 குடிசைகள் எரிந்து சாம்பல்

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் குட்லூரு கிராமத்தில் வாழும் மக்கள் பலரும் ஓலை குடிசைகளில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அப்பகுதியில் உள்ள குடிசையில் திடீரென தீ ஏற்பட்டது. இந்த தீயானது கிடுகிடுவென அருகில் உள்ள குடிசைகளில் பரவத்தொடங்கின. இதனைக்கண்ட கிராம மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் 30 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. மேலும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து … Read more

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: எம்மா ராடுகானு 2வது சுற்றில் தோல்வி

மாட்ரிட், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் பிரிட்டனின் எம்மா ராடுகானு, உக்ரைனின் மார்டா கோஸ்டியுக் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் எம்மா ராடுகானு 4-6, 6-2, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். 1 More update தினத்தந்தி Related Tags : மாட்ரிட் ஓபன்  டென்னிஸ்  Tennis 

பஹல்காம் தாக்குதல் எதிரொலி – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

டொரான்டோ, ஜம்மு – காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22-ம் தேதி பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு … Read more

திருமண ஆசைகாட்டி இளம்பெண் பலமுறை பாலியல் பலாத்காரம் – ஐ.டி. ஊழியர் கைது

மும்பை, மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் காவல்துறையினரிடம் அளித்த புகார் மனுவில், பிவாண்டி மாவட்டத்தை சேர்ந்த ஐ.டி. ஊழியர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ந்தேதி முதல் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். அந்த நபர் முதலில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசைகாட்டியதால் அவரது பேச்சுக்கு இணங்கியதாகவும், ஆனால் அவர் தனது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்துக் … Read more