ஆசிய கோப்பை:விடுபட்ட வீரர்களை வைத்து 16 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா

மும்பை, 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு … Read more

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: ரணில் விக்ரமசிங்கே கைதுக்கு ராஜபக்சே கண்டனம்

கொழும்பு, அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் இலங்கையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவர்கள் பரிந்துரைத்ததையடுத்து அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரமசிங்கவை சிறைச்சாலை மருத்துவமனையில் சென்று சந்தித்து … Read more

நான் நக்சலைட்டு ஆதரவாளரா..? – துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி பரபரப்பு பேட்டி

புதுடெல்லி, துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக களமிறக்கி உள்ளன. இந்த நிலையில் சுதர்சன் ரெட்டி, நக்சலைட்டுகளை ஆதரிப்பவர் என உள்துறை மந்திரி அமித்ஷா பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். கேரளாவின் கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ‘சுதர்சன் ரெட்டி நச்சல் பயங்கரவாதத்துக்கு உதவியவர். சல்வா ஜுடும் தீர்ப்பை வழங்கினார். அந்த தீர்ப்பு வழங்கப்படாவிட்டால், நக்சல் பயங்கரவாதம் 2020-ம் ஆண்டே முடிவுக்கு வந்திருக்கும். நக்சல் சித்தந்தத்தால் … Read more

கடைசி ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

மெக்காய், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கெய்ன்சில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 98 ரன் வித்தியாசத்திலும், மெக்காயில் நடந்த 2-வது ஆட்டத்தில் 84 ரன் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெக்காய் நகரில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற தென் … Read more

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி வங்காளதேசம் பயணம்

டாக்கா, வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு அந்நாட்டில் போராட்டம் வெடித்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்தது. அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். வங்காளதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் பதவியேற்றார். அவர் ஓராண்டாக வங்காளதேசத்தின் தலைவராக செயல்பட்டு வரும் நிலையில் அந்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தர் அரசு முறை பயணமாக இன்று … Read more

ஜார்கண்ட்: கனமழைக்கு 5 பேர் பலி; ஒருவர் மாயம்

ராஞ்சி, ஜார்கண்டில் செராய்கேளா-கர்சவான் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதில், பல்வேறு இடங்களில் குடியிருப்புகள், வீடுகள் மற்றும் கட்டிடங்களை சுற்றி வெள்ளநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தண்டு கிராமத்தில் ராஜ்நகர் பகுதியில், சந்தோஷ் லோகர் என்பவர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் உள்பட சிலர் வந்துள்ளனர். அப்போது வீடு மழையால் சேதமடைந்து திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 8 பேர் காயமடைந்தனர். இதேபோன்று இதே மாவட்டத்தில் வீட்டு சுவர் ஒன்று … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: பவுமா விளையாடாதது ஏன்..?

மெக்காய், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் 84 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் … Read more

அமெரிக்கா: சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கி 5 பேர் பலி; இந்தியர்கள் உள்பட 40 பேர் காயம்

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் ஒன்று விபத்தில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்தியர்கள் உள்பட 54 பேர் நையாகரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாவுக்காக சென்றுள்ளனர். அவர்கள் சுற்றுலா கொண்டாட்டங்களை முடித்து விட்டு நியூயார்க் நகருக்கு பஸ்சில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. நியூயார்க்கின் பப்பல்லோ நகருக்கு 40 கி.மீ. கிழக்கே பெம்புரோக் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. இதனை … Read more

மும்பையில் சதுர்த்தி விழா: விநாயகர் சிலை ரூ.474 கோடிக்கு காப்பீடு

மும்பை, மும்பையில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.இந்த விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று நகரமே களைகட்டும். மக்கள் மும்பை முழுவதும் உள்ள பிரபலமான மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகரை தரிசிப்பார்கள்.குறிப்பாக மும்பை லால்பாக் ராஜா, கிங்சர்க்கிள் ஜி.எஸ்.பி., செம்பூர் சையாத்ரி விநாயகரை லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வார்கள். இதேபோல எல்லா வீடுகளிலும் பொதுமக்கள் விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள். மும்பையில் வருகிற … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் மறுக்கப்பட்டது நியாயமா..? – தினேஷ் கார்த்திக் கேள்வி

மும்பை, 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு … Read more