மது வாங்க ரூ. 10 தராததால் முதியவரை குத்திக்கொன்ற சிறுவன் – அதிர்ச்சி சம்பவம்

அமராவதி, ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்த முதியவர் டாடாஜி (வயது 50). இவர் இன்று அப்பகுதியில் உள்ள மதுக்கடை அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் வந்த 17 வயது சிறுவன் மது வாங்க ரூ. 10 தருமாறு டாடாஜியிடம் கேட்டுள்ளான். சிறுவன் கேட்ட ரூ. 10 கொடுக்க டாடாஜி மறுத்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் போதையில் இருந்த சிறுவன் தான் வைத்திருந்த கத்தியால் டாடாஜியை சரமாரியாக குத்தியுள்ளான். இந்த … Read more

ஜூனியர் ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி

துபாய், 19 வயதுக்குட்பட்டோருக்கான (ஜூனியர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் இந்த தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. அதன்படி நடைபெற்ற ஒரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகள் விளையாடின. இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய இந்த ஆட்டம் மழை காரணமாக மிகவும் தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால் இந்த … Read more

அணு ஆயுதங்கள் வைத்திருக்க மாட்டோம் என்ற கொள்கையில் மாற்றம் இல்லை – ஜப்பான் திட்டவட்டம்

டோக்கியோ, ஜப்பானில் அண்மையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு கருதி அணு ஆயுதங்களை வாங்க ஜப்பான் அரசு முன்வர வேண்டும் என மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பரிந்துரை செய்தார். ஆனால் அந்த பரிந்துரையை ஏற்க ஜப்பான் பிரதமர் சனா தகைச்சி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். அணு ஆயுதங்களை ஒருபோதும் வைத்திருக்க மாட்டோம் என கடந்த பல தசாப்தங்களாக ஜப்பான் அரசு கொண்டிருக்கும் நிலைப்பாடு தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜப்பானை பொறுத்தவரை சீனா, … Read more

பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது வாகனம் மோதி போலீஸ்காரர் பலி

மும்பை, மராட்டிய மாநிலம் அகில்யாநகர் மாவட்டம் கார்ஜத் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் சுதம் ராஜ்குமார் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ராஜ்குமார் நேற்று இரவு ரோஷின் பகுதியில் உள்ள சாலையில் சக போலீசாருடன் சேர்ந்து பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, சாலையில் வேகமாக வந்த வாகனம் ராஜ்குமார் மீது மோதிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து வேகமாக சென்றுள்ளது. வாகனம் மோதியதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜ்குமார் மீது … Read more

கடைசி டி20 போட்டி: இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

ஆமதாபாத், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கட்டாக், தர்மசாலா ஆட்டங்களில் இந்தியாவும், சண்டிகாரில் நடந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. லக்னோவில் நடக்க இருந்த 4-வது 20 ஓவர் போட்டி கடுமையான பனிமூட்டத்தால் ‘டாஸ்’ கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் … Read more

உக்ரைனுக்கு 90 பில்லியன் யூரோ நிதியுதவி – ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

பிரசல்ஸ், ரஷியா உடனான போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலதன சந்தையில் இருந்து 90 பில்லியன் யூரோ நிதி திரட்டி, அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைனுக்கு நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லெயன் தெரிவித்துள்ளார். அதே சமயம் ரஷியா போர் இழப்பீடுகளை தரும் … Read more

சத்தீஷ்கார்: யானை தாக்கி இளைஞர் பலி

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் கர்பா மாவட்டம் கவுபரா கிராமத்தை சேர்ந்த இளைஞர் மகேந்திர சிங் (வயது 35). இவர் இன்று காலை தனது வீட்டிற்கு வெளியே தீ மூட்டி அதன் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த காட்டு யானை மகேந்திர சிங்கை தாக்கியது. இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், வனத்துறையினர் விரைந்து சென்று மகேந்திர சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டி: இந்திய அணியில் 3 மாற்றங்கள்

ஆமதாபாத், இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி ஆமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் மற்றும் காயத்தால் அவதிப்படும் சுப்மன் கில் ஆகியோருக்கு … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை, வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு

துபாய், மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஐக்கிய அரசு அமீரகம். இந்நாட்டின் துபாய், அபுதாபியில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. கனமழை காரணமாக துபாய், அபுதாபியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இன்று காலை வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அதேபோல், கனமழையால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. சில விமானங்கள் கால தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். 1 More update தினத்தந்தி Related Tags : United Arab Emirates  … Read more

ரியல் எஸ்டேட் ஏஜென்ட் கொலை: தலைமறைவாக இருந்த தம்பதி 16 ஆண்டுகளுக்குப்பின் கைது

மும்பை, மராட்டிய மாநிலம் மும்பை மாவட்டம் கிழக்கு நலசொபுரா பகுதியில் கடந்த ஏப்ரல் 2009ம் ஆண்டு ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஒருவர் கொல்லப்பட்டார். பண விவகாரத்தில் நடந்த இந்த கொலையில் தர்மேந்திர ராமசங்கர் (வயது 54), அவரது மனைவி சோனு (வயது 50) உள்பட 4 பேருக்கு தொடர்பு இருந்தது. கொலையாளிகள் 4 பேரும் தலைமறைவான நிலையில் அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கில் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த … Read more