சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கேட்டி மெக்னாலி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி, சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வருகிறது.. அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் நூற்றாண்டு கால பழமைவாய்ந்த இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் பங்கேற்றுள்ளார்கள். இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கேட்டி மெக்னாலி – ஆஸ்திரேலியாவின் மேடிசன் இங்கிலிஸ் உடன் மோதினார். இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய கேட்டி மெக்னாலி 6-2, … Read more

நிலவை முதன்முதலில் சுற்றி வந்து வரலாறு படைத்த விண்வெளி வீரர் ஜிம் லவெல் காலமானார்

நியூயார்க், நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர்களில் ஒருவரான, ஸ்மிலின் ஜிம் லவெல் (வயது 97) காலமானார். நாசா விண்வெளி மையத்தின் மூத்த விண்வெளி வீரரான அவர், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியில் வீட்டில் இருந்தபோது காலமானார். இதனை நாசா நிர்வாகி மற்றும் போக்குவரத்து செயலாளரான சீன் டப்பி உறுதி செய்துள்ளார். 1968-ம் ஆண்டு விண்வெளி பயணம் மேற்கொண்ட அப்பல்லோ 8 விண்கல பயணத்தில், ஜிம் தலைமையில் நாசா வீரர்கள் பிராங்க் போர்மன் … Read more

வலைத்தளங்களில் ‘கிளுகிளு’ப்பாக பேசிய அழகிகள்.. ரூ.9 கோடியை பறிகொடுத்த 80 வயது முதியவர்

மும்பை, மும்பையை சேர்ந்த 80 வயது முதியவர் தனியாக வசித்து வருகிறார். அவரது மகன் வெளிநாட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார். சமீபத்தில் முதியவர் மகனை தொடர்பு கொண்டு ரூ.5 லட்சம் பணம் கேட்டார். தந்தை வங்கிக்கணக்கில் ரூ.9 கோடி இருந்தநிலையில் தன்னிடம் ஏன் பணம் கேட்கிறார் என்ற சந்தேகம் மகனுக்கு ஏற்பட்டது. எனவே அவர் தந்தையின் வங்கிக்கணக்கு விவரங்களை ஆய்வு செய்தார். அப்போது தந்தை ரூ.8.75 கோடிக்கு மேல் பணத்தை பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பி இருப்பதை கண்டு … Read more

ஆசிய கோப்பை கால்பந்து : இந்தியா வெற்றி

நைபியிடவ், மகளிருக்கான (20 வயதுக்குட்பட்ட) ஆசிய கோப்பை (தாய்லாந்து), உலக கோப்பை (போலந்து) கால்பந்து தொடர்கள் அடுத்த ஆண்டு நடக்க உள்ளன. இதற்கான தகுதிச்சுற்று மியான்மரில் நடக்கிறது. மொத்தம் 33 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய மகளிர் அணி ‘டி’ பிரிவில், மியான்மர், இந்தோனேஷியா, துர்க்மெனிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது. இதில், இந்தியா-இந்தோனேஷியா மோதிய முதல் போட்டி ‘டிரா’ (0-0) ஆனது. நேற்று தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி, துர்க்மெனிஸ்தானை சந்தித்தது. போட்டியின் 7வது நிமிடத்தில் … Read more

வீட்டின் வாடகையை உயர்த்தியதாக குற்றச்சாட்டு; இங்கிலாந்தின் வீடற்றோர் நலத்துறை மந்திரி ராஜினாமா

லண்டன், இங்கிலாந்தின் வீடற்றோர் நலத்துறை மந்திரி ருஷானாரா அலிக்கு தலைநகர் லண்டனில் சொந்த வீடு ஒன்று உள்ளது. இவர் அங்கு குடியிருந்த குடும்பத்தை காலி செய்து விட்டு தனது வீட்டின் வாடகையை சுமார் ரூ.80 ஆயிரம் உயர்த்தி வேறொருவருக்கு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவரது இந்த செயலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து ருஷானாரா அலி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தொழிலாளர் … Read more

தேசிய தூய்மை விருதுகள்: விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு முதல் இடம்

விசாகப்பட்டினம், நாட்டில் தூய்மை இந்தியா திட்டம் பரவலாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்வச் பாரத் என்ற பெயரில், பெரிய அளவில் நாடு முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஸ்வச்தா கி பாகிதரி எனப்படும் தூய்மை பணியில் பங்கெடுத்தல் மற்றும் சம்பூர்ண ஸ்வச்தா எனப்படும் முழு அளவிலான தூய்மை ஆகிய திட்ட தொடக்கத்தின் கீழ் துறைமுகங்களில் தூய்மை பணி நடந்து வருகிறது. இந்த சூழலில், மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் சார்பில் … Read more

மகளிர் டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்ற அயர்லாந்து

டப்ளின், பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளும் பெல்பாஸ்ட்டில் நடைபெற உள்ளன. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அயர்லாந்து 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி … Read more

இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது- அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த 25 சதவீத வரி, கடந்த 7-ந் தேதி அமலுக்கு வந்தது. அத்துடன், டிரம்ப் மேலும் 25 சதவீத வரி விதித்து, வரியை 50 சதவீதமாக உயர்த்தினார். இந்தியா-அமெரிக்கா இடையே ஏற்கனவே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது. 4 சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க குழு இம்மாதம் 25-ந் தேதி இந்தியா வருவதாக இருந்தது.இந்நிலையில், வெள்ளை … Read more

மக்களவையில் மணிப்பூர் ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி, பீகார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகிறது. இந்த பிரச்சினையை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இது நேற்றும் நீடித்தது. காலையில் மக்களவை தொடங்கியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்காளர் பட்டியல் பிரச்சினையை முன்வைத்து கோஷமிட்டனர். ஆனால் எதிர்க்கட்சிகள் அவையை நடத்த ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்ட சபாநாயகர் ஓம் பிர்லா, ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான கேள்விகளை … Read more

ஆசிய கோப்பை ஆக்கி: பாகிஸ்தான் அணி விலகல்

சென்னை, 12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் நகரில் வரும் 29-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் தென் கொரியா, முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா, ஜப்பான், மலேசியா, ஓமன், சீன தைபே ஆகிய 8 அணிகள் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மற்றும் அதனைத்தொடர்ந்து ‘ஆபரேஷன் … Read more