அமெரிக்காவில் வசிக்கும் 5.5 கோடி பேரின் விசாக்கள் மறுபரிசீலனை.. இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்படுமா..?
வாஷிங்டன், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கானோர், அமெரிக்காவில் பணி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களை பெற்று அங்கு வசிக்கிறார்கள். இதனிடையே அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது. எனவே சட்டவிரோதமாக குடியேறிவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். அதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் உள்பட ஏராளமானோர், அங்கிருந்து நாடுகடத்தப்பட்டனர். இந்தநிலையில் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடுகளை சேர்ந்த 5.5 கோடி பேரின் விசாக்களை மறுபரிசீலனை செய்யப்படும் என்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்தது. … Read more